ஜூன் 26ஆம் தேதி தொடங்கி 80 லட்சம் பேர் ரஹ்மா உதவித் தொகையைப் பெறுவர்
Starting June 26, 80 lakh people will receive the Rahma scholarship.
ஜூன் 22- குறைந்த வருமானம் பெறும் பி40 குழுவைச் சேர்ந்த
எண்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகையை கட்டங் கட்டமாகப் பெறுவர்
என்று நிதியமைச்சு கூறியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்ததைப்
போல் இந்த உதவித் தொகை பகிர்ந்தளிப்பு விரைவுபடுத்தப்பட்டு
ஹஜி பெருநாளுக்கு முன்னதாக வழங்கப்படும் என்று அது
தெரிவித்தது.
இந்த ரஹ்மா உதவித் திட்டத்திற்காக 200 கோடி வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இந்நிதியைப் பகிர்ந்தளிக்கும் பணி வரும் ஜூலை
மாதம் 5ஆம் தேதிக்குள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு 100 வெள்ளி முதல் 1,300
வெள்ளி வரை இந்த ரஹ்மா நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள் எதிர்வரும் ஜூன் 26ஆம் தேதி பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கிகளில் ரொக்கத் தொகையைப் பெற்றக் கொள்ளலாம் என்று நிதியமைச்சின் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ரஹ்மா உதவித் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட
நிதியளிப்பு கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில்
மேற்கொள்ளப்பட்டது. இந்த மூன்று கட்ட ரஹ்மா உதவி நிதித்
திட்டத்திற்கு 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி
வெள்ளி ஒதுக்கப்பட்டது.என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.