Categories
Featured Selangor அரசியல் நாடாளுமன்றம் மாநிலம்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர்…. நஜிப் துன் ரசாக்


குடியுரிமை இல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ குற்றஞ்சாட்டினார்.இந்நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.ஆனால், தற்போது குடியுரிமை இல்லாழ இந்தியர்கள் 3.853 மட்டுமே என கூறியுள்ள உள்துறை அமைச்சர் அஸிஸ் ஜமான், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.இது குறித்து கருத்துரைத்துள்ள டத்தோஸ்ரீ நஜிப், இந்தியர்களின் குடியுரிமை விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ‘பொய்யையே’ கூறி வந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.குடியுரிமை அல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சியினர் குறை கூறிய போதிலும், அதை மறுத்த தேசிய முன்னணி அரசாங்கம் குடியுரிமை அல்லாத இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்தது என டத்தோஸ்ரீ நஜிப் சொன்னார்
Categories
Featured Selangor அரசியல்

“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” …டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி

“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” …டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி

கோலாலம்பூர் – மஇகாவை விட அதிகமான உறுப்பினர்களை தனது பிகேஆர் கட்சி கொண்டுள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்ததற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“அப்படியானால், அதிகமான இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சி என்ற முறையில், அதைப் பிரதிபலிக்கும் வகையில் பிகேஆர் கட்சியின் பெயரை இந்தியர் கட்சியாக மாற்றிக் கொள்ளுங்கள்” என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

“அன்வார் கூறுவது உண்மைதான். பிகேஆர் கட்சியில் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள். நானும் அது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே கட்சியின் பெயரையும் இந்தியர் கட்சியாக மாற்றிக் கொள்ள அவருக்கு ஆலோசனை கூறுகிறேன்” என விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்தார்.

“அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருப்பதால், கட்சியின் துணைத் தலைவர் பதவியை இந்தியர் ஒருவருக்கு அன்வார் வழங்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 22) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் கட்சித் தலைமை அலுவலகத்தின் அந்தக் கட்சியின் இந்தியத் தலைவர்களோடு சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் பேசிய அன்வார் அதிகாரபூர்வமாக மஇகாவை விட பிகேஆர் கட்சியின் அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் எனக் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

Categories
Featured Selangor

மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் காலமானார்

கோலாலம்பூர்-
மலேசியத் தமிழ் பத்தரிகை உலகில் ‘பிதாமகன்’ என்று அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் அவர்கள் இன்று காலை காலமானார்.

தமிழ்ப் பத்திரிகை உலகம் நீண்ட அனுபவத்தையும் பல பத்திரகையாளர்களின் முன்னோடியாகவும் ‘உதயம், இதயம்’ மாத இதழ்களின் ஆசிரியராகவும் திகழ்ந்த எம்.துரைராஜ் அவர்களின் மறைவு தமிழ் பத்திரிகை துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் நல்லடக்கச் சடங்கு வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25 Jalan Udang Gantung Satu Taman Cuepacs Segambut 52000 Kuala Lumpur எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு

மை வெளிச்சம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
Categories
Featured Selangor நாடாளுமன்றம் மாநிலம்

3407 இந்தியர்களுக்குக் குடியுரிமை!

3407 இந்தியர்களுக்குக் குடியுரிமை

!

நாட்டில் குடியுரிமை கிடைக்காமல் சிவப்பு நிற அடையாள அட்டை வைத்துக்கொண்டு தத்தளித்து வந்த 3407 இந்தியர்களுக்கு, நீல நிற அடையாள அட்டை வழங்கப்படும் என்கிற இனிப்பான செய்தியை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் 14-வது பொதுத்தேர்தலின்போது பக்காத்தான் ரக்யாட் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்தார்.
60 வயதுக்கும் மேற்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்ற இந்தியர்கள் நீல நிற அடையாள அட்டை பெறுவதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்து வேதனைப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சிறப்புச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இத்தகவலைத் தெரிவித்தார்!
– பெர்னாமா

Categories
Featured Selangor பொது செய்திகள்

பத்தாயிரம் வயது குறைந்த சிறுமிகளுக்கு திருமணம்!

30/07/2018

பத்தாயிரம் வயது குறைந்த சிறுமிகளுக்கு திருமணம்!

நாட்டில் 16 வயதுக்கும் குறைவான சிறுமிகள் திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் புதிதல்ல. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 10,000 சிறுமிகள் மிகச் சிறு வயதில் திருமணம் புரிந்திருப்பதாக, மகளிர், குடும்ப மற்றும் சமூகநலத்துறை துணையமைச்சர் சஹானா இயோ தெரிவித்தார்.

