Categories
Featured Penang அரசியல் மாநிலம்

வர்த்தக வாய்ப்புகள் என்ற இனவாத நிலைபாட்டில் அதிரடி மாற்றம் வேண்டும்….முவீ.மதியழகன்

   ஒருவருக்கே வர்த்தக வாய்ப்புகள் என்ற இனவாத நிலைபாட்டில் அதிரடி மாற்றம் வேண்டும்…..முவீ.மதியழகன்  

 

இன்று நம் நாட்டில் இயங்கும் அரசாங்க பொது மருத்துவ மனைகளில்

மலேசிய இந்தியர்களுக்கென தனியார் கடைகள் – சிற்றுண்டிசாலைகள் அமைத்திட புதிய அரசாங்கம் வாய்ப்புகளை வழங்கிட வேண்டும், வழக்கமான அரசாங்க பொது மருத்துவமனைகளின் நிலைபாடுகள், இன்றும் முழுக்க முழுக்க தனியார் மருத்துவமனைச் சாரலில் இருப்பதையே காணமுடிகிறது, அதனைவிட,

ஒரே இனத்தவருக்காக, ஒரே நிருவனத்திற்காக , ஒரே முதலாளிக்கே விற்பனை வாய்ப்புகள் என்ற கடந்தக்கால கசப்புத்தன்மையை புதிய அரசாங்கம் அதிரடியாய் மாற்றியமைத்தாக வேண்டும், அதனை மாற்றியமைத்திட இன்றய அரசாங்கம் தமது புதிய கொள்கைகளை அறிமுகம் செய்தாக வேண்டும்.

இனி நாம் அனைவருமே மலேசியர்கள் என்றான தாரக மந்திரங்கள் வெறும் அலங்காரச் சொல்லாக இருந்திடாது, அச்சொல்லில் உட்தன்மை வெற்றிபெற்றிட, நாட்டிற்காக இருநூராண்டு காலம் தன்னை தியாகித்த மலேசிய இந்தியர்கள், இன்றும் நாட்டின் புதிய அரசாங்கம் அமைத்திட போராடியதும், வெற்றிபெற்ற வைத்ததும் இந்தியர் இளைஞர்களே, நாட்டின் முன்னேற்றத்திலும் அரசியல் களம்காணும் கால நீரோட்டத்திலும் மலேசிய இந்தியர்கள் விடுபட்டு போகாது.

அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் சலுகைககள் அதனுடனான வியாபார தொழில் நுட்பம் அதன்வழி புதிய வர்த்தகர்களை உருவாக்கிட வழிவிட வேண்டும். பிற இனத்தவர்களில் இன்றும் மிக அதிமாக நாட்டின் அரசாங்க பொது மருத்துவமனைகளை நம்பியே இந்தியர்கள் உள்ளனர், மருத்துவமும் பெருகின்றனர், இதன்படி நாள் முழுக்க மருத்துவமனையே கதியென பசியும் பட்டினியுமாக காத்திருக்கும் வெளி நோயாளிகளின், உணவுவகை, காலை சிற்றுண்டி, குடிநீர்வகைகள், மற்றவகை பொருட்கள் இப்படி அத்தியாவசிய தேவைகளுக்கு இந்தியர்களின் கடைகளும், இந்திய உணவுவகைகளும் அவசியம்.

என்பதை இன்றய பக்காத்தான் அரசாங்கம் நடைமுறை படுத்துமா? அல்லது ஒரே இனத்தவர் மட்டுமே வானிபத்துறையில் வெற்றிபெற வைக்குக்கும் இருபதாண்டுகால நடைமுறையை நிலைபடுத்துமா? இங்கே நமக்கு இந்நாட்டில் அதிரடியான மாற்றங்கள் வேண்டும் பிறயினத்தவருக்கு ஈடாக இணையாக மலேசிய இந்தியர்ககளுக்கும் அருகாமையிலே கடைகள் வேண்டும், சிற்றுண்டியகம்  வேண்டும் என்பதை உறுதிபடுத்திட வேண்டும்,

100-நாள் 10- சலுகைகள் என்றும் 10-நாள் 100-சலுகைககள் என்றதைக் காட்டி அடிப்படை உரிமைகளில் கைவைத்திட வேண்டாம், அதே நேரத்தில் இந்தியர்க்கான அடிப்படை உரிமைகளை தரமறுத்து காலத்தை காட்டி, சூழ்நிலையைக் காடௌடி, கடன்களை காட்டி , ஊழலை காட்டி , முன்னால் அரசாங்கத்தைக் காட்டி மலேசிய இந்தியர்களின் உரிமையை மூடிமறைத்திட வேண்டாம்.

