பகாவ் பட்டிணத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
Tamil Culture Celebration in Bahau Negeri Sembilan
பகாவ் 13May 2023
பகாவ் பட்டிணத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
அன்மையில் ஜெம்பூல் இந்திய சமூக முன்னேற்ற கழகம் மற்றும் மலேசிய உருமி இசை இயக்கம் இணைந்த ஏற்ப்பட்டில் தமிழர் திருநாள் சிறப்பாக செய்யப்பட்டது.
தோரணம் பின்னுதல்,பூ சரம் தொடுத்தல்,வர்ணம் தீட்டுதல்,கயிறு இழுத்தல்,சட்டி உடைத்தல் என தமிழர் பாரம்பரிய போட்டிகளும்,உருமி மற்றும் பறை இசைக்கலஞர்களின் இசை ,சிலம்பம் கண்காட்சி,கலாச்சர நடணம் என பகாவ் பட்டிணத்தில் முதன் முறையாக 1000 க்கும் மேற்ப்பட்ட மக்கள் முன்னிலையில் நடத்தது,
இதில் சிறப்பு பிரமுகர்களாக பகாவ் சட்ட மன்ற உறுப்பினர் Yb Teo வும் ,YB குனாவும் கலந்து கொண்டனர்.
ஜெம்பூல் இந்திய சமூக முன்னேற்ற கழக தலைவர் திரு அசோக் குமார் வரவேற்ப்புரையாற்றி வெற்றி பெற்ற போட்டியாளர்களுப்கு கழக சார்பில் ரொக்க பரிசை வழங்கினார் ,உருமி இசை இயக்க தலைவர் திரு சிவா நன்றியுரையாற்றினார்,
நிகழ்ச்சி ஒருங்கனைபாளர் கவிமாறன் மொத்த நிகழ்ச்சியையும் சிறப்பாக வழிநடத்தினார் மற்றும் கழக, இயக்க உருப்பினர்களின் உதவியோடு மிக சிறப்பாக தமிழர் திருநாள் நடந்தேறியது. உருமி இசை இயக்கம் சார்பில் 25 பகாவ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் பொருள்களும், வயது மூத்தவர்களுக்கு துனிமணிகளையும் புத்தாண்டு பரிசாக தந்தனர்.அதோடு பகாவ் P.தனம் நகைக்கடை உருமையாளர் 16 தாய்மார்களுக்கு தங்க மூக்குத்தி பரிசாக தந்தார்.அதோடு சுவையான நமது பாரம்பரிய உணவும் வழங்கப்பட்டது ,.
www.myvelicham.com Generation Young News Portal