தமிழ்ப்பள்ளிமாணவர்கள் ஆண்டுக்கு ஆண்டு சரிவு? ஏன்? யார் காரணம்?

Tamil school students declining year after year? Why? Who is responsible?

தமிழ்ப்பள்ளிமாணவர்கள் ஆண்டுக்கு ஆண்டு சரிவு? ஏன்? யார் காரணம்?
தமிழ்ப்பள்ளிமாணவர்கள் ஆண்டுக்கு ஆண்டு சரிவு? ஏன்? யார் காரணம்?

Date : 19 Feb 2025 

News By : Ponrangan 

மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரிய மன்றத்தலைவர் ஐயா பாண்டியவன் அவர்கள் இவ்வாண்டு 2025 தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் இந்திய மாணவர்கள் பதிவு நிலை குறித்து அறிக்கை அட்டை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் தமிப்பள்ளி மாணவர்கள் குறைந்துப் போகும் நிலை தெரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுக்கு 2% அல்லது 3% குறைகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன! இதில் கடந்த 2024   ஆண்டில் தமிழ்ப்பள்ளி மாணவர் பதிவு 48% விகிதாச்சாரமாக குறைந்து, மீதமான 52% மாணவர்கள் தேசிய அல்லது சீனப்பள்ளிகளில் சேர்ந்தனர். குறிப்பாக சீனப்பள்ளியில் 13 ஆயிரம் மாணவர்கள் என ஆய்வுக்கூறுகிறது

இந்தக் கணக்கெடுப்பு பதிவு நிலை அறிக்கையில் அந்த விபரீத வேற்றுப்பள்ளிகளின் ஓப்பீடல் கணக்கை காணமுடியவில்லை. 
 தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகள் கணக்கையும் காணோம். ஒரு வியப்பு என்ன வென்றால், கடந்த இரண்டு நாட்களாக நாட்டின் தமிழ் ஊடகங்கள் தமிழ்ப்பள்ளிகளை வாடகைக்கு எடுத்தது போல் புகழ் பாடி தமிழ், தமிழ்ப்பள்ளிகளின் ஆரவார செய்திகளை போடுகிறார்கள்.

மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க ! அம்பை எய்திவர்கள் யார் என்ற மாணவர்கள் பதிவு இழப்பை அறிய,தீர்வுக்கு வழியில்லா இனத்தலைவர்களை வைத்துள்ள அவலம் இன்னும் தொடர்கிறது. இதைச்சொன்னால் என க்கு "வேறு வேலை இல்லை" என தலைவர்கள் குதிப்பார்கள்.காலத்துக்கும் பதவிகளை வைத்துக்கொண்டு அறிவு மங்கிய சோம்பேறிகள் குற்றம் சுமத்துவார்கள்

நாட்டில் 400 க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி வகுப்புகள் இல்லை. பாலர் பள்ளிகளில் தொடர்ச்சிதான் தமிழ்ப்பள்ளிகளின் வெற்றி. இதை  உணர்ந்தும் நடவடிக்கை திட்ட வரைவுகளை தலைமை ஆசிரியர்கள் செய்வதில்லை. "நமக்கு ஏண்டா இந்தத்தொல்லை" என மூளை குறுகியவர்களை பார்த்திருக்கிறோம்.

பள்ளி வகுப்பறைகளில் பழைய நாட்காளிகள், மேசைகளை,  புத்தகங்களை,   அடுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் இவர்களுக்கு அதை பாலர் பள்ளி வகுப்பாக்க சிந்தனைகள் இல்லை என்ற வியப்பு தொண்டையில் தொக்கி நிற்கிறது.

தமிழுக்கு மா நாடு, தமிழனுக்கு மாநாடு கோவிலுக்கு மாநாடு,திருவிழாவுக்கு மாநாடு, எடிசன் சினிமா விழாவுக்கு மாநாடுகள். கண்ணதாசன், வாலி, வைரமுத்து,கம்பர்க்கெல்லாம் புகழ்விழாக்கள். ஆனால் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர் சேர்க்க ஒரு விழா இல்லை.

கடந்த 2020 ல் பிரிக்பீல் கண்ணிழந்தோர் மண்டபத்தில் த.பள்ளிக்கு மாணவர் சேர்க்கும் புலன அறிமுக சந்திப்புக்கு 300 பேர் தமிழ் ஆர்வலர்கள் வந்தார்கள் ஆனால் மொழியில் பிழைக்கும் அறிவு ஜீவிகளை காணோம். ஊடக ஊமைகளை காணோம். வந்தாலும் காசு கேட்கிற இழி நிலையில் தமிழ்  மொழிக்கு செயற்கை வாடகை உப்புசங்கள்தான் வரும்.

 நாட்டில் 3000 க்கு மேற்பட்ட இயக்கங்கள், 4000 கோவில்கள், 530 பெ.ஆ சங்கங்கள், பள்ளி வாரியங்கள், மூன்று நான்கு இன அரசியல் கட்சிகள், இரண்டு பல்லின பல்லிளிச்சான் பல்லின கட்சிகள்,நாடாளமன்ற சட்டமன்ற ஊமைகள், செனட்டர்கள்,3000 க்கு மேற்பட்ட அரசியல் கட்சி கிளைகள். அரசியல் மா நாடுகள், வெட்டித்தன சுயம்ப தீர்மானங்கள் என பலவீனப்பட்டியல் நீலலாம். ஆனால் தமிழ்ப்பளிகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு இல்லை! பள்ளிகள் அழிக்க அகற்றுவதற்கு எதிர்ப்பு இல்லை! பள்ளி பேருந்து விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பில்லை! கூட்டம் கூட்டி பேக், சட்டை, சப்பாத்து வாங்கி அரசியல்தனம் செய்யும் ஆர்வத்துக்கு குறையில்லை?

சிறு பள்ளிகள்  ஒன்றிணைக்கும் ஒரு பள்ளியாக மாறும் பொழுது பெற்றோர்களின் வேலைச்சுமை, நேரச்சுமை, பணச்சுமை, பயண நேரச்சுமை, போக்கு வரத்து பணச்சுமை சாப்பாடு,காப்பீடு இவைகளை சிந்திக்க இந்த நாட்டில் ஆளே இல்லையா ?
 பள்ளிகளின் நிலத்தை, தோட்டத்தை விற்க வெறித்தன வேட்டையன்களுக்கு மொழி,இன அறம் விளங்க வில்லை ஏன்?

திருக்குறள் படிச்சோம், ஆத்திச்சூடி, சிலப்பதிகாரம், திருவாசகம், திருவெண்பா, தமிழ் வாழ்த்து பாடுகிறோம்,அகம் புறம் பேசுகிறோம்,நன்னெறிகள் படிக்கிறோம், தமிழ் செம்மொழி பேசுகிறோம், உலக முதல் மொழி என்கிறோம்,பல ஆயிரம் பி எச்டி முனைவர்கள். 10 ஆயிரம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை மேம்பாட்டுக்கு என்ன செய்கிறோம்? 

மீண்டும் அடிப்படைக்கே தமிழ்ப்பள்ளி நிர்வாகம் என ஒரு நாடகம் நடந்தது. இப்படி பல புதிய பக்கங்களை படைத்தும் பழைய  விடை பூஜியதான் என நினைக்கும் போது. தமிழ்ப்பட சினிமா நடிகர்கள் மேல் என சிரிக்கலாம்.

பொன் ரங்கன். அம்பாங்.