 

 

Categories
Featured Penang அரசியல் பொது செய்திகள்

மலேசிய இந்தியர்களிடத்தில் ஒற்றுமை வேண்டும்….முவீ.மதியழகன் ஐபிஎப் உத்தாம்

 1. ஒற்றுமை மாதமென 8-ம் மாதத்தை
  சம்பர்தாயமாக பிரகடனம் செய்திடாது சுரூபம் பலித்திட நெஞ்சுரம் வேண்டும். …..முவீ.மதியழகன் ஐபிஎப் உத்தாம உதடுகளில் உறவை
  உள்ளத்தில் பகையை பாராட்டும்
  மலேசிய இந்தியர்களிடத்தில்
  வெறும் சம்பர்தாயத்திற்காக
  நம்மினத்தில் ஒற்றுமை
  ஒருமைபாடென வெறுமனே பாராட்ட முடியுமே தவிர, அதன் உள்நோக்கம்
  பயனற்றதாகி போகும்,

  இன்று நம்மிடத்தில் அது பலித்திட வாய்ப்பிருப்பதாக காணவும் கிடைக்கவில்லை, கண்டிடவும் வழியில்லை
  ஆனால் இந்நட்பு பாராட்டுதல்,
  எந்நாளும் நிலைத்து
  வெள்ளந்தி போல இருப்பது அவசியம்,
  அதைவிட எல்லார்க்கும் மனம்பரப்பிடவும் வேண்டும்,
  இந்தியர்களின் ஒன்றுமையை
  ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகையாக இருந்திடலாகாது என்பது கட்டாயம் ,

  இந்நாட்டின் இந்தியர்களின்
  ஒற்றுமை ஒருமைபாடு என்கின்ற அடையாளத்தின் பின்னால்,
  வாழ்வாதாரங்கள் சிறந்தோங்கவும்
  அதன்வழி முழு சுதந்திர பயன்கள்
  உரிமைபட கிடைத்து வாழ்வதற்கும்,
  மலேசிய இந்தியர்க்கு விட்டுக்கொடுக்கும் மனதுணிச்சல்கள் வேண்டும். வெறுமனே ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதால் ஒற்றுமை வந்துவிடாது,

  அதற்கு முன்னர் ஒற்றுமைக்கான
  நீண்ட நெடுபயண திட்டங்களும்,
  தியாக மனபாங்கும்,
  அதனைவிட எவருக்குமே அஞ்சிடாத நெஞ்சுரம் இருக்க வேண்டும்,
  இது முதன் முறையாக 2018-ல்
  பலித்திட வேண்டுமாயின் நம்மினத்தில் நம்மமவர்கள் உண்மையாக இருக்க வேண்டும்,

  அதற்கு அடிதட்டிலிருந்து உயர்மட்டம் வரையிலும் நிலைத்துபட வேண்டும்,
  முதல் அங்கமாக அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் துவங்கி
  ஆட்சியிலுள்ள அமைச்சர்கள் வரையிலும், கட்சி ,
  கொடி ,
  கொள்கை ,
  நிறம் ,
  இனம் ,
  மதம்,
  ஆண்டான் ,
  அடிமை என்ற பேதமில்லாது,
  மலேசிய இந்தியர்களாக
  நம் இனமானத்திற்காக
  ஒருகுடையின் கீழ் உறுதிபட வேண்டும்,

  அதற்காக முதன் முதலில் தலைவர்கள் மனமிறங்கி வரவேண்டும்.
  மழைவிட்டாலும் தூவானம் விடாதுபோல் ஏச்சும் பேச்சும் எழுத்துமாய் நம்மை
  தமிழ் நல்லுலகமே எல்லிநகையாடி சிரிக்கும்படி இழிவுகள் செய்வதோடு,
  அடித்து வீழ்த்தியவர்களிடத்து
  இன்னும் பகைமுடிக்க துடிக்கும்
  கட்சிகளின் தொண்டர்கள்,
  முண்டாசை தட்டிக்கொண்டு தினம்
  தினம் பொது ஊடகங்களில்
  புலனங்கள் துவங்கி,
  முகநூல் நுழைந்து அங்கிருந்து
  யுதியூப் வரையிலும் விடாது
  பலிதீர்க்கும் நம்மவர்கள் திருந்துமொழி வேண்டும்,

