கடனைத் திருப்பிச் செலுத்தாத சுரேஷ் குமார்... ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு .

Suresh Kumar fails to repay loan Court verdict in favour of Oms P. Thiagarajan.

கடனைத் திருப்பிச் செலுத்தாத சுரேஷ் குமார்... ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு .
கடனைத் திருப்பிச் செலுத்தாத சுரேஷ் குமார்... ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு .

Date : 16 March 2025 News By: Jayarathan

ஓம்ஸ். பா. தியாகராஜனின் 7 லட்சம் வெள்ளியை 
சுரேஷ் குமார் திருப்பிச் செலுத்த வேண்டும்
நீதி மன்றம் உத்தரவு  

 
    சில வருடங்களுக்கு முன்பு ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும், மலேசிய அரிமா சங்கத் தோற்றுநருமான ஓம்ஸ். பா. தியாகராஜன் அவர்களிடம் பிரதமர் அன்வாரின் அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுரேஷ் குமார் 17 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியைப் பெற்று, அதனை திருப்பிச் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், நீதிமன்றம் அத்தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு சுரேஷ் குமாருக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

 

கடந்த 2023 செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் முதல் கட்டமாக 10 லட்சம் 60 ஆயிரம் வெள்ளியையும், செலவுத் தொகையாக 15 வெள்ளியையும் சேர்த்து 10 லட்சத்து 75 ஆயிரத்தை வழங்க நீதிமன்றம் கேட்டுக் கொண்டும், அத்தொகையை கொடுக்காமல் இழுபறியில் இருந்த வந்த சுரேஷ் குமாருக்கு எதிராக நீதிமன்றம் திவால் நோட்டீஸ் தாக்கல் செய்தவுடன், உடனே 10 75 ஒம்ஸ் அவர்களின் வழக்கறிஞரிடம் ஒப்படைத்துள்ளார். 

மீதமுள்ள 7 இலட்சம்  வெள்ளியை நீதிமன்றம் விரைவில் செலுத்த வேண்டுமென்றும் சுரேஷ் குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

www.myvelicham.com /  face book / You Tube /Tik Tok