ஸ்கூடாய் இந்தியர்கள் ஏற்பாட்டில் 'தமிழர் திருநாள் விழா 2025'

Skudai Indians organise 'Tamilar Thirunaal Vizha 2025'

ஸ்கூடாய் இந்தியர்கள் ஏற்பாட்டில்   'தமிழர் திருநாள் விழா 2025'
ஸ்கூடாய் இந்தியர்கள் ஏற்பாட்டில்   'தமிழர் திருநாள் விழா 2025'

Date ;16 April 2025 News By: Rm Chandran 

எதிர் வரும் 26-6-2025 ஆம் நாள், Dewan Taman  Raya Universiti'யில் காலை 8: 30 மணி முதல் 12: 30  மணி வரை முதல் அங்கம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் மற்றும் மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் வட்டாரத்தலைவர்  க.சேகரன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தமிழர் திரு நாள் பற்றிய  கட்டுரை,கவிதை, பேச்சுப் போட்டி, ஆண்களுக்கு வேட்டி அழகு ராஜா,பெண்களுக்கு சேலை அழகு ராணி, ரங்கோலி கோலம், தோரணம் பின்னுதல் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரையும் போட்டி ஆகிய அங்கங்களும் நடைபெறவுள்ளதாக சேகரன் கூறினார்.


மாலை 5 மணி தொடக்கம் 6: 30 மணி வரை  இந்தியர்களின் பாரம்பரிய கலாச்சார  சம்பந்தமான அங்கங்கள் நடைபெறுவதை அடுத்து இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் அதனை அடுத்து பரிசு வழங்கும் நிகழ்வும் நடைபெறுமென
க. சேகரன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக ஜொகூர் மாநில மஇகா தலைவர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு ரவின் குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்குவதுடன் நிகழ்வை நிறைவு செய்து வைப்பார்.

ஆகவே,  சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், பாலர் பள்ளி, ஆரம்பத் தமிழ்ப்பள்ளி,இடைநிலைப்பள்ளி மாணவர்கள் சுற்று வட்டார பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும்  மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய்  வட்டாரத் தலைவருமான சேகரன் கன்னியப்பன் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களை பெற க.சேகரன் 012-7083252 கைபேசி எண்ணில் அழைத்து விளக்கம் பெறவும்.