  இங்கேயும் படித்தவரிடத்து பாமரத்தனத்தை கண்டு நகைப்பதைவிட வேரெதையும் காணமுடியாத காலமாய் போனதால், வெறுமனே இந்தியர்களது ஒற்றுமை மாதமென்பதற்காக,
  ஒருவரிடத்து இன்னொருவர்
  நடிக்கலாமே தவிர, ஒற்றுமை என்பது சுட்டுப்போட்டாலும் வராது என்பது வெளிப்படையாகும்.

  ஒற்றுமை மாதத்திற்கு முதன் முதலில்
  நமது அரசியல் கட்சிகள்,
  பொதுநல இயக்கங்கள்,
  இனமான உணர்வாளர்கள்,
  தனிமனிதர்கள் தம்மை
  ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும், அதற்காக எவரிடத்தும் பயமில்லாது மலேசிய அனைத்து கட்சிககள்,
  அனைத்து இயக்கங்களின் கூட்டத்தைக் கூட்டி,
  கர்வமில்லாத ஒரு இனமாக
  எதிர்கால தலமுறைக்கு வழிகாட்டும் பயனாக,
  மலேசிய இந்தியர்கள் உருவெடுக்க வேண்டும்,
  ஆனால் இன்றய காலச்சூழலில்
  அது முடவன் கொம்புத்தேனுக்கு
  ஆசைபட்ட கதையாகி போகும்
  என்பதும் நிதர்சனமே,

  ஒரு நாள் கூத்துக்கு மீசைவைச்ச
  கதையாக,
  மலேசிய இந்தியர்களின் ஒற்றுமை
  மாதமும் தினமும் நம் மலேசியர்களின் மாதவமாக இருத்த வேண்டும், உரிமைகளை
  இழந்துபோய் விடக்கூடாது.

   

Categories
Featured Penang மாநிலம்

கில்லாடி மோசடிக் கும்பல் மூவர் கைது! – டத்தோ ஸ்ரீ தெய்வீகன்

கில்லாடி மோசடிக் கும்பல் மூவர் கைது!
– டத்தோ ஸ்ரீ தெய்வீகன்

பினாங்கு மாநிலத்தில் புதி புதிதாக தாக புக்கிட் மெர்தாஜாம், கெப்பாலா பத்தாஸ், செபராங் ஜெயா ஆகிய பகுதிகளில் 14 பேரிடம் கிட்டத்தட்ட வெள்ளி 5 லட்சத்தை மோசடி செய்த ‘மாக்காவ்’ கும்பலைச் சேர்ந்த, 2 பெண்களையும் ஒரு மோசடி ஆசாமியையும் பினாங்கு போலீஸ் துறை கைது செய்தது.

வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களின் கைப்பேசி தொடர்பு எண்ணை வைத்துக் கொண்டு அக்கும்பல் தங்களை போலீஸ் என்றும், வங்கியைச் சேர்ந்தவர்கள் என்றும், சுங்கத்துறை அதிகாரிகள் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாகப் பேசி, தங்களிடம் சிக்கும் அப்பாவிகளிடம் பண மோசடி செய்ததாக, பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ எ.தெய்வீகன் கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பான பணப்பரிமாற்றம், கடத்தல் நடவடிக்கை மற்றும் நம்பிக்கை மோசடியின் பெயரில் அக்கும்பலைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவில் போலீஸ் கைது செய்ததாக டத்தோஸ்ரீ தெய்வீகன் தெரிவித்தார்.

59 வயது விரிவுரையாளர் ஒருவர், அந்த இளம்பெண்ணின் அழைப்பைத் தொடர்ந்து தனது வங்கி கணக்கில் இருந்த 3 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியை, அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் சேர்த்து ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
துருவித் துருவி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அன்றைய தினமே 21 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு பெண்ணையும், ஓர் ஆடவனையும் போலீஸார் கைது செய்தனர்.

