2018 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது?

0
193

2018 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது?

  • 10 ஜூலை 2018
பெல்ஜியம்படத்தின் காப்புரிமைKEVIN C. COX/GETTY IMAGES

இதில் வெற்றிபெறும் அணி, புதன்கிழமை நடைபெறும் இங்கிலாந்து, குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியோடு இறுதி ஆட்டத்தில் மோதும்.

அடுத்த ஞாயிற்றுக்கிமை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்கின்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க போட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு நாளை புதன்கிழமை நடைபெறும் போட்டியை காண கடைசி நேரத்தில் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.

புதன்கிழமை நடைபெறும் அரையிறுதி போட்டியில் வென்று உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் முதல்முறையாக நுழைந்துவிட வேண்டும் என்று குரோஷியா நம்பிக்கையோடு உள்ளது.

பிரான்ஸ் கால்பந்து அணியினர்.படத்தின் காப்புரிமைPAUL GILHAM/GETTY IMAGES

இங்கிலாந்து அணியினரோ இறுதிப்போட்டியில் நுழைவதற்கு 52 ஆண்டுகள் காத்திருந்து வருவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த அரையிறுதியில் விளையாடவுள்ளனர்.

புதன்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்து குரோஷியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 8வது ஆட்டமாக இருக்கும்.

இதற்கு முன்னால் போட்டியிட்டுள்ள 7 ஆட்டங்களில் இங்கிலாந்து 4 முறையும், குரோஷியா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிவடைந்தது.

Your Comments