தமிழ்தனாவின் ஶ்ரீ ருத்ரன் நடனக்குழு அபார வெற்றி
Tamildhana's Sri Rudhran Dance Troupe Wins Huge Success

24 March 2025 News By :Thanaletchumy Masai
தமிழ்தனாவின் ஶ்ரீ ருத்ரன் நடனக்குழு அபார வெற்றி
அண்மையில் ஜொகூர் சூத்ரா மோலில் கலர்ஸ் ஓவ்ப் இந்தியா ஏற்று நடந்திய அனைத்துலக தீபாவளி கொண்டாட்டம் 2024 மிகச் சிறப்பாக நடந்தேறியது. மொத்தம் 759 கலை சார் படைப்புகளைப் பள்ளி மாணவர்கள்,கலைஞர்கள் இளைஞர்களென பலர் அரங்கேற்றம் செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் தத்தம் பெயர்களைப் பதித்து சாதனை படைத்தனர்
.
அவர்களுல் தமிழ்தனா ஶ்ரீ ருத்ரன் நடனக்குழு மலேசிய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்ததோடு குழு நடனப்போட்டியில் தேர்வுச்சுற்றிலும் இறுதிச்சுற்றிலும் தமது அபார நடன ஆற்றலை அரங்கேற்றி, முதல் நிலை வெற்றியாளராக இறைவனின் நல்லாசியோடு வாகை சூடியது.
ஆசிரியரும், தன்முனைப்பு பேச்சாளரும் மற்றும் நடன பயிற்றுநருமான தனலெட்சுமி தமிழ்த்திரு அவர்களின் நடனக்குழுவில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் முறையே
டிவ்யா த/பெ ரவிந்திரன் - தாமான் நூசா டாமாய் இடைநிலைப்பள்ளி
நவினா த/பெ தமிழ்ச்செல்வன் - பண்டார் ஶ்ரீ அலாம் 1 இடைநிலைப்பள்ளி, பவித்ரா த/பெ தமிழ்ச்செல்வன் - பண்டார் ஶ்ரீ அலாம் 1 இடைநிலைப்பள்ளி, நித்தியாஷினி த/பெ வடிவேலன் - பண்டார் ஶ்ரீ அலாம் 1 இடைநிலைப்பள்ளி
தீப்திஷா த /பெ சசிதரன் - பண்டார் ஶ்ரீ அலாம் 1 இடைநிலைப்பள்ளி ஆகிய மாணவர்கள் இவ்வெற்றியை வசமாக்கி தமிழ்தனா ஶ்ரீ ருத்ரன் நடனக்குழுவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என ஆசிரியை தனலெட்சுமி கூறினார்.
இவ்வெற்றியைப் பெற தமக்குப் பலவகையில் பக்கபலமாக இருந்த ஶ்ரீ ருத்ரன் நடனக்குழுவின் பெற்றோர்கள், பாசிர் கூடாங் தாமான் ரிந்திங் குடியிறுப்புப் பகுதியின் நகரான்மைக்கழகம், மாசாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் மற்றும் குமுதாஸ் சிகை அலங்கார நிலையம் ஆகியோருக்கு நன்றிதனைக் கூறிக்கொள்வதாகவும் கூறினார்.
www.myvelicham.com / facebook /tik tok /you tube