தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கை உறுதி கொழும்பு
Sri Lanka vows to hand over lands to Tamils

Date 04 Feb 2025 News By :Jayarathan
''இலங்கையின் வடக்கு மாகாணத்தில், ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்கள் முழுதுமாக விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்,'' என, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே உறுதி அளித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்து வந்த போரின் போது, 1980களில் துவங்கி தமிழர்களின் நிலங்களை அந்நாட்டு அரசு கைப்பற்றி, அதை ராணுவ பயன்பாட்டுக்கு அளித்தது.
போர் முடிந்த பின், 2015 முதல் இந்த நிலங்கள் படிப்படியாக மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக பல முக்கிய முடிவுகளை அவர் அறிவித்து வருகிறார்.
இதற்கிடையே, அதிபராக பதவி ஏற்ற பின் வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு நேற்று அதிபர் திசநாயகே முதல்முறையாக சென்றார். அப்போது அவர் கூறுகையில், ''ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருக்கும் தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்,'' என்றார்.