Categories
Perak சட்டமன்றம் மாநிலம்

பேரா; நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் போட்டியா?

பேரா; நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் போட்டியா?

பெட்டாலிங் ஜெயா, பி.கே.ஆர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மக்களவையில் நுழைவதற்காக, பேரா மாநிலத்திலுள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்திருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பாரிசான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட்டு, தற்போது தம்மை சுயேட்சை எம்.பி-யாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவரது தொகுதியில் அன்வார் போட்டியிடக்கூடும் சாத்தியமிருக்கிறது என்று அத்தகவல் மேலும் கூறியது.
சம்பந்தப்பட்ட அந்த எம்.பி அண்மையில் டத்தோஸ்ரீ அன்வாரைச் சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.
பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்டு வென்ற  பாகான் செராய் எம்.பி டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி அஸ்மி, புக்கிட் கந்தாங் எம்.பி டத்தோ சைட் அபு ஹூசேன் ஆகிய இருவரும் தங்களை சுயேட்சை எம்.பி-களாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!

Categories
Featured Perak மாநிலம்

டிங்கி ஒழிப்பு; முன்னோட்ட பரிசோதனையில் ரசாயன கலவையற்ற மருந்து- சிவநேசன்

டிங்கி ஒழிப்பு; முன்னோட்ட பரிசோதனையில் ரசாயன கலவையற்ற மருந்து- சிவநேசன்

 

பேரா மாநிலத்தில் நிலவும் டிங்கி காய்ச்சல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசாயன கலவையற்ற கொசு ஒழிப்பு மருந்து பயன்படுத்துவது பரிசோதனை முறையில்  முன்னெடுக்கப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக தற்போது தெளிக்கப்படும் மருந்து ரசாயன  கலவை மிகுந்தது என்பதோடு அதனை வீட்டிற்கு வெளியே மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன கலவையால் வீட்டிற்குள் மருந்து தெளிப்பதில்லை.

இந்நிலையில் ரெவோகனிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ரசாயன கலப்பில்லாத கொசு ஒழிப்பு மருந்தை சோதனை முறையில் மேற்கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.

தற்போது டிங்கி காய்ச்சல் அதிகம்  உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதியில்  இந்த மருந்தை பயன்படுத்தப்படவுள்ளது. இம்மருந்தை தெளிப்பதன் மூலம் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றால் அனைத்து இடங்களிலும் இம்மருந்தை தெளிப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினராக சிவநேசன் தெரிவித்தார்.

கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவு குறைந்துள்ளது. இவ்வாண்டு தொடக்கம் 2018 மே 19 வரை 1,1,97 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதே காலாண்டில் கடந்தாண்டு 3,295 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

டிங்கி ஒழிப்புக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து கலவையில் டீசல் எண்ணெய் கலக்கப்படுவதால் அது சிறப்பானதாக கருத முடியாது. ரசாயன கலப்பற்ற இந்த ‘ரெவோகெனிக்ஸ்’ மருந்து பயன்படுத்துவதால் வீட்டிற்கு வெளியில் மட்டுமல்லாது  வீட்டுக்குள்ளேயும் பயன்படுத்தலாம்.

டிங்கி ஒழிப்பிற்காக தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படும் நிலையில் சோதனை முன்னோட்டமாக இங்கு பரிசோதிக்கப்படும் எனவும் சாதகமான சூழல் நிலவினால் தற்போதைய மருந்துக்கு பதிலாக இதனை பயன்படுத்த சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.m

Categories
Featured Perak பொது செய்திகள் மாநிலம்

மீண்டும் ஒரு தடுப்புக்காவல் மரணம்: 29 வயது ஜி.கணேஸ்வரனுக்கு நடந்தது என்ன?

மீண்டும் ஒரு தடுப்புக்காவல் மரணம்: 29 வயது ஜி.கணேஸ்வரனுக்கு நடந்தது என்ன?

GanapathyKrishnasamy

malaysian police-logoகிள்ளான் – புக்கிட் திங்கியில் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதான ஜி.கணேஸ்வரன்,நேற்று திங்கட்கிழமை மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஷா ஆலமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கணேஸ்வரன், சிஐடி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் காலை 11.15 மணியளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார்.