இந்த மொத்த எண்ணிக்கைப் பட்டியலில் சரவா மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

2007 முதல், 2017_ஆம் ஆண்டு வரை அமைச்சின் புள்ளிவிவரப்படி, இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, பிற மதங்களைச் சேர்ந்த 4,999 சிறுமிகள் இளம் வயதில் மதச் சடங்குபடி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, வயது குறைந்த சிறுமிகள் திருமணம், சமூக நல உதவிகள் வழங்குவது தொடர்பில், சம்பந்தப்பட்ட அமைச்சு விரைவில் எல்லா மாநிலங்களைச் சேர்ந்த, எல்லா ஆட்சிக்குழு மகளிரணித் தலைவர்களோடு சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கிறது.

மகளிர் மற்றும் சிறுமிகள் திருமணம் விவகாரத்தை எந்தத் தரப்பும் அரசியலாக்கக்கூடாது.

இவ்விவகாரத்தை மாநில அரசாங்கங்களோடு அமர்ந்து கலந்துரையாடல் நடத்தி, தீர்க்கமான முடிவை மத்திய அரசு எடுகும்.

பெண்களின் திருமண வயதை 18-ஆக நிர்ணயிக்க வேண்டும் என, பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதை அவர் கோடி காட்டினார்!

share our:  myvelicham.com face book

myvelichaamtv face book

 

Categories
Featured Selangor நீதிமன்றம் பொது செய்திகள்

ஊனமுற்ற தாயின் மீது சுடு தண்ணீர் ஊற்றிய ஆடவனுக்கு ஈராண்டு சிறை

ஊனமுற்ற தாயின் மீது சுடு தண்ணீர் ஊற்றிய ஆடவனுக்கு ஈராண்டு சிறை

கோலாலம்பூர்,ஜூலை.27- வலக் கை ஊனமுற்றிருக்கும் தனது தாயின் மீது சுடுநீர் ஊற்றிய ஆடவனுக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

36 வயது தான் லாய் கிம் என்ற அந்த ஆடவன் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாயோன் தலிப் அத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

இம்மாதம் 17-ஆம் தேதியன்று, தாமான் ஜிஞ்ஜாங் பாருவில் உள்ள வீடொன்றில், 65 வயது லியோங் ஆ ஹுவா மீது தான் சுடச் சுட நீரைக் கொட்டிருக்கிறார். அதனால், லியோங்கின் கழுத்துப் பகுதியிலும் கையிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. அதையடுத்து சம்பவ அன்றே தான் போலீசிடம் பிடிபட்டான்.

காசு கேட்டு கொடுக்காததால், தனது தாய்க்கு இத்தைய கொடுமை தான் இழைத்திருக்கிறான். அதனால், அவனுக்கு தகுந்த தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். எனினும், குடும்பத்தை தான் ஒருவனே பராமரித்து வருவதால் அவனுக்கு வெறும் ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Categories
Featured Selangor சட்டமன்றம் மாநிலம்

இடைத்தேர்தல்: பிரசாரத்தில் இறங்கினார் நஜிப்….

இடைத்தேர்தல்: பிரசாரத்தில் இறங்கினார் நஜிப்

ஷா ஆலாம்,ஜூலை.25- சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலின் பிரசாரத்திற்கு உதவும் வகையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் இன்று தேசிய முன்னணியின் சேவை மையத்தை வந்தடைந்தார்.

இன்று காலை மணி 8.40 அளவில் வருகை தந்த அவரை அம்னோ துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானும் சிலாங்கூர் அம்னோ பிரிவின் தொடர்புக்குழு துணைத் தலைவர் மாட் நசாரியும் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் வரவேற்றனர்.

தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ லோக்மான் அடாமிற்கு ஆதரவாக நஜிப், சுங்கை கண்டிஸ் கிராமத்திலுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி, சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுஹாய்மி ஷாப்பி புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து
அந்த சட்டமன்றத் தொகுதி காலியானது.

அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஸாவாவி அகமட்டும், தேசிய முன்னணி சார்பில் லோக்மான் அடாமும், சுயேட்சை வேட்பாளராக கே.மூர்த்தியும் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

share face book myvelichamtv

Categories
Featured Selangor அரசியல் மாநிலம்

நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 1 பில்லியன் ரிங்கிட்!

நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 1 பில்லியன் ரிங்கிட்!

