Categories
Pahang நீதிமன்றம்

“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

கோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் மலேசியா ரிங்கிட் மதிப்பில் சுமார் 60 மில்லியனுக்கு ரோஸ்மா வாங்கிய நகைக்கான தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி வழக்கு தொடுத்திருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு நகைகள் எதனையும் தான் வாங்கவில்லை என ரோஸ்மா மறுத்திருக்கிறார்.

14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 59.831 மில்லியன்) நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது. இந்தத் தொகைக்கு மொத்தம் 44 நகைகளை குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் ரோஸ்மாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

“குளோபல் ராயல்டி டிரேடிங் ரோஸ்மாவுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கில் பட்டியலிட்டிருக்கும் நகைகள் எங்களின் கட்சிக்காரர் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு  பார்வையிடுவதற்காக அனுப்பப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த நகைகளில் எதனையும் அவர் வாங்கவில்லை. எனவே, திருடப்பட்ட பணத்தின் மூலமாக அந்த நகைகள் வாங்கப்பட்டன எனப் பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதோடு அவை அடிப்படையும் அற்றவை. கூடியவிரைவில் இதன் தொடர்பில் எங்களின் கட்சிக்காரரின் நற்பெயரையும் நலனையும் பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என ரோஸ்மாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டத்தோ கே.குமரேந்திரன் மற்றும் டத்தோ கீதன் ராம் தெரிவித்தனர்.

Categories
Featured Pahang நாடாளுமன்றம் மாநிலம்

மக்கள் வேட்பாளர் டத்தோ சிவராஜ்…

மக்கள் வேட்பாளர்
டத்தோ சிவராஜ்…

கேமரன் மலை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன், ஒரு சாதாரணமான, எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்.

தடுத்தர குடும்பம் என்றாலும் பிள்ளைகளின் படிப்பில் பேரம் பேசாத பெற்றோர் சந்திரன் – சந்திரா தங்களது மூத்தப் புதல்வர் சிவராஜை மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் படிக்க வைத்து இளங்கலை பட்டதாரியாக்கினர்.

சிறு பிராயம் முதலே இரக்கச் சிந்தை கொண்ட சிவராஜ், தன் கண் முன் யாராவது சிரமப்பட்டால் μடோடி உதவி செய்யும் மனப் பக்குவத்தை கொண்டவர். அந்த மனிதநேய பண்பு இன்றுவரை இவரிடம் நிறைந்துள்ளது. இவரது இந்த சிறந்த பண்பு நலன்கள் இவருக்கு அரசியலில் பதவி சிம்மாசனத்தை வழங்கியது. 2013 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையிலும் மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவராகவும், தேசிய முன்னணி இளைஞர் பிரிவு துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இளைஞர்களுக்காகவும், மலேசிய மக்களுக்காகவும் இவர் ஆற்றி வந்த சேவைகளின் அடிப்படையில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மஇகாவும் தேசிய முன்னணியும் வழங்கியது.

கடந்த μராண்டு காலமாக கேமரன் மலையிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கி தொகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் தேவைகளையும் அறிந்து கொள்வதற்கு மனமார சேவையாற்றி வருகிறார்.

ஒரு சாமானியனும் நாடாள முடியும் என்பதை உலகுக்கு காட்டும் வகையில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி உங்கள் பொன்னான வாக்குகளால் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.

கேமரன் மலை தொகுதியில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வெற்றியை முடிவு செய்யும் துருப்புச் சீட்டாக இருக்கின்றனர்.

டத்தோ சிவராஜ் கடந்த μராண்டு காலத்தில் தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், பொது இயக்கங்கள், தனிநபர்கள் என்று அனைத்து தரப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் தேவை அறிந்து சேவையாற்றக் கூடிய பெருங் குணத்தை கொண்ட டத்தோ சிவராஜுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்.

