சுங்கை பாப்பான் தமிழ்ப்பள்ளி மாணவர் பதவி நியமண விழா
Sungai Papan Tamil School Neelam Reading and Duty Student Appointment Ceremony
Date:13 March 2025 News By : Muniandy
சுங்கை பாப்பான் தமிழ்ப்பள்ளி நீலாம் வாசிப்பு மற்றும் கடமை மாணவர் பதவி நியமண விழா நிகழ்ச்சி
ஜொகூர், மார்ச் 13: இன்று சுங்கை பாப்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் *கடமை மாணவர் பதவி நியமன விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய கடமை மாணவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, பள்ளியின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு முனியாண்டி (Pegawai JPJ) கலந்து கொண்டு மாணவர்களுக்குக் கடமையைச் சரிவர நிறைவேற்றுவதன் அவசியத்தைச் சிறப்பான முறையில் உரையாற்றினார். அவர், மாணவர்கள் ஒழுங்குமுறையுடன் செயல்பட்டு, நல்ல தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
மேலும், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி நூலகம் கதை புத்தகங்களும் நீலாம் அட்டையினையும் வழங்கும் அங்கமும் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடலோரத்தில் அமைந்திருக்கும் சிறிய பள்ளியாகவும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருந்தாலும் எந்தவொரு நிகழ்வாயினும் சிறப்பான முறையில் ஏற்று நடத்தும் பள்ளியின் ஆசிரியர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும், பள்ளி அறவாரியத்திற்கும் தலைமையாசிரியர் திரு ஜெகதீஸ் ராஜா அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெறிவித்துக்கொண்டார். அதோடு, தூரம் நேரம் பாராது வெகுதூர பயணத்திற்குப் பின் நிகழ்வில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தலைமைக்குழு நன்றிகளை நினைவுப்பரிசாக எடுத்து வழங்கினர்
.
இவ்விழாவின் மூலம், மாணவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, பள்ளி சமூகத்தில் நேர்மையான வளர்ச்சிக்கான ஒரு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது.
www.myvelicham.com / face book /tik tok / you tube