பின்னர், அவசர ஊர்தி கொண்டு வரப்பட்டு மதியம் 12.15 மணியளவில், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

ஆனால் போகும் வழியிலேயே சுமார்12.40 மணியளவில் கணேஸ்வரன் மரணமடைந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மாலை 6.45 மணியளவில் நடந்த முதற்கட்ட விசாரணையில் கணேஸ்வரன் மரணத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும், அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கிள்ளான் சிலாத்தான் காவல்துறைத் தலைமை துணை ஆணையர் சம்சுல் அமர் ரம்லி தெரிவித்திருக்கிறார்.

திருட்டுக் குற்றம் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட கணேஸ்வரன், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

அப்போது தன்னைப் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் காவல்துறைத் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறியிருக்கிறார்.

காவல்துறையினர் தனது கழுத்தில் மிதித்ததால், தன்னால் சாப்பிட முடியவில்லை என்றும் கணேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், கணேஸ்வரனின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணேஸ்வரனின் சகோதரி, வழக்கறிஞர் சிவமலர் கணபதி மூலம் மலேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது….. நேர்முக சந்திப்பு தொடரும் மைவெளிச்சத்தில்  விரைவில்

Categories
Featured Perak அரசியல் மாநிலம்

சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற முடியும் என்கிறார் ……சிவநேசன்

சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற முடியும் என்கிறார் ……சிவநேசன்

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் தமது மற்றும் தமது கட்சியின் நற்பெயர் அவரது வெற்றிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தாம் சுங்கை சிப்புட் தொகுதியில் கடுமையாக உழைத்து வருவதாக 61 வயதான சிவநேசன் கூறுகிறார்.

மேலும், தமிழ் மலர், தமிழ் நேசன், மக்கள் ஓசை மற்றும் மலேசிய நண்பன் ஆகிய தமிழ் நாளேடுகளுக்கு வழக்கமாக தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவதாகவும் அவர் கூறினார்.

“டிஎபி (சுங்கை சிப்புட்டுக்கு) வந்தால், விரும்பினாலும் இல்லை என்றாலும், மக்கள் ரோக்கெட்டுக்கு (சின்னம்) ஆதரவளிப்பார்கள்”, என்று சமீபத்தில் பீடோர், சுங்கையில் சந்தித்த போது சிவநேசன் மலேசியாகினியிடம் கூறினார்.

இது முன்பு ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. லியு ஆ கிம் டிஎபியிலிருந்து 1999 ஆம் ஆண்டில் விலகிய போது, புதிதாக வந்த தெரசா கோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

சீன வாக்காளர்கள், 39 விழுக்காட்டினர், கிட்டத்தட்ட அனைவரும் டிஎபிக்கு ஆதரவு அளிப்பார்கள். மலாய் வாக்காளர்கள், 33 விழுக்காட்டினர், பிஎன்னுக்கு வாக்களிக்கக்கூடும்.

இதன் அடிப்படையில், டிஎபியின் முக்கிய தேர்தல் இலக்கு கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினராக இருக்கும் இந்திய வாக்காளர்கள் என்று சிவநேசன் விளக்கம் அளித்தார்.

இந்தியர்களின் வாக்குகள் மஇகா, பிஎஸ்எம் மற்றும் டிஎபி ஆகியவற்றுக்கிடையில் சமமாகப் பிளவுபடும் நிலையில், சீன வாக்காளர்களின் ஆதரவோடு டிஎபி வெற்றி பெறும் வாய்ப்பு பிஎஸ்எமைவிட அதிகமாக இருக்கிறது .

மஇகா இங்கு பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்று சிவநேசன் கூறினார்

Categories
Featured Perak கல்வி மாநிலம்

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு…..ஜாயிட் ஹமிடி

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு…..ஜாயிட் ஹமிடி

 

இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் பாதுகாக்கும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாயிட் ஹமிடி தெரிவித்தார்.

தமிழ்க்கல்வியானது தமிழ்ப்பள்ளிகளில் தொடர்ந்து நீடித்திருக்க வகை செய்யும் பொருட்டு அனைவருக்குமான சம கல்வி வாய்ப்பு கொள்கையை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக உள்துறை அமைச்சருமான அவர் சொன்னார்.

ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் ஞாயிறன்று பாகான் டத்தோ – சன்மார்க்க சங்க மண்டபத்தில் நடைபெற்ற ‘வெற்றித் திருநாள் 2018’ எனும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து துணைப் பிரதமர் சிறப்புரையாற்றினார்.

“தமிழ்ப்பள்ளிகள் நலன் மீது அரசாங்கம் என்றுமே தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. புதிதாக ஏழு தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதானது இக்கூற்றுக்கு சிறந்த உதாரணம். தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தலைமையிலான அரசாங்கம் பல கோடி வெள்ளி மானியம் வழங்கி வருகிறது” என அவர் கோடிகாட்டினார்.

“கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கும் சமூகமே உலகமய சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போட முடியும். அவ்வகையில், இந்திய சமூகத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி புரட்சி செய்து வரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் அரும்பணிகள் பாராட்டுக்குரியவை. டான்ஸ்ரீ எம். தம்பிராஜா தலைமையிலான குழுவினர் தொடர்ந்து தங்களின் சமூகப் பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக இன்னும் கூடுதலாக வெ.30 லட்சம் மானியம் வழங்க தயாராக இருக்கின்றேன்” என பலத்த கரவொலிகளுக்கு இடையே துணைப்பிரதமர் அறிவித்தார்.

மேலும், பாகான் டத்தோ மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களில் யூபிஎஸ்ஆர் தேர்வில் அதிக ‘ஏ’ மதிப்பீடுகளை பெறுபவர்களுக்கு தலா வெ.500 வெகுமதி வழங்குவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

துணைப் பிரதமரின் நல்லுதவிகுக்கும் வற்றாத ஆதரவுக்கும் ஸ்ரீ முருகன் நிலையத்தார் நன்றி மலர்களை சமர்ப்பணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி புகழ் கோபிநாத், ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர்களான பிரகாஷ்ராவ் – சுரேந்திரன் ஆகியோர் எழுச்சியுரையாற்றி, அரங்கை அதிர வைத்தனர்.

Categories
Featured Perak அரசியல் மாநிலம்

அரசியலுக்கு அப்பாற்பட்டது மக்களின் பிரச்சினை’ – வெ.1 லட்சம் நிதியுதவி

அரசியலுக்கு அப்பாற்பட்டது மக்களின் பிரச்சினை’ – வெ.1 லட்சம் நிதியுதவி..

                       .

09 November 2017

ஈப்போ-
வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்துவதற்கான உபகரணப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக பேராக் மாநில அரசாங்கம் 1 லட்சம் வெள்ளியை வழங்குவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.  இந்த உபகரணப் பொருட்கள் யாவும் பினாங்கு மாநிலத்திற்கு விரைந்து அனுப்பப்படும்

                   

.

இந்த நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்கு ஏதுவாக கிராமப்புற வளர்ச்சி, விவசாயம், தோட்டம், தகவல், மனித மூலதன மேம்பாட்டுக் குழுத் தலைவர் சாரனி முகமட், மாநில செயலாளர் அப்துல் புவாட் மாட் நயான், மகளிர், குடும்ப, சமூக மேம்பாடு, வீடமைப்பு, ஊராட்சி குழுத் தலைவர் ருஸ்னா காசிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதனை ஓர் அரசியல் சர்ச்சையாக உருவாக்க வேண்டாம். ஏனெனில் இது மனிதநேயத்தை சார்ந்ததாகும்.         

பினாங்கு நமது அண்டை மாநிலமாகும். அங்குள்ள மக்களின் பிரச்சினை அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆகும் என இன்று நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.

Categories
Featured Perak நாடாளுமன்றம் மாநிலம்

கேமரன்மலையில் நிற்பேன்…வெற்றிபெறுவேன்…! டான் ஸ்ரீ கேவியஸ்

கேமரன்மலையில் நிற்பேன்…வெற்றிபெறுவேன்…!
மைபிபி தேசியத்தலைவர் டான் ஸ்ரீ கேவியஸ் கூளுரை….

Ganapathykrishnasamy

09 November 2017
எதிர் வரும் 14 ஆவது  பொதுத்தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் த்தொகுதியில் போட்டியிடுவது நிச்சயம் இங்கு வெற்றிபெற்று. நிச்சயம் அமைச்சர் பதவியில் அமர்வேன்.கட்சியின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எம் கேவியஸ் சூளுரைத்தார். தீபாவளி பத்திரிக்கை ஆளர் விருந்து உபசரிப்பில் கலந்துக்கொண்டவர் மேற்கொண்டு பேசினார்


இந்திய சமுதாயத்தில் ம.இ.கா மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தது ஆனால் ,மக்கள் சக்தி, ஐ.பி எப் ,இந்திய ஐக்கிய மக்கள் கட்சி என பல அரசியல் கட்சிகள் உருவாகி விட்டதற்கு . ம.இ.கா காரணம். 1999 இல் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியாக உருவாக்கப்படுவதற்கு முன்பே அங்குள்ள பூர்வக்குடி மக்களுக்கு நான்
உதவிகளைச் செய்திருக்கின்றேன். மேலும் நான் அந்த மண்ணில் பிறந்தவன் .
பிறதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உத்தரவை ஏற்று 2015 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி கேமரன்மலையில் சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றேன்.
மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் கேமரன்மலையில் போடியிட எனக்கு எல்லாத்தகுதிகளும் உள்ளன .இங்கு நிச்சயம் வெற்றி பெற்று அமைச்சராகப் பதவியேற்பேன் என்று டான்ஸ்ரீ எம் கேவியஸ் கூறினார்.