கைதான ஆசாமி போலீஸ்காரர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பலரிடம் மோசடிச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக டத்தோ ஸ்ரீ தெய்வீகன் கூறினார்.

அந்த ஆடவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ‘மக்காவ்’ மோசடிக் கும்பலில் இணைந்து, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறிய டத்தோஸ்ரீ தெய்வீகன், சிக்கிய 3 பேரும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்!

 

Categories
Featured Penang மாநிலம்

விடுதலைப்புலி விவகாரம்; எதிர்ப்புக்கூட்டம் வேண்டாம்!.டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகன் ..

விடுதலைப்புலி விவகாரம்; எதிர்ப்புக்கூட்டம் வேண்டாம்…

27 ஜூலை 2018 – இராதாகிருஸ்ணன்

 

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறப்படும் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி.இராமசாமியின் விவகாரம் தொடர்பில், யாரும் பேரணியோ, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டாம் என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகன் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பிலான விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கையில் எடுத்திருக்கிறது. இராமசாமியும் வாக்குமூலம் தரும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். விசாரணை நடந்துவருவதால், இனங்களுக்கு இடையிலான சுபிட்சத்துக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், எந்தத் தரப்பும் செயல்படக்கூடாது. பொறுமை காக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

துணை முதல்வர் இராமசாமிக்கு ஆதரவாக, ஒரு தரப்பும்; எதிர்ப்பாக ஒரு தரப்பும் பேரணி நடத்தவிருப்பதாக இரண்டு அமைப்புகள் தெரிவித்திருக்கிறது!

 

Categories
Featured Penang அரசியல் மாநிலம்

விடுதலைப் புலிகளை ஆதரித்தால் தீவிரவாதியா? மலேசிய தமிழர் குரல்-டேவிட் கேள்வி

விடுதலைப் புலிகளை ஆதரித்தால் தீவிரவாதியா? மலேசிய தமிழர் குரல்-டேவிட் கேள்வி

ஜோர்ஜ்டவுன்,ஜூலை.27- பேராசிரியர் டாக்டர் இராமசாமி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவரை ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்துவது எந்த விதத்திலும் நியாயமாகாது. உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் சரி தமிழர் என்ற அடிப்படையில் தமிழீழ மக்களுக்கு ஆதரிக்காத தமிழர்களே இருக்க முடியாது. அதைத் தான் இராமசாமியும் செய்துள்ளார். அதனால் அவரை தீவிரவாதி என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மலேசிய தமிழர் குரல் என்ற அரசு சாரா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சொந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு தரப்படாத பட்சத்தில், விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் மனித உரிமையைக் காப்பதற்காக ஆயுதப் போராட்டைத் தொடங்கினார்கள். தங்களின் விடுதலைக்காக அவர்கள் நடத்திய போராட்டத்தை சில நாடுகள் தீவிரவாதம் என்கின்றன.

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று அறிந்த உலகத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை விடுதலைப் போராளிகள் என்றே போற்றுவார்கள். அதனால், தமிழர்கள் எங்களையும் தீவிரவாதிகள் என்பீர்களா என கோம்தார் பேரங்காடி முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேரணியின்போது மலேசிய தமிழர் குரல் அமைப்பின் தலைவர் டேவிட் மார்ஷல் மலேசியத் தமிழர்கள் சார்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அரசால் தேடப்படும் சமய போதகர் ஸாகிர் நாயக்கை பல்லினம் ஒற்றுமையாக வாழும் மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போதிலிருந்து வலியுறுத்தி வந்தவர் இராமசாமி. தற்போது ஆளுங்கட்சியாக ஆனது முதலும் தொடர்ந்து அந்த விவகாரத்தை வலியுறுத்தி வருவதால் ஸாகிரின் ஆதரவாளர்கள் பினாங்கு துணை முதல்வருமான இராமசாமி ஒரு தீவிரவாதி என பழி சுமத்தி உள்ளனர்.

தமிழீழத் தமிழர்களின் பிரச்சனையில் இராமசாமிக்கு இருந்த ஈடுபாடு உலக அமைதி சார்புடையதே தவிர, அதை தீவிரவாதம் எனக் கொச்சைப்படுத்தாதீர் என தமிழர் குரல் நினைவுறுத்தியுள்ளது.

