Categories
Featured Johor Bahru பொக்கிஷம் பொது செய்திகள்

நான் எப்போதோ இறந்திருப்பேன் – மகாதீர்

நான் எப்போதோ இறந்திருப்பேன் மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை.11

உலகின் வயதான பிரதமராகக் கருதப்படும் துன் மகாதீருக்கு நேற்று 93 வயது பூர்த்தியாகிய வேளை, தமது 64-வது வயதிலேயே தாம் இறந்திருக்க வேண்டியவர் என்றும், மருத்துவத் துறையின் அறிவியல் வளர்ச்சியால் மட்டுமே தாம் இதுவரை உயிரோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

1989-ஆம் ஆண்டு, முதல் முதலில் தனக்கு மாரடைப்பு வந்ததாகவும், அப்போது இருதய சிகிச்சை நிபுணர் மட்டும் இல்லை என்றால் அப்போதே தான் இறந்திருக்கக் கூடும் என்றார் அவர். “இருதயத்தை பிளந்தாலே, நுரையீரல் பாதிக்கப்படும். ஆனால், டாக்டர் யாஹ்யா அவாங் என்ற வல்லுநரால் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலதான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என அவர் அஸ்ட்ரோ அவானியின் நிகழ்ச்சியொன்றில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு 2006-ஆம் ஆண்டில், துன் மகாதீருக்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொல்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எல்லா அறுவை சிகிச்சைகளும் ஐ.ஜே.என்னில்தான் மேற்கொள்ளப்பட்டதாக மகாதீர் தெரிவித்தார்.

இதனிடையே, மகாதீர் கடைப்பிடித்து வந்த உணவு முறையும்தான் அவருடைய ஆரோக்கியத்திற்கு காரணமென அவருடைய மருத்துவர் யாஹ்யா சொல்லி இருக்கிறார். இதற்கு காரணமே, அவருடைய தாயார் என மகாதீர் சொன்னார்.

Categories
Featured Johor Bahru மாநிலம்

நஜிப்பைச் சந்தித்தார் சரவணன்

நஜிப்பைச் சந்தித்தார் சரவணன

கோலாலம்பூர் – மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் மரியாதை நிமித்தம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தனது சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கும் சரவணன் “என் இனத்திற்கும் மொழிக்கும் உன்னைவிட அதிகமாய் கொடுத்தவர் யாருமில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

Categories
Featured Johor Bahru நாடாளுமன்றம் மாநிலம்

மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் கொலை வழக்கு தொடங்க வேண்டும் …..ராம் கர்பால் சிங்

மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் கொலை வழக்கு தொடங்க வேண்டும்…..ராம் கர்பால் சிங்

ஜோர்ஜ் டவுன், மே.28- மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் கொலை வழக்கு குறித்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று புதிய அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் காவல் துறைக்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

கொலைச் செய்யப்பட்ட அல்தான் துயா வழக்கில் பல சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால், அவ்வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று புக்கிட் கெலுகூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் அறிவுறுத்தினார்.

“அந்த வழக்கை மீண்டும் தொடர்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அது குறித்து புதிய புகார்கள் ஏதும் கொடுக்கப் படவில்லை என்றும் ஃபுஸி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அது தொடர்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், இவ்வழக்கு மீண்டும் தொடங்கப் பட வேண்டும்” என்று ராம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு, அல்தான் துயா துப்பாக்கியால் சுடப் பட்டு, அதன் பின்னர் அவரின் உடல், ஷா ஆலாமிலுள்ள காட்டுப் பகுதியில் வெடிகுண்டு கொண்டு வெடிக்கப் பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

அந்தக் கொலை வழக்கில் குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்ட இரு போலீஸ்காரர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்விரு போலீசாருக்கும் உதவினார் என்று சந்தேகிக்கப் பட்ட அப்துல் ரசாக் பகிண்டாவை நீதிமன்றம் விடுவித்தது.