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் தொடர்புடைய 6 வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 900 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1.1 பில்லியன் ரிங்கிட் என கூட்டரசு வர்த்தகக் குற்ற விசாரணை இலாகாவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அமர் சிங் இன்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமர் சிங், நஜிப் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்கள் அனைத்தும் மே 21 முதல் ஜூன் 25-ம் தேதி வரையில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியவை என்றும் அமர் சிங் தெரிவித்தார்.

மேலும், 2,200 மோதிரங்கள், 1,400 கழுத்தணிகள், 2,100 வளையல்கள், 2,800 காதணிகள், 1,600 உடை ஊசிகள் மற்றும் 14 கொண்டை ஊசிகள் என மொத்தம் 12,000 ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமர் சிங் குறிப்பிட்டார்.

இவற்றில் அதிக விலையுள்ள ஒரு கழுத்தணியின் விலை 6 மில்லியன் ரிங்கிட் என்றும் அமர் சிங் தெரிவித்தார்.

இதுதவிர விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், கண்ணாடிகள் ஆகியவற்றின் மதிப்பு 374,000 ரிங்கிட் என்றும், விலையுயர்ந்த கைப்பைகளின் விலை 51.3 மில்லியன் என்றும் அமர் சிங் தெரிவித்தார்.

Categories
Featured Selangor பொது செய்திகள் மாநிலம்

25 முறை துப்பாக்கிச் சூடு  யாரும் காயமடையவில்லை  போலீஸ்

25 முறை துப்பாக்கிச் சூடு  யாரும் காயமடையவில்லை  போலீஸ்

 

கோலாலம்பூர்-
மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள்  25 முறை துப்பாக்கி தோட்டாக்களை பிரயோகித்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என கோலாலம்பூர் குற்றவியல் விசாரணை பிரிவி தலைவர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இங்கு புக்கிட் பிந்தாங்கிலுள்ள பொழுதுபோக்கு மையத்தின் அருகில் நேற்று இரவு 10.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட புரிந்துணர்வு இல்லாமையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு மையத்திலிருந்து 30 மீட்டரில் உள்ள வாகன நிறுத்துமிட பகுதியில் 25 முறை துப்பாக்கி தோட்டாக்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அச்சமயம் அந்த மையத்தின் நுழைவாயிலும் வரவேற்பரையிலும் பணியாளர்களே இருந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் யாரும்  காயமடையவில்லை என குறிப்பிட்ட அவர் மேலும் சொன்னார்.

Categories
Featured Selangor மாநிலம் வர்த்தகம்

இன்று முதல் கறுப்புப் பட்டியல்: 2,65,000 பேருக்கு இனி ‘விடுதலை’

இன்று முதல் PTPTN கறுப்புப் பட்டியல்: 2,65,000 பேருக்கு இனி ‘விடுதலை’

கோலாலம்பூர், ஜூன்.5- உயர்கல்வியை தொடர்வதற்காக பி.டி.பி.டி.என் கல்விக் உதவித் தொகையைப் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாத 4 லட்சத்து 33 ஆயிரத்து 708 பேரின் பெயர்களை குடிநுழைவு துறை கருப்பு பட்டியலிட்டிருந்தது. அந்தக் கருப்பு பட்டியலிருந்து 2 லட்சத்து 65 ஆயிரம் பேரின் பெயர்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள 1 லட்சத்து 68 ஆயிரத்து 289 பேரின் பெயர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று, அந்தக் கருப்பு பட்டியலிருந்து விடுவிக்கப் படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

வெளிநாடுகளுக்கான பயணத்தைத் தடுக்கும் வண்ணம், பி.டி.பி.டி.என் கடன் பெற்றவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலிடப் பட்டன. அந்தப் பட்டியலிருந்து அவர்களின் பெயர்களை புதிய அரசாங்கம் அகற்றி வருகின்றது.

இதனிடையில், அந்தக் கருப்பு பட்டியலில் தொடர்ந்து நீடித்திருக்கும் நபர்கள், வெளிநாட்டிற்கு பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று மொகிடின் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து, நாடு தழுவிய நிலையில் உள்ள குடிநுழைவு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு வருவாய் வாரியத்தால் கருப்பு பட்டியலிடப் பட்டவர்கள், ஜூன் 1-ஆம் தேதிக்கு மேல், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என்று விளக்கமளித்தார்.

இதர ஏஜென்சிகளால், 6 லட்சத்து 36,202 மலேசியர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை தடுக்கும் கருப்பு பட்டியலிடப் பட்டுள்ளனர் என்ற தகவலை மொகிடின் பகிர்ந்துக் கொண்டார்.