மே 9 ஆம் தேதி நடைபெறும் 14ஆவது பொதுத் தேர்தில் நீங்கள் டத்தோ சிவராஜை வெற்றி பெறச்செய்தால், நிச்சயம் உங்களது வாழ்க்கையும் பிரகாசமடையும்.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியும் புதிய உருமாற்றத்தை பெறும். இது வெற்று வாக்குறுதி அல்ல. சத்தியம் நிறைந்த உறுதி மொழி.

வாய்ப்புத் தாருங்கள் வளமான வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களது சரியான, விவேகமான தேர்வு டத்தோ சிவராஜ் ஆக இருக்கட்டும்.

Categories
English News Featured Pahang மாநிலம்

Belia Tani Outreach Program ….Dato Sivarraaajh Chandran

 

Belia Tani Outreach Program ….Dato Sivarraaajh Chandra

Atas usaha Penyelaras Parlimen Cameron Highlands Dato Sivarraaajh Chandran dan dengan kerjasama Kementerian Pertanian Malaysia, Belia Tani Outreach Program Peringkat Cameron Highlands telah berjaya dianjurkan pada hari ini di Hotel Copthorne. Seramai 300 orang peserta telah hadir dan didedahkan dengan informasi-informasi yang terkini dari pihak Kementerian Pertanian. Peserta juga diberi penjelasan mengenai permohonan geran dan lesen yang terdapat dibawah kementerian. Program susulan akan diadakan bagi mencapai objektif melahirkan lebih ramai belia Cameron Highlands dalam bidang pertanian.

Categories
Featured Pahang மாநிலம்

இந்திய இளைஞர்களுக்கான விவசாயப் பயிற்சித் திட்டம்!……டத்தோ சிவராஜ் சந்திரன் தலைமையில்

இந்திய இளைஞர்களுக்கான விவசாயப் பயிற்சித் திட்டம்!டத்தோ சிவராஜ் சந்திரன் தலைமையில்

 

கேமரன்மலை

கேமரன் மலை இளைஞர்களுக்காக இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன் தலைமையில் விவசாயப் பயிற்சித் திட்டம் வியாழக்கிழமை டிசம்பர் 14ஆம் தேதி கேமரன் மலை கொப்தன் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது. இதில் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு பலனடைய வேண்டுமென டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இந்த விவசாயத் திட்டம் கேமரன் மலை வாழ் இளைஞர்களுக்காக, இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். மலேசிய விவசாயத் துறையின் ஆதரவோடு இந்த பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

இந்த பயிற்சித் திட்டத்தில் விவசாயம் சார்ந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். குறிப்பாக உரம், பூச்சிக் கொல்லி, கடனுதவி, விவசாய உரிமம் குறித்த விளக்கங்களை விவசாயத் துறையின் அதிகாரிகள் வழங்கவிருக்கின்றார்கள்.

அன்றைய நாளில் தெக்குன் மலேசியாவின் கூடாரமும் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும். விவசாயத் திட்டத்திற்கான மானியங்களை பெறுவதற்கு அன்றைய நாளில் விவசாய துறை அலுவலகத்திலும் விண்ணப்பம் செய்யலாம்.

விவசாயத் துறையில் மேம்பட வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதோடு விவசாயத் துறையில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் குறித்தும் விளக்கம் கேட்கலாம் என சிவராஜ் சந்திரன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Categories
Featured Pahang அரசியல் சட்டமன்றம் மாநிலம்

இளைஞர் பிரிவினர் துடிப்புடன் புதிய வாக்காளர்களை அணுக வேண்டும்……டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்

இளைஞர் பிரிவினர் துடிப்புடன் புதிய வாக்காளர்களை அணுக வேண்டும்….டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்

 நாடு முழுவதுமுள்ள தேசிய முன்னணி மற்றும் அம்னோ இளைஞர் பிரிவினர் துடிப்புடன் புதிய வாக்காளர்களை அணுக வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வலியுறுத்தினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெறுவதற்கு அப்பிரிவினர் விவேகத்துடனும், துடிப்புடனும் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி உட்பட நாடு முழுவதுமுள்ள இளம் புதிய வாக்காளர்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றனர். எனவே, இளைஞர் பிரிவினர் அதற்கு ஏற்றவாறு தங்களின் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தினார்.