இவர், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் மிக நெருக்கமான ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்ததைத் தொடர்ந்து, அல்தான் துயா கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று அந்த மாடல் அழகியின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அந்த வழக்கு மீண்டும் தொடங்கப் படுவதை ஃபுஸி ஹரூண் உறுதிப் படுத்த வேண்டும் என்று ராம் கர்ப்பால் அறிவுறுத்தினார்.

Categories
Featured Johor Bahru மாநிலம்

அயராத மக்கள் சேவையே சுப்ராவின் வெற்றி ரகசியம்….

அயராத மக்கள் சேவையே சுப்ராவின் வெற்றி ரகசியம்….


 2004 பொதுத் தேர்தல் முதல் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதி மஇகா-வின் இரும்புக் கோட்டையாக விளங்கி வருகிறது.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் “சூடான” தொகுதியாக சிகாமாட் மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இம்முறை மும்முனை போட்டியில் சிகாமாட் கலகலத்துப் போயிருக்கிறது. ஆனாலும், 2008 பொதுத் தேர்தலில் இருந்து இத்தொகுதியை தம் வசம் வைத்துள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்த எதிர்ப்பை தவிடு பொடியாக்கி வெற்றி பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

அதற்கு அடிப்படை காரணமே இந்த எளிமையான டாக்டரின் அயராத மக்கள் சேவைதான். இவரது இந்த உழைப்பு தான் அத்தொகுதியின் நிரந்தர மக்கள் பிரதிநிதியாக இவரை அடையாளப்படுத்தியிருக்கிறது.

சிகாமாட் நாடாளுமன்ற தொகுதி மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து தம்முடைய மக்கள் சேவையில் இருந்து டாக்டர் சுப்ரமணியம் μய்வு எடுத்துக் கொண்டதே இல்லை.
டாக்டர் சுப்ரமணியம் தமது தொகுதி மக்களின் நாடி பிடித்து தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வருகிறார். தொகுதி மக்களோ டாக்டருக்கு தங்களது இதய சிம்மாசனத்தில் இடம் கொடுத்திருக்கின்றனர்.

கடந்த 3 பொதுத் தேர்தல்களிலும் டாக்டர் சுப்ராவை வெற்றி கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை தொகுதி மக்கள் தங்களது பொன்னான வாக்குகளால் முறியடித்துள்ளனர்.

ஒரு சிறு நகரமான சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் 53, 747 வாக்காளர்கள் உள்ளனர். ஜெமெந்தா, கிம்மாஸ் பாரு, பூலோ காசாப், பத்து அன்னாம் ஆகியவை இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளாகும்.

மிரட்டலாக இருந்த இப்பகுதி மக்களின் ஆதரவு இந்த 14ஆவது பொதுத் தேர்தலில் டாக்டர் சுப்ராவுக்கு சாதமாக 80 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளது.

மக்களுக்கு முன்னுரிமை என்பதை தாரக மந்திரமாகக் கொண்டுள்ள டாக்டர் சுப்ரா, தம்முடைய அர்ப்பணிப்புகளால் தொகுதி மக்களின் இதயங்களில் μர் உயர்ந்த மனிதராக இடம்பெற்றுள்ளார்.
இம்முறை டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா, மும்முனை போட்டியை எதிர்கொண்டுள்ளார். ஒரு வணிகரான ஆர்.சந்தாரா குமார் என்ற எட்மண்ட் சந்தாரா குமார் (பிகேஆர்), கைருல் ·பைஸி கமில் (பாஸ்) ஆகிய இருவரும் டாக்டர் சுப்ராவை எதிர்த்து களமிறங்கியிருக்கின்றனர்.

எளிதில் அணுகிடும் பண்பும் மலர்ந்த முகமும் சிகாமாட் தொகுதி வாக்காளர்கள் டாக்டர் சுப்ராவை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கு மற்றுமொடு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இம்முறை டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் 2018 – 2023 சிகாமாட் பொருளாதார மேம்பாட்டு செயல் திட்டத்தை (செடாப்) அறிமுகப்படுத்தியிருப்பது அவரது வெற்றிக்கு வலு சேர்த்திருக்கிறது.

