மலேசியாவை அன்வாரால் மட்டுமே சீர்ப்படுத்த முடியும்

0
143

மலேசியாவை அன்வாரால் மட்டுமே சீர்ப்படுத்த முடியும்!…

நடந்து முடிந்த 14-வது பொதுத்தேர்தலுக்குப்பிறகு, மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தின் நிலைக்கு பெரும் மிரட்டல் ஏற்பட்டிருப்பதால், அந்நிலையைச் சீர்ப்படுத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவரால் மட்டுமே முடியும் என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்திருக்கிறார்.
நாட்டுக்கு அன்வார் முக்கியமாகத் தேவைப்படுகிறார். வலுவிழந்த ஒரு கட்சி மற்றவர்களின் ஆதரவை மிகவும் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.
1980-ஆம் ஆண்டுகளில் அன்வார் அரசியலில் நுழைந்தது முதல் அவர் தொடர்ச்சியாக மலாய் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களில் மிகவும் முனைப்புடன் செயலாற்றி வந்தவர்.
டாக்டர் மகாதீரோடு மோதத் தொடங்கியதால், அன்வாரை டாக்டர் மகாதீர் அம்னோ மற்றும் அரசாங்கப் பதவிகளிலிருந்து தூக்கி எறிந்தார்.
இப்போது எழுந்துள்ள யு.ஈ.சி கல்விச் சான்றிதழ், ஓரினக் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, மலாய்க்காரர்களுக்கும், இஸ்லாமிய சமயத்துக்கும் பெரும் மிரட்டலாக விளங்குகிறது. இதைத் தொடரவிட்டால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, மலேசியாவைக் காப்பாற்ற அன்வார் உதவ வேண்டும் என அன்வார் மூசா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்!

Your Comments