உதாரணத்திற்கு, பெக்கான் தொகுதியில் மட்டும் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்ட 23 ஆயிரம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வரும் 14ஆவது பொதுத் தேர்தலியே முதன் முறையாக வாக்களிக்கப் போகின்றனர். எனவே, தேசிய முன்னணி மற்றும் அம்னோ இளைஞர் பிரிவினர் அவர்களை அணுகும் முயற்சியில் இறங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவர்களை நேரில் சந்திப்பதோடு, அவர்களை முகநூல், டெலிகிராம், வாட்சாப் ஆகியவற்றின் வழியும் தொடர்புக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு அவர்களின் வீட்டில் சென்று அவர்களைச் சந்தித்து கைகுலுக்குவதோடு, அவர்கள் நன்றாக இருந்தாலும், சிரமத்தில் இருந்தாலும் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும் இளைஞர் பிரிவினர் களம் இறங்க வேண்டும் என்றார்.

நமது இளைஞர் பிரிவினர் விவேகத்துடன் செயல்பட வேண்டும். நள்ளிரவு வரை வேலை செய்யும் இளைஞர் படையினர் நமக்குத் தேவை என்றும் அவர் சொன்னார்.

நேற்று செமாராக் தேசிய சேவை பயிற்சி யைமத்தில் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி இளைஞர் பிரிவின் தேர்தல் எந்திரத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு சொன்னார்.

இளைஞர்களின் தேவைகளுக்கு தேசிய முன்னணி எப்போதும் செவிசாய்க்கும் என்ற பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஜிப், எதிர்க்கட்சி ஒன்று சட்டவிதியில் இல்லாத இளைஞர் அமைப்பு ஒன்றை உடன் சேர்த்துக் கொண்டு சட்டவிரோதமான முறையில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணி இளைஞர் பிரிவினர் உண்மையிலேயே இளைஞர்கள் ஆவார்கள். இளைஞர்களுக்கு எதிர்கட்சியினர் மீது நம்பிக்கையில்லை. காரணம் அவர்கள் இளைஞர் பிரிவினருக்கு பொய்யான தகவல்களையே காட்டி வருவதாக அர்மாடா இளைஞர் அமைப்பினர் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அவர்கள் அம்னோவைப்போல் செயல்பட வேண்டும் என்று சட்டவிதிகளைக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்களால் அதனை செயல்படுத்த முடியவில்லை. இறுதியில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்றார்.

அண்மையில் அர்மாடா இளைஞர் அமைப்பு பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் செயல்திட்டங்களில் பங்கெடுத்து வந்தது. ஆனால், அக்கட்சியின் சட்டவிதிகளில் அந்த இளைஞர் அமைப்பு சிறிதும் சேர்க்கப்படவில்லை.

மூன்று காரணங்களால் அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதில் இவ்விவகாரமும் அடங்கும் என்றும் பிரதமர் சொன்னார்.

Categories
Featured Pahang மாநிலம்

பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,294 ஆக உயர்ந்தது

பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,294 ஆக உயர்ந்தது

பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,294 க்கு உயர்வு கண்டுள்ளது.

போலீஸ் வெள்ள நடவடிக்கை அறையின் பேச்சாளர் இன்று மதியம் அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களிலுள்ள 50 நிவாரண நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இன்று காலையில் செபராங் பிறை செலாத்தானில் மூடப்பட்ட பல சாலைகள் இன்னும் மூடப்பட்டிருக்கின்றன, ஜாலான் லாஹார் ஊய்-சுங்கை டூவா, லாஹார் ஊய் – பாடாங் மெநோரா, ஜாலான் பொகோக் தம்பாங் மற்றும் ஜாலான் பாடாங் தொன்சன் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கி விட்டது என்றும் வீடுகளிலிருந்து வெளியேறிவர்கள் வீட்டுத் திரும்புகின்றனர் என்றும் அப்பேச்சாளர் கூறினார்.