இந்த 5 ஆண்டுகள் உன்னத திட்டமானது இந்தத் தொகுதியின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வளப்படுத்துவதோடு புதிய எழுச்சியோடு இத்தொகுதியையே முழுமையாக உருமாற்றும் என்பது திண்ணம்.

இத்திட்டத்தில் பல கோடி ரிங்கிட் மதிப்புள்ள கிழக்கு கரை பொருளாதார மண்டலத்தையும் (இசிஇஆர்) ஒருக் கிணைக்கும். இது கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூரில் உள்ள மெர்சிங் ஆகியவற்றையும் இணைக்கும்.

இப்பெருந்திட்டமும் தொகுதி மக்களின் அமோக ஆதரவும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் என்பது உறுதி!

Categories
Featured Johor Bahru மாநிலம்

இந்திய சமூக இயக்கங்களுக்கும்,தமிழ்ப்பள்ளிகளுக்கும் மானியங்கள் வழங்கப்படும்…   டத்தோ வித்தியனந்தன்

09 ஜனவரி 2018

சுபாசினி பெருமாள்

இந்திய சமூக இயக்கங்களுக்கும்,தமிழ்ப்பள்ளிகளுக்கும் மானியங்கள் வழங்கப்படும்…   டத்தோ வித்தியனந்தன்

இஸ்கண்டாரில் அமைந்திருக்கும் மாநில அரசின் ஒற்றுமை, மனிதவளத்துறை அலுவலகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்தியனந்தன் இந்திய சமூக இயக்கங்களுக்கும்,தமிழ்ப்பள்ளிகளுக்கும் மானியங்கள் வழங்கினார்.

ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத்திற்கு 20 ஆயிர ரிங்கிட்,மூவார் கல்வி சமூகநல ஆய்வு நிறுவணா 20 ஆயிர ரிங்கிட் மேலும் தங்காக் ,பெக்கோ, தாஜூல், டேசா செமர்லாங் ஆகிய தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா 10 ஆயிர ரிங்கிட் வழங்கப் பட்டது. உதவி நிதிக்கான காசோலைகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,இயக்கப் பொறுபாளர்கள் ஆர்.வித்யானந்தனிடம் பெற்றுக் கொண்டனர். ஆர்.வித்யான்னுக்கும் மாநில அரசுக்கும் மானியம் பெற்றவர்கள் சார்பில் ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலவர் பால சுப்பிரமணியம் நன்றி தெரிவித்துக்கொண்ட்டார்.

மாநில மந்திரி பெசார் இந்தியர்கள் மீது அதிக பற்றுள்ளவர். 2018 ஆம் ஆண்டு மாநில அரசின் தீர்மான்ங்களின் தமிழ்ப்பள்ளி களுக்கும் சமூக இயக்கங்களுக்கும் வழங்கி வரும் அரசு நிதி தொடர்ந்து வருவதோடு இந்திய இளைஞர்கள் தொழில்துறையில் முன்னேற்றம் காண பயிற்சித் திட்  டங்கள் வழங்குவதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஆர்.வித்யானந்தன் கூறினார்

Categories
Featured Johor Bahru நீதிமன்றம் மாநிலம்

போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

Wan Ahmad Najmuddin-crime-bk aman

ஜோகூர் பாரு – கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கைதுகளைத் தொடர்ந்து இந்தப் படுகொலை தொடர்பான மர்மங்கள் விலகும் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

ஆகக் கடைசியாக நேற்று 22 வயதுடைய நபர் ஒருவரைக் காவல் துறையினர் ஜோகூர் பாருவில் கைது செய்தனர். இவரோடு சேர்த்து 4 பெண்களையும், 16-க்கும் 26-க்கும் இடைப்பட்ட வயதுடைய 10 ஆண்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஜோகூர் பாரு தவிர்த்து சிங்கப்பூர், பினாங்கு ஆகிய இடங்களிலும் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் இந்தக் கொலைக்கான காரணம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான கடன் பாக்கி வசூலிப்பு விவகாரமாக இருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஆணையர் (கமிஷனர்) டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட் சம்பந்தப்பட்ட இரகசியக் குண்டர் கும்பல்கள் போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

