தமிழ்ப்புத்தாண்டு திருவிழா களை கட்டியது.

Tamil New Year Festival Weeds built.

தமிழ்ப்புத்தாண்டு  திருவிழா   களை கட்டியது.

Date: 20 APRIL 2025  News By: Rm Chandran 

அண்மையில் தமிழ்ப்புத்தாண்டு  திருவிழா பினாங்கு, ( Prai Taman Chai Leng Park Dewan Serbaguna ) வில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றதாக ஏற்பாட்டுக் குழுத்தலைவர் ஜோதி தெரிவித்தார்.  

பினாங்கு மாநில சுற்றுச் சூழல் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு அவர்கள்  நிகழ்ச்சியை தொடக்கி வைத்து மக்களுடன் கலந்துரையாடியதாகக் கூறினார்.

 நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவற்றில் சிலம்பாட்டம்,இசையுடன்  கூடிய புலியாட்டம் ,மயிலாட்டம் ,ஒயிலாட்டம்,கிராமிய நடனம் , கும்மியாட்டம் , நாதஸ்வரம்,தவில் மங்கல இசை,  மா கோலம், இந்தியர்களின் அறு சுவை உணவு பதார்த்தங்கள் போன்றவையும்  அடங்கும்.

 இவற்றுடன் பல்லாங்குழி,தாயம்  ஆகியவிளையாட்டுகளும்,மூத்த குடி மக்களின் பாரம்பரிய கலாச்சார ஆடை அணிகளுடன் கலந்து கொண்டதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து  என்றார்.

பினாங்கு மாநிலத்தில் முதன் முறையாக இது போன்ற தமிழர் பண்பாட்டு கூறுகளை மையப்படுத்தி நடை பெற்ற வரலாற்று பூர்வமான நிகழ்வு இதுவென பார்வையாளர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதாகவும்  பிறை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு'வின்  மக்கள் சேவை மையத்துடன்  இணைந்து பினாங்கு மணி மன்றம்  செயல்பட்டதாகவும்   டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு  அவர்களின் செய்தி தொடர்பாளர் ஜோதி குறிப்பிட்டார்.

www.myvelicham.com Face book Tik Tok YouTube