மாநிலத்தின் வரலாற்றில் மிக மோசமானது என்று கூறப்படும் இந்த வெள்ளத்தில் இன்று வரையில் எழுவர் இறந்துள்ளனர்.

Categories
Featured Pahang பொக்கிஷம் மாநிலம்

Abdul Razak Hussein

images (13)

Abdul Razak Hussein

29 september 2017

Ganapathy Krishnasamy

  
Yang Amat Berbahagia Tun
Abdul Razak Hussein
S.M.N.
عبدال رازک حسین
TunAbdulRazak.jpg
2nd Prime Minister of Malaysia
In office
22 September 1970 – 14 January 1976
Monarch Abdul Halim
Yahya Petra
Deputy Ismail Abdul Rahman
Hussein Onn
Preceded by Tunku Abdul Rahman
Succeeded by Hussein Onn
1st Deputy Prime Minister of Malaysia
In office
31 August 1957 – 22 September 1970
Monarch Abdul Rahman
Hisamuddin
Putra
Ismail Nasiruddin
Prime Minister Abdul Rahman
Preceded by Position established
Succeeded by Ismail Abdul Rahman
Personal details
Born Abdul Razak bin Hussein
11 March 1922
BorobudurSumatra
Died 14 January 1976 (aged 53)
LondonUnited Kingdom
Resting place Makam PahlawanMasjid NegaraKuala LumpurMalaysia
Citizenship Malaysian
Political party United Malays National Organisation (1953–1976)
Other political
affiliations
Labour Party (1945 – 1953)
Spouse(s) Rahah Noah
Children 5 (including Najib Razak and Nazir Razak)
Alma mater Raffles College
Lincoln’s Inn
Profession Lawyer
Military service
Allegiance  Pahang
Service/branch Rejimen Askar Wataniah
Years of service 1941–1945
Rank Captain
Unit Force 136

Tun Haji Abdul Razak bin Dato’ Haji Hussein (Jawi: عبدال رازک حسین; b. 11 March 1922 – d. 14 January 1976) was the second Prime Minister of Malaysia, ruling from 1970 to 1976.

Tun Razak was the Prime Minister responsible in setting up Barisan Nasional, which is the ruling coalition of political parties that have held power in Malaysia till today, taking over from its predecessor, the Alliance. He is also renowned for launching the Malaysian New Economic Policy (MNEP).

images (14)

Background

Born in Pekan, Pahang on 11 March 1922,[1] Abdul Razak is the first of two children to Dato’ Hussein bin Mohd Taib and Datin Hajah Teh Fatimah bt Daud. Of aristocratic descent, Abdul Razak studied at the Malay College Kuala Kangsar.

After joining the Malay Administrative Service in 1939, he was awarded a scholarship to study at Raffles College in Singapore in 1940. His studies at the college ceased with the onset of the Second World War. During the war he helped organise the Wataniah resistance movement in Pahang.[2]

After World War II, Abdul Razak left for Britain in 1947 to study law. In 1950 he received a law degree and qualified as barrister at Lincoln’s Inn in London. During his student days in England, Abdul Razak was a member of the British Labour Party and a prominent student leader of the Malay Association of Great Britain. He also formed the Malayan Forum.

Political involvement

Deputy Prime Minister Razak greeting New Zealand Prime Minister Walter Nash in 1960.

Upon his return from the United Kingdom, in 1950, Tun Razak joined the Malayan Civil Service.[1] Owing to his political calibre, he became the youth chief for United Malays National Organisation (UMNO). Two years later, he worked as the Assistant State Secretary of Pahang and in February 1955, at just 33 years of age, became Pahang’s Chief Minister.

Razak stood in and won a seat in Malaysia’s first general elections in July 1955 and was appointed as the Education Minister. He was instrumental in the drafting of the Razak Reportwhich formed the basis of the Malayan education system. Tun Razak was also a key member of the February 1956 mission to London to seek the independence of Malaya from the British.[1]

After the general elections in 1959, he became the Minister of Rural Development in addition to holding the portfolios of Deputy Prime Minister and Minister of Defence, which he held from 1957.[1] His achievements include formulating the development policy known as the Red Book.

images (15)

Infusing young blood

At the time of Separation of Singapore from the Federation of Malaysia in 1965, Tun Razak realised that UMNO needed more young leaders in the party. Faced with, amongst other things Lee Kuan Yew‘s considerable rhetorical skills, Razak wanted young Malay leaders – grounded in their own faith and culture – who would be able to speak and if necessary debate both in the Malay language and English language.

