மாநிலத் தேர்தல்- சிலாங்கூரில் கூடுதலாக 2,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
State elections: 2,000 more policemen to be deployed in Selangor
08 July 2023
மாநிலத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூரில் கூடுதலாக 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசைன் தெரிவித்தார்.
மாநில காவல்துறையில் 14,000 உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர்களில் 10,000 பேர் மாநிலத் தேர்தலுக்காகப் பயன் படுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
எஞ்சியுள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் வழக்கமான முக்கிய கடமைகளை தொடர்ந்து செய்வார்கள் என்று நேற்று இங்கு நடைபெற்ற மாநில தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சிலாங்கூரில் 70 பிரச்சனைக்குரிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) மற்றும் சிறப்புப் பிரிவு
அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் ரஸாருடீன் தெரிவித்தார்