Categories
Featured Penang கல்வி நீதிமன்றம் மாநிலம்

மாணவி மானபங்கம்; ஆசிரியர் கைது

மாணவி மானபங்கம்; ஆசிரியர் கைது

இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆசிரியருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது. அதனை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அ.தெய்வீகன் உறுதிப்படுத்தினார்

.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கலைக்கல்வி போதிக்கும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு 2017-ஆம் ஆண்டு சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை முடிவடைந்தவுடன் இவ்வழக்கு தொடர் நடவடிக்கைக்காக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும்.

Categories
Featured Penang அரசியல்

1MDB- நிதிமோசடியில் ஐபிஎப் கட்சியின் தலமைக்கு பங்குண்டா?….முவீ.மதியழகன் காட்டமான  கேள்வி

1MDB- நிதிமோசடியில் ஐபிஎப் கட்சியின் தலமைக்கு பங்குண்டா?….முவீ.மதியழகன் காட்டமான  கேள்வி

 

1MDB- நிதிமோசடியில் ஐபிஎப் கட்சியின் தலமைக்கு பங்குண்டா அதன் பிரதிபலிப்பால் பத்துகோடி நிதிமதிப்பைக் கொண்ட “விஸ்மா ஐபிஎப் ஏலத்தில் பறிபோகுமா?

தரப்பினர் உண்மையை சொல்லிட வேண்டும்? இன்று திடுடக்கிடும் புதிய தகவலின்படி எந்த நேரத்திலும் ஏழையர் மாளிகை என்ற விஸ்மா ஐபிஎப் கட்டிடம், ஏலத்தில் பறிபோகும் நிலையில் ஐபிஎப் கட்சியில் மிகப்பெரிய  நிதிமோசடிகள் நடந்துள்ளது, இவையாவும் மிகவிரைவில் விஷ்வரூபமெடுக்கும்

அபாயகரத்தில் ஐபிஎப் கட்சியும், குழைநடுக்கத்தில் கட்சியின் தலமையும், அதன் சம்பந்தமாக மிக விரைவில் போலிசிடமும், MACC எனும் மலேசிய

ஊழல் தடுப்பு நிருவனத்திடம் புகார் செய்து குற்றமிழைத்தவர்களை  குற்றக் கூட்டிலேற்றி நீதியை நிலைநாட்டுவோம், ஐபிஎப் கட்சியின் தோற்றுனர்களில்ஒருவரான முவீ.மதியழகன் காட்டமான  கேள்வி. ஐபிஎப் கட்டிடத்தின் கடன்களை 200% கட்டி முடித்துவிட்டோம், ஐபிஎப் கட்டிடம் கடனில் உள்ளது என்பது பழுத்தப் பொய், மக்களிடமிருந்து ஐபிஎப் கட்டிடத்திற்காக பவசூலிக்கப் பெற்ற நிதியிலிருந்து,  எம்.ஜி.பண்டிதனின் வீட்டின், இன்னொரு பகுதி இரண்டுமாடி கட்டிடத்தை,

ஐபிஎப் கட்சிக்காக அதனையும் ரொக்கம்  RM6,50000-த்தில்வாங்கப் பெற்றது, அதுவும்போக மூன்று வங்கியின் வழி கட்சிக்கான கையிருப்பாக RM4.5-மில்லியன் நிதி இருந்தது என்பதே ஆதாரப்பூர்வமான உண்மையாகும், விஸ்மா ஐபிஎப் கட்டிடத்திற்கு முன்னால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், தேசிய முன்னாணி அரசாங்க நிதியான 1-MDB நிதியிலிருந்து ஒருமில்லியன் ரிங்கிட்டை வழங்கிய உண்மை கசிந்துள்ளது, மலேசிய கிணி, மற்றும் நியூ த்திரேட் டைம் நாளிதழ்கள் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு,

பாராளுமன்றத்தில், தோனி புவா கேள்வி எழுப்பிய விவாவதமாக இருந்ததின் எதிரொலி, இன்று டத்தோ எம்.சம்பந்தன் தலமையிலான ஐபிஎப் கட்சி பெரும் சிக்கலை எதிர்நோக்குவதோடு முன்னால் பிரதமர் வழங்கிய அந்த RM1-மில்லியன் எங்கே?

என மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் உயிரோடு இருந்தபோதே ஐபிஎப் கட்டிடத்தின் கடன்கள் யாவும் முழுமையாக கட்டி முடிதாகிவிட்டது,

அதன்படியே மக்களிடமிருந்து திரட்டிய பொது நிதியின்வழி RM3.5-மில்லியன் செலவினங்களின் கொண்ட ஐபிஎப் கட்டிடத்தை, ராஜவம்ச கோட்டைபோன்ற தோற்றத்தில் அதிநவீன வசதிகளை கொண்ட சொகுசு மாளிகையாக மாற்றியமைக்கப்பட்டது போக மீதநிதியாக ஐபிஎப் வங்கியின் சேமிப்பு  RM4.5-மில்லியன்களாகும், இந்நிதி ஐபிஎப் கட்சியின் மூன்று வங்கிகளின் வழி கணக்கில் இந்தது என்பதுவே உண்மையான ஐபிஎப் கட்சியின் கணக்கு,

இன்று அக்கணக்குகளின் நிதி நிலைபாடுகள் என்ன? கட்சிக்கு சொந்தமான மூன்றுமாடிகளைக் கொண்ட அந்த மூன்று கட்டிடங்களின் பத்தாண்டடு காலத்து வரவு செலவு எங்கே? விஸ்மா ஐபிஎப் கட்டிடம் ஐபிஎப் கட்சியின் அசையா சொத்தா? 2012-2013-ம் ஆண்டுகளில் ஐபிஎப் கட்யின் தலமை, தேசிய மத்தியச் செயலவையினர் நாட்டை ஆளும் அரசாங்கமான

தேசிய முன்னணியிடம் கடனில்லாத கட்டிடத்தை, கடனில் இருப்பதாக போலி தகவலை தந்து நாட்டின் பிரதமரையும், ஆளும் அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்னர், இதற்கான முழு விபரத்தை செனட்டர் டத்தோ எம்.சம்பந்தனும் தரப்பினர்கள் அதிரடியாய் மக்களுக்கு பதிலளித்தாதாக வேண்டும், சம்பந்தன் தரப்பினர்கள் தவறினால்

ஐபிஎப் கட்சியின் அமைப்பாளரும், 22-ஆண்டுகால தேசிய உதவித் தலைவரும், விஸ்மா ஐபிஎப் கட்டிடத்தின் வங்கி கடனுக்கான ஜாமின் பொறுப்பாளருமான முவீ.மதியழகன் சட்ட நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாடௌடி போலிகளின் முகத்திரையை கிழிப்போம்.

முவீ.மதியழகன் ஐஎப் முன்னால் தேசிய உதவித் தலைவர்.

Categories
English News Featured Penang கல்வி மாநிலம்

Tamil schohcool issues have been moved…..

It’s already 70 days in new Government. How many Tamil Schools issue have been moved ? The Education Minister is looking after many issues. While the deputy minister  Ms.Teo is very actively moving Chinese Schools issue such as UEC.

What happened to our Tamil School isassues? We seriously need a representation for Tamil Schools in Education Ministry. The Tamil School problems are very delicate and complicated. It needs attention and time with effort. The Indian community need another Deputy in Education Ministry!

 

We appreciate the 4 full Ministers but the government needs to know there are 525 Tamil Schools there, and Secondary school on the manifesto and it’s not a easy job for Edu Minister or the Deputy to handle alone. If government neglects this it will cause serious damage through miscommunication!

 

We need A Deputy Minister in Education Ministry!

 

 

Pls share this. We want deputy minister for Tamil Schools. தமிழ்ப்பள்ளிக்கு ஒரு துணை அமைச்சர் வேண்டும் !

#wewantdeputyministerforTamilSchools

#தமிழ்ப்பள்ளிக்குஒருதுணைஅமைச்சர்வேண்டும்

 

Theyaagu Loganaden

016 628 5288(D R.Raja 0184715295)

Categories
Penang சட்டமன்றம்

“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் மத்திய அரசாங்கம் ஏன் இன்னும் தாமதமான – மாறுபாடான போக்கைக் கொண்டிருக்கிறது, இதற்குப் பின்னணியில் ஏதாவது இரகசிய உடன்பாடு இருக்கிறதா? என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்)கேள்வி எழுப்பியுள்ளார்.