Razak understood that power resided in the Malay community and that for this power to be wielded effectively, the elite among the Malays had to be an elite determined by ability, aptitude and commitment to the nation as a whole. Class, birth and money were secondary in his calculations.

As a consequence of this initiative, the then young leaders of mixed heritage in UMNO, such as Mahathir Mohamad, were drafted into higher echelons of the political establishment.

In 1967 he was awarded the Ramon Magsaysay Award for community leadership.

images (24)

Prime Ministership

After the 13 May Incident in 1969, his faction in UMNO overthrew[citation needed] Tunku Abdul Rahman Putra and imposed a State of Emergency, ruling by decree as the National Operations Council until 1970.[1] On September 1970, Tun Razak succeeded Tunku Abdul Rahman Putra as the Prime Minister of Malaysia.

Tun Razak set up the Barisan Nasional or National Front on 1 January 1973 to replace the ruling Alliance Party. He increased the membership of its parties and coalitions in an effort to establish “Ketahanan Nasional” (National Strength) through political stability.

Tun Razak is also renowned for launching the Malaysian New Economic Policy (MNEP) in 1971. He and the “second generation” of Malay politicians saw the need to tackle vigorously the economic and social disparities which fuelled racial antagonism. The MNEP set two basics goals – to reduce and eventually eradicate poverty, and to reduce and eventually eradicate identification of economic function with race.

images (16)

Death

Due in part to leukaemia, Abdul Razak died in office on 14 January 1976[1] while seeking medical treatment in London. He was posthumously granted the soubriquet Bapa Pembangunan (Father of Development). He was laid to rest in Heroes Mausoleum near Masjid Negara, Kuala Lumpur.

Awards and recognitions

Deputy Prime Minister Tun Abdul Razak with US President John F. Kennedy at the White House in 1961

Honours

Places after him

Tun Abdul Razak Memorial in Kuala Lumpur.

 

Several places were named after him, including:

images (25)

Tun-Razak-lived-life-to-the-fullest-despite-leukaemia

References

  1. Jump up to:a b c d e f g Hoiberg, Dale H., ed. (2010). “Abdul Razak bin Hussein, Tun Haji”. Encyclopædia Britannica. I: A-ak Bayes (15th ed.). Chicago, Illinois: Encyclopædia Britannica Inc. p. 21. ISBN 978-1-59339-837-8.
  2. Jump up^ 1967 Ramon Magsaysay Award for Community Leadership – Tun Abdul Razak
  3. Jump up^ “Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1976.” (PDF).
  4. Jump up^ “Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1959.” (PDF).
  5. Jump up^ “No. 44404”The London Gazette. 8 September 1967. p. 9801.

images (22)

External links

Political offices
New office Deputy Prime Minister of Malaysia
1957–1970
Succeeded by
Ismail Abdul Rahman
Preceded by
Abdul Rahman
Prime Minister of Malaysia
1970–1976
Succeeded by
Hussein Onn
Categories
Pahang உதவும் கரம் பொது செய்திகள் மாநிலம்

டி.ஆர்.ராஜா PKT சமூக சேவை விருது

 

12/08/2017

IMG-20170812-WA0064

பினாங் மநிலத்தின் டி.ஆர்.ராஜா , சுகுனா அவர்கள் மாநில முதல்வர் பிறந்த நாளின் போது PKT எனும்  வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

Categories
Featured Pahang அரசியல் சுகாதாரம் மாநிலம்

அழியும் ஆறுகளும் அலையும் அரசியல்வாதிகளும்……

அழியும் ஆறுகளும் அலையும் அரசியல்வாதிகளும்……

 தரத்தை முன்னிறுத்தி 1முதல் 6 வரை கிரேட் முறையில் ஆறுகள் வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த இருபது ஆண்டுகளில் 123 ஆறுகளும் மோசமான 6ஆவது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