முதல் கட்ட விசாரணைகளின் வழி, கொல்லப்பட்ட 40 வயதைத் தாண்டிய நபர் இரகசியக் கும்பல் நடவடிக்கையில் தீவிரமாக இயங்கி வந்தவர் என்பதும், இந்தக் கொலைக்கான பின்னணியில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான கடன் காரணமாக இருந்தது தெரிய வந்திருப்பதாகவும் வான் அகமட் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் காவல் துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் வருகை தரும் சிங்கப்பூரியர்களுக்கும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கும் ஜோகூர் பாரு இன்னும் பாதுகாப்பான நகராகத் திகழ்கிறது எனவும் வான் அகமட் உறுதியளித்துள்ளார்.

Categories
Featured Johor Bahru நீதிமன்றம் மாநிலம்

ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்!

ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்…..!

justiceகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் நடந்த கொலை தொடர்பில் 6 பேரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தம்பதி உட்பட 5 பேருக்கு தடுப்புக் காவல் விதிக்குமாறு காவல்துறை அளித்த விண்ணப்பத்தை ஏற்ற நீதிபதி நூர் ஆயிஷா அகமட், அவர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் விதித்தார்.

Categories
Featured Johor Bahru பொது செய்திகள் மாநிலம்

ஜோகூர் பெட்ரோல் நிலையத்தில் 30 வயது ஆடவர் கொடூரக் கொலை!….

ஜோகூர் பெட்ரோல்  நிலையத்தில் 30 வயது ஆடவர் கொடூரக் கொலை…..

சுபாசினி பெருமாள்

Crime-Pixஜோகூர் பாரு – நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பிளாங்கி என்ற இடத்தில் உள்ள எண்ணெய் நிரப்பும் மையம் (பெட்ரோல் பங்க்) ஒன்றில், பொதுமக்கள் முன்னிலையில் 30 வயது ஆடவர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

தனது காரின் சக்கரங்களில் காற்று நிரப்பிக் கொண்டிருந்த அவரை, பிஎம்டபிள்யூ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் செல்ல முயன்றனர்.

ஆனால் அவர் போராடித் தப்பிக்க முயற்சி செய்யவே, அவரைப் பலமுறை கத்தியால் குத்தியதோடு, சிறிய அளவிலான வெடிபொருள் ஒன்றையும் அவர் மீது வீசி வெடிக்கச் செய்து, காரை ஏற்றியும் கொலை செய்தனர்.

பொதுமக்கள் முன்னிலையில், நடந்த இக்கொலையை ஒருவர் தனது செல்பேசியில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.

இறந்த நபரின் காரில் இருந்த 20 வயதான அவரது காதலி, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டு கெஞ்சியிருக்கிறார்.

தற்போது இக்கொலைச் சம்பவம் குறித்து ஜோகூர் பாரு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இறந்தவரின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
Featured Johor Bahru மாநிலம் விளையாட்டு

டத்தோ கே.புருஷோத்தமன் சுழற்கிண்ண கால்பந்து..போட்டியில் உலுத்திராம் தோட்டத் தமிழ்ப் பள்ளி வென்றது.

டத்தோ கே.புருஷோத்தமன் சுழற்கிண்ண கால்பந்து போட்டியில் உலுத்திராம் தோட்டத் தமிழ்ப் பள்ளி வென்றது…..

.

பாசிர் கூடாங் மாவட்டத் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற டத்தோ கே.புருஷோத்தமன் சுழற்கிண்ண கால்பந்து போட்டியில் உலுத்திராம் தோட்ட தமிழ் பள்ளி முதல் இடத்தை வாகைச் சூடியது. இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இக்கால்பந்து போட்டியைச் சுங்கை பிறந்தோஸ் தோட்டப்பள்ளி ஏற்று நடத்தியது. பலமான போட்டிகளுக்கிடையே உலுத்திராம் தோட்டத் தமிழ்ப் பள்ளி முதல் இடத்தையும் ,சுங்கை பிறந்தோஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி இரண்டாவது இடத்தையும், ரிநி தோட்ட தமிழப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பெர்மாய் கெயா தோட்டத் தமிழ்ப் பள்ளி நான்காவது இடத்தையும் வென்றன .