“சாகிர் நாயக் நாட்டிற்குள் ஏதாவது குற்றம் இழைக்க வேண்டும். அதற்குப் பின்னரே நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறதா? சீனாவின் உய்குர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை எப்படி சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டவுடன் உடனடியாக அனுப்பினீர்கள்? சீனாவின் ஒரு தொலைபேசி மூலமான கோரிக்கை கிடைத்ததுமே அனுப்பினீர்களே? இலங்கைத் தீவிரவாதிகள் என தமிழ் அகதிகள் சிலரை உடனடியாக விசாரணை ஏதுமின்றி எப்படி இலங்கைக்கு அனுப்பினீர்கள்? “ என அடுக்கடுக்கான கேள்விகளை இராமசாமி எழுப்பியிருக்கிறார்.

 

 

“இதுபோன்ற நாடு கடத்தும் விண்ணப்பம் கிடைத்தவுடன் அந்த விண்ணப்பத்தின் உள்ளடக்கத்தைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சாகிர் நாயக் நமது நாட்டில் குற்றம் செய்தாரா இல்லையா எனப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது” என்றும் சுட்டிக் காட்டிய இராமசாமி, இதுபோன்ற விவகாரங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நடைமுறை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

சாகிர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள இந்திய அரசாங்கம், பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருக்கிறது என்பதால், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் சாகிர் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும் என்றும் இராமசாமி வலியுறுத்தினார்.

மலேசியாகினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இராமசாமி இந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

“ஒரு நாட்டில் குற்றமாகப் பார்க்கப்படுவது மற்றொரு நாட்டிலும் அதே போன்று பார்க்கப்பட வேண்டும். சாகிர் விவகாரத்தில் மலேசியாவின் முடிவை அகில உலகமுமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவும் மலேசியாவும் இரகசிய உடன்பாடு எதனையும் கொண்டிருக்கிறதா?” என்றும் இராமசாமி மேலும் கேள்வி எழுப்பினார்.

Categories
Featured Penang மாநிலம் வர்த்தகம்

ரிம. 940 கோடி எரிவாய் குழாய் திட்டத்தில் ஊழலா? …..நிதியமைச்சர் லிம்

ரிம. 940 கோடி எரிவாய் குழாய் திட்டத்தில் ஊழலா? …. நிதியமைச்சர் லிம்

கோலாலம்பூர், ஜூன் 5 – சுமார் 940 கோடி ரிங்கிட் மதிப்பிலான இரண்டு எரிவாயு குழாய்த் திட்டங்களுக்கான 88 விழுக்காடு பணம் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் 13 விழுக்காடு மட்டுமே பணிபூர்த்தி ஆகியிருக்கிறது என நிதியமைச்சு கண்டுபிடித்திருக்கிறது என அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

நிதியமைச்சில் எவருக்கும் எட்டாத வகையில், யார் கண்ணிலும் படாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிவப்பு கோப்புகளில் இந்த விபரத்தை அம்பலப்படுத்தி உள்ளது என்றார் அவர்.

நிதியமைச்சின் சூர்யா ஸ்ட்ராட்டெஜிக் எனர்ஜி ரிசோர்ஸ் சென். பெர்ஹாட் என்ற நிறுவன இந்தத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள 1எம்டிபியின் கீழ் நிறுவனமான எஸ்.ஆர்.சி.யின் துணை நிறுவனம்தான் இந்த சூர்யா ஸ்ட்ராட்டெஜிக் நிறுவனம் என்றும் அமைச்சின் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக லிம் சொன்னார்.

நிதியமைச்சின் துணை நிறுவனமாக சூர்யா நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எம்பிபி எனப்படும் மல்டி புரொக்ட் பைப்லைன் மற்றும் டிரான்ஸ்-சபா கியாஸ் பைப்லைன் எனப்படும் இரு திட்டங்களை இது மேற்கொள்ள 2016 ஆம் ஆண்டு ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மலாக்கா- போர்ட்டிக்சனை ஜித்ராவுடன் இணைக்கும் 600 கிலோ மீட்டர் பைப்லைன் திட்டம்தான் எம்பிபி திட்டமாகும். மற்றொரு திட்டம் 662 கிலோ மீட்டர் தொலைவு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டமாகும்.