தித்திவங்சா முதுகுத்தண்டிலிருந்து வெளிவரும் முக்கியமான ஆறுகள் கம்போங் ராஜாவைக் கடக்கும்போது மாசுபடத் தொடங்கி விடுகிறது. புற்றுநோய்க்கான மூலக்கூறுகளை உருவாக்கக்கூடிய ‘டிடிதி’ ரசாயனம் இங்கு ஓடி வரும் ஆறுகளில் கலந்திருப்பதாக உலக ரசாயன ஆய்வுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆறுகளிலிருந்து பிடிக்கப்படும் மீன்களில் டிடிதி ரசாயனம் அடங்கியிருக்கிறதாம்.தெர்லா,திரிங்காப், ஈச்சாட் ஆகிய மூன்று ஆறுகள் மிக மோசமான நிலைக்குச் சென்று சற்றேரக்குறைய மரணித்தே விட்டன.அளவுக்கதிகமான மேம்பாடுகளே இந்த இழிநிலைக்கு காரணமாகும். காடுகளை அழிப்பது தொடர்ந்து கொண்டே வருகிறது. ஒரு சில இயற்கை விரும்பிகள் மட்டுமே காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மக்களை சந்தித்து வழக்கமான தேனீரும் ஒரு வேளை சோறும் வழங்கும், சிவராஜ், கோபாலகிருஷ்ணன், மோகனா முனியாண்டி, உட்பட யாருமே உயிரை பாதிக்கும் காடுகள் அழிப்பை இதுவரை தட்டிக் கேட்கவில்லை என்பதால் உயிர் வேதனையோடு வாழும் கேமரன் மலை தொகுதி வாக்காளர்கள் இம்முறை இவர்களுக்காக வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது!!!!

Categories
Johor Bahru Kedah Kelantan Malacca Negeri Sembilan Pahang Penang Perlis Sarawak Selangor Terengganu Wilayah Persekutuan மாநிலம் வர்த்தகம்

இளைஞ்ர்களை வர்தகர்களாக உருவாக்குங்கள்….டத்தோ க.புலவேந்திரன

இளைஞ்ர்களை வர்தகர்களாக உருவாக்குங்கள்
இந்திய இளைஞர்களை வர்தகர்களாக உருவாக்குங்கள் நமது பொருளாதாரம் தானாக உயரும் என பினாங்கு இந்திய வர்த்தக சங்க ஆலோசகரும் தொழிலதிபருமான டத்தோ க.புலவேந்திரன வலியுறுத்தினார்

இந்தியர்களின் பொருளாதார வீழ்ச்சி அதன் தாக்கம் அதுவே நமது வாழ்வு தரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டுசெல்கின்றது . இந்நிலைதொடருமானால் நமது வருங்கால நிலை மோசமான பள்ளத்தாக்கிற்கு தள்ளப்படுவோம் என்று கூறிய அவர் வர்த்தகம் பொருளாதாரம் என்பதில் நம் இளைஞ்ர்கள் ஈடுபாடு கொண்டு அதில் அஸ்திவாரம் அமைத்து அதன்வழி தொழில் மேம்படுத்திக்கொள்ளப்பட வேண்டும் இதன் வழி நமது வருங்காலத்தை புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்ல வழி வகுக்கும் என்றும் அதுவே நமது சமூதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும் எனமேலும் தெரிவித்தார்.

பிற இனத்திற்கு நிகராக நாம் பீடு நடைபோட வர்த்தகத்தை பல கோணங்களில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் அதன் அடிப்படையில் சங்கம் வர்த்தகர்களை உருவாக்கி வருகின்றது அதன் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் எனவும் பினாங்கு இந்திய வர்த்தக சங்க ஆலோசகரும் தொழிலதிபருமான டத்தோ க.புலவேந்திரன் வலியுறுத்தினார்.