இதனிடையே இப்போட்டி நிகழ்வுகளைப் பற்றி டத்தோ கே.புருஷோத்தமன் பேசுகையில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மட்டும் இன்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நாடு தழுவிய விளையாட்டில் வளர்ச்சி கண்டெழுகின்றது. மேலும் உலக அரங்கில் கால்பந்து விளையாட்டில் நாட்டிற்குப் பெருமை ஈட்டித் தருவதோடு இந்திய மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் இந்த முயற்சி முன்னேடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள்.

இப்போட்டி விளையாட்டினைச் சி்றப்பாக வழி நடத்திய ஆசிரியர் திரு பிரகாஷ்ராவ் அவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்கள்.

Categories
Featured Johor Bahru கல்வி மாநிலம்

ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தமிழ்ப்பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  டத்தோ  ஆர்.வித்தியாந்தன் 

ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தமிழ்ப்பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  டத்தோ  ஆர்.வித்தியாந்தன் 

சி.ராசமாணிக்கம்

 13 நவம்பர் , ஜோகூர்  பாரு

தமிழ்ப்பள்ளிகள் நமது சொத்து ,அந்த சொத்தை அழியவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு  சமுதாய இயக்கங்கள் ,கட்சிகள் ,ஆலய நிர்வாகிகளின் கடமை ,அதனால் நாம் ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட  தமிழ்ப்பள்ளிகளுக்கு தான்

கொடுக்கவேண்டும்  என்று நேற்று முன்தினம் தெப்ராவ் தமிழ்ப்பள்ளி பாலர் பள்ளியின் பட்ட மளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டஜோகூர் மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் ஆர்.வித்தியாந்தன் வேண்டுகோள்விடுத்தார் .            

எல்லா இயக்கங்களும் தலா  ஒரு தமிழ்ப்பள்ளியை தத்து எடுத்து

பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்  இனி தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனை இருக்காது , இன்னமும் பள்ளிக்கு செல்ல   பள்ளிப்பேருந்துக்கு

மாத கட்டணம் செலுத்தமுடியாமலும்,புதிய சீருடை இல்லை ,

சத்து உணவு இல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஆலயங்கள் வேண்டாம்  என்று சொல்லவில்லை அங்கே குவியும் நன்கொடைகளை கொஞ்சமாவது பள்ளிக்கு கொடுத்தால் தமிழ் வளரும் ,தமிழ்மாணவர்கள் படிப்பில் சிறந்து பட்டதாரிகளாக  வருவார்கள் என்று   ஆர் .வித்தியாந்தன் மேலும் கூறினார்
.

கடந்த 7 ஆண்டுகளாக குறைந்த வருமானத்தில் இயங்கி  வந்த   இந்த தனியார்  பாலர்ப்பள்ளி  அடுத்த ஆண்டில்  தெப்ராவ்   தோட்டத் தமிழ்ப்பள்ளி  புதிய கட்டத்திற்கு மாற்றலாகியவுடன் இந்த பாலர்  பள்ளி அரசாங்க பாலர்  பள்ளியாக மாறும்

பாலர் பள்ளி ஆசிரியர்கள் அரசாங்க ஊழியர்களாக இருப்பார்கள்  இதற்கு என்னுடன் ஒத்துழைத்த  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பாலமுரளிக்கும் செயலவையினருக்கும் நன்றியை தெரிவித்த தெப்ராவ்  தமிழ்ப்பள்ளியின் மேளார் வாரியத்தலைவர் டத்தோடாக்டர் புருசோத்தமன் இந்த பள்ளிக்கு ஆரம்ப காலத்தில் இருந்து எல்லா உதவிகளை வழங்கிய  ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்தியாந்தன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்
கொண்டுவெளியே   ஒரு சிலர் இந்த பாலர் பள்ளிக்கு அவர்கள்
தான் எல்லாம் செய்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்
அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று கொடை
நெஞ்சருமான   டத்தோ டாக்டர் புருசோத்தமன்  கூறினார் ,