Categories
English News Featured Perak மாநிலம்

மகாதீர் ஒன்றுமே செய்யவில்லை என்று ……சிவநேசன்

. மகாதீர் ஒன்றுமே செய்யவில்லை என்று ….சிவநேசன்

தஞ்சோங் மாலிம் தொகுதியில் 1958 ஆம் ஆண்டு முதல் மக்களவை உறுப்பினராக பிரதிநிதிக்கும் மசீச. அதனை உள்ளடக்கிய மூன்று சட்டமன்றங்கள் பேராங், சிலிம் மற்றும் சுங்கை ஆகிய தொகுதிகளாகும். 2004 ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் பேராங் தொகுதி தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டன.

அன்றைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களை இந்தியர்களுக்கு அவரின் காலத்தில் என்ன செய்தார் என்று, இன்று வசைப்படும் மஇகாவினர்களுக்கு இப்புதிய தொகுதியான பேராங் தொகுதியை ம இ காவுக்கு வழங்கியவரே அவர்தான் என்பதனை மறந்து உளருகின்றனர்.

தஞ்சோங் மாலிம் தொகுதியில் 2004 ஆம் ஆண்டு வரை சுங்கையில் மட்டுமே போட்டியிட்டு வந்த மஇகா, பேராங் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில். 2008 இல் நடந்த 12வது பொதுத்தேர்தலில் சுங்கையிலும், பேராங் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது மஇகா.

2013 ஆம் ஆண்டில் பிரதமர் நஜிப் தலைமையிலான 13வது பொதுத்தேர்தலில் பேராங் தொகுதி அம்னோவிற்கும், சுங்கை தொகுதி மசீச-விற்கும் கைமாற்றப்பட்டு நஜீப் வாரி வழங்கினார் என்றும், மகாதீர் ஒன்றுமே செய்யவில்லை என்றும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

பேராக் மாநிலத்தை பொறுத்தவரை பாரம்பரிய தொகுதிகளை விட்டுக்கொடுத்ததுடன் இல்லாமல், இன்று அம்மாநிலத்தில் அரசியல் அநாதைகளாக வலம் வருகின்றனர் மஇகாவினர்கள். சொந்த உரிமைகளையே விட்டுக் கொடுத்து இன்று தேசிய முன்னணியால் பந்தாடப்பட்டு, அரசியல் நாடோடிகளாக ஒவ்வொரு பொதுத்தேர்தல்களிலும் மஇகா இருந்து வருகின்றன என்று சுங்கையில் நடந்த தீபத்திருநாள் விருந்தில் சிவநேசன் மேற்கண்டவாறு பேசினார்.

 

Categories
Featured Perak மாநிலம்

ஐ பி எப் 26ஆம் ஆண்டு பேராக் மாநாட்டில் டத்தோ எம். சம்பந்தன் மலாய் மொழியில் பேசி அசத்தினார்….


16.09.2017

கணபதி கிருஸ்ணசாமி

10592922_602792303165091_8241817522202844342_n

பேரா மாநில ஐபி எப் கட்சியின் 26 ஆம் பேராளர் மாநாடு மற்றும் ஐபி எப் கட்சியின் தேர்தல் இயந்திர தொடக்கவிழா…
ஐ.பி.எப் கட்சிக்கு மாநில அரசு மாவட்ட மன்ற , வட்டார பதவிகளுக்கும் நியமனப் பதவிகளுக்கும் நியமனம் செய்யபடுவதை மாநில அரசு உறுபடுத்தும்.

பேராக் மாநில
மாநாட்டை அதிகார பூர்வமாக பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ டாக்டர் ஜம்ரி யாக்கோப் அவர்கள்.

இந்த ஐபிப் மாநாட்டிற்ககுத் தேசிய தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் கலந்துக்கொண்டு உள்ளனர்.

