நடிப்பிலும் இசையிலும் கலக்கும் நம்ம தமிழ் பெண் சியாமளா.

Syamala is our Tamil girl who mixes acting and music

நடிப்பிலும் இசையிலும் கலக்கும் நம்ம தமிழ் பெண் சியாமளா.
நடிப்பிலும் இசையிலும் கலக்கும் நம்ம தமிழ் பெண் சியாமளா.
News By : Ganapathy
 
25 Sept 2024 - இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இந்த உலகில் இல்லை. இசையோடு சேர்ந்து நடித்தால் யார்தான் விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட துறையில் கலக்கி வரும் சியாமளா பற்றி
,
இவரின் தந்தையார் பெயர் அப்புன்னி. கெர்லிங் தோட்டப்புறத்தில் பிறந்து வளர்ந்த இவர் 1978 ல் வீனஸ் கலை மன்றம் மூலம் கலைத் துறைக்கு வந்தார். முதல்முதலில் தோட்டக்கார சின்ன மாமா எனும் பாடலை பாடி  அறிமுகமானார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே தலைநகரை நோக்கி வந்ததால் இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தது. மிகவும் சிறப்பான முறையில் இவரது கலைப் பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் இவருக்கு திருமணம் முடிந்தது.இவரது கணவர் பெயர் திரு மகேந்திரன். திருமணமான புதிதில் இவர் கலைத் துறையை விட்டு வழக்கம்போல் ஒதுங்கியிருந்தார்.பெண்கள் என்றாலே திருமணத்துக்குப் பிறகு  எந்தத் துறை எனினும் ஓர் இடைவெளி ஏற்படும்.அதே இடைவெளி தான் இவரது வாழ்க்கையிலும் ஏற்பட்டது. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயான பின்னர் கணவர் இவரை மீண்டும் கலைத்துறையில் தனது பயணத்தை துவக்கும் படி அன்புடன் வேண்டிக் கொண்டதோடு உன் திறமையை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டும் என்ற ஓர் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தனது மனைவிக்குக் கொடுத்தார். தன் கணவர் கொடுத்த ஊக்கத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்காக காத்திருந்தபோது தான் திரு. ஒய். ஜி. மகேந்திரன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நடிப்புக் கல்லூரியில் மூன்று மாதம் திரு.மோகன் என்பவரிடம் நடிப்புத் திறனை பயின்றார். இதன் மூலம் நாடகத்துறையில் முதல் முதலில் அவள், என்ற நாடகத்தில் நடித்து நடிப்பில் முதல் தடத்தை பதித்தார். இதன் மூலம் நாடகங்களிலும் வாய்ப்பு பெருவாரியாக கிடைத்தது. நாடகத்தோடு மற்றும் நிற்காமல் தனது கலைப் பயணத்தை திரையுலகிலும்  பதிவு செய்தார். மம்முட்டி நடித்த சீனியர் ஜூனியர் திரைப்படத்தில் இவரது முதல் கதாபாத்திரம் அரங்கேறியது. அதே போல் குட்லக் என்ற படத்திலும் ஒரு காட்சியில் வந்து செல்வார். நாடகத்துறையில் வானொலி நாடகம் தொலைக்காட்சி நாடகம் மட்டுமல்லாமல் மேடை நாடகங்களிலும் இவர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
 
  2004 ஆம் ஆண்டு எஸ்பி வீரம்மா எனும் ஆல்பத்தில் பாடல்களை வெளியிட்டார். இதில் சுமார் எட்டு பாடல்கள் உள்ளது.இதில் தாலாட்டுப்பாட்டும் அடங்கும். இந்தத் தாலாட்டுப் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் J.V.மணிமாறன் இதனைப் பாடிய எனக்கு மிகச் சிறந்த விருது கிடைத்தது. மீண்டும் 2010 புனர்ஜனம் எனும் மற்றொரு ஆல்பம் வெளியிட்டார். இதில் உள்ள பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த பாடகியாகவும் நான் தேர்வு செய்யப்பட்டதை மிகவும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுபோல மலேசியாவில் உள்ள பல்வேறு கிளப் புகளில் பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் நிகழ்வுகளை தற்போது குறைத்து விட்டதாக கூறும் தற்போது இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு காரணம் தனது கணவர் மற்றும் குடும்பத்தை சார்ந்தோர் கொடுத்த ஊக்கம்தான் என்று மிகவும்  அழகாக கூறிக் கொண்டதோடு, தனது நன்றிகளை தனது கணவருக்கும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்ளும் வேளையில், தனது கணவர் தற்போது இல்லை எனும் விஷயத்தை  மிகவும் வேதனை யோடு கூறினார். அத்தோடு கணவர் இல்லாமல் தனது குழந்தைகளை தனி ஒரு ஆளாக இருந்து இந்த அளவுக்கு முன்னுக்குக் கொண்டு வந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்போது பெண் சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இவர் விளங்குகிறார் என்றும் கூறலாம். 
 
2018-19 ஆம் ஆண்டுக்கான இன்வெஸ்ட்மெண்ட் கலைமாமணி விருதினை  பெற்றதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இசையாலும் தனது நடிப்பாலும் பலரின் இதயங்களை ஈர்த்துள்ள சியாமளா அவர்கள் கலைத்துறையில் மேலும் மேலும் சாதிக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் நிச்சயமாக அவர்கள் விளங்குவார்கள் எனும் நம்பிக்கையில் அவர்களுக்கு வாழ்த்துக்களை மை வெளிச்சம் தெரிவித்துக் கொள்கிறது.