ஐ பி எப் கட்சிக்கு மாநிலத்தில் மற்ற கட்சிகளுக்குக் கிடைக்க கூடிய சலுகைகள் போல அரசாங்க பதவிகள் எங்களுக்கும் கிடைக்க வேண்டும். இது நாள் வரை 26 வருடமாக எங்களுக்கு எந்த பதவிகளும் கிடைக்கவில்லை.

பேராக்.மாநில மந்திரி பெசார் அவர்கள் இம்முறை
ஐ.பி.எப் கட்சிக்கு மாநில அரசு மாவட்ட மன்ற , வட்டார பதவிகளுக்கும் நியமனப் பதவிகளுக்கும் நியமனம் செய்யபடுவதை மாநில அரசு உறுபடுத்தும்.

இந்நிகழ்ச்சியில் இரண்டு மாணவர்களின் மேல் படிப்பிற்கு ஐ.பி.எப் கட்சி தேசியத் தலைவர் நிதி உதவி செய்தார்.
தமது தலைமை உரையைத் தேசிய மொழியில் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் பேசி கட்சி உறுப்பினர்களையும், சிறப்புப் பிரமுகர் மாநில மந்திரி பெசாரையும் வியப்பில் ஆள்த்தினார் டத்தோ அவர்கள்.

 

 

Categories
Featured Perak அரசியல் மாநிலம்

பொதுத் தேர்தல் சவால்களை எதிர்கொள்ள ம.இ.கா தயார் டத்தோ தேவமணி சூளுரை

*பொதுத் தேர்தல் சவால்களை எதிர்கொள்ள ம.இ.கா தயார் டத்தோ  தேவமணி /09/2017

07/09/2017

IMG-20170907-WA0141


எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தல் சவால்களை எதிர்கொள்ள ம.இ.கா அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதாக கட்சியின் துணைத் தலைவரும், பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி சூளுரைத்தார். ரவாங்கில் அமைந்துள்ள ம.இ.கா செலாயாங் தொகுதி அலுவலகத்தில் நடைப்பெற்ற கட்சி பொறுப்பாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் மேலும் பேசிய தேவமணி, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்கள் இனியும் மக்களிடம் எடுப்படாது எனவும், மக்கள் தெளிவான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசு வகுத்துள்ள இந்தியர்களுக்கான பெருவியூக திட்டத்தின் சாராம்சங்களை கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும் சமுதாயத்திற்கு எடுத்துரைப்பது அவசியமாகும். பிரதமர் நஜிப் இந்திய சமுதாயத்தின் மேல் கொண்டுள்ள சிறப்பு அக்கறையின் வாயிலாக இன்று கல்வி, பொருளாதாரம், சமயம், சமூகவியல் என பலத்துறைகளில் இந்தியர்கள் பலன் பெறுகின்றனர்.IMG-20170907-WA0140

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையிலான ம.இ.கா இன்று ஒன்றுப்பட்டு ‘ஒரே குரல், ஒன்றே இலக்கு’’ எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றது. அரசியலுக்கு அப்பால், சமுதாய நலனில் தார்மீக பொறுப்புடன் நாடு முழுமையும் ம.இ.கா வழங்கி வரும் சேவைகள் எண்ணிலடங்கா. அதன் அடிப்படையில், அரசியல் ரீதியாக அரசாங்கத்தில் தொடர்ந்து இந்தியர்களின் குரலாக, பிம்பமாக செயலாற்றுவதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா சிறப்பான வெற்றியை பதிவு செய்தல் மிக அவசியம். அதன் பொறுப்பு அனைத்து தலைவர்களின் கடமையாகும் என தேவமணி அறவுறுத்தினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய செலாயாங் தொகுதி தலைவர் எம்.பி.இராஜா தமதுரையில் பொதுத்தேர்தலுக்கான தொகுதியின் நடவடிக்கைகளை பற்றி விவரித்தார். வட்டார இந்திய சமுதாயத்திற்கு தொகுதி நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களை பற்றி பேசிய அவர், டத்தோஸ்ரீ தேவமணி அவர்களின் வழிக்காட்டலில் பக்தி சக்தி திட்டத்தின் கீழ் எஸ்.பி.எம் மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருவதையும் குறிப்பிட்டார்.

  1. கிளைத்தலைவர்கள், இளைஞர், மகளிர் பகுதி பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்வில் கட்சி, நாட்டு நடப்பு, அரசு கொள்கைகள் பற்றி கருத்து பரிமாறலும் டத்தோஸ்ரீ தேவமணி அவர்களுடன் இடம்பெற்றது.