தேவாரம் பாடி, அம்மி குத்தி, தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

Thaipoosam festival is celebrated with Thevaram songs, Ammi Kuthi and Ammi Kuthi.

தேவாரம் பாடி, அம்மி குத்தி, தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
தேவாரம் பாடி, அம்மி குத்தி, தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

Date : 12 Feb 2025 RM Chandran 

கூலாய் தம்போய் நகரில் 1935 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆலயமாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில்,

ஜோகூர் காவல் துறை மேலதிகாரி டத்தோ குமார், அவரின் துணைவியார் இருவரும் பால் குடம் எடுத்து தம்போய் முருகனுக்கு தங்களின் நேர்திக்கடனை செலுத்தினர்.

நமது பாரம்பரிய கலாச்சார மரபினை பறை சாற்றும் வகையில் தேவாரம் பாடி, அம்மி குத்தி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது.  இவ்வகையான இந்து சமய  பாரம்பரிய கூறுகளை கடைபிடித்து வருவதாக ஆலயத்தலைவர்  ஆறுமுகம் கூறினார். திவ்ய  தண்ணீர் அமிர்த பூஜை முடிந்த பிறகே அடுத்த கட்ட பணிகள் ஆரம்பமாகிறது .

இந்த திவ்ய தண்ணீர் அமிர்த பூஜை 1935 ஆண்டு தொடங்கி இன்று வரை தம்போய்  அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகமும் தம்போய் மக்களும் கடைபிடித்து வருகிறார்கள் இதுவே இந்த தம்போய் சுப்ரமணியர் ஆலயத்தின் சிறப்பாக தென்படுகின்றது.

இந்த பூஜையானது ஆண்கள் அரிசி மாவு இடித்து, உருண்டை பிடித்து, எண்ணெய் சட்டியில் பொரித்து முருகப்பெருமானிடம் சமர்ப்பணம்
செய்த பிறகே மற்ற பூஜைகள் அனைத்து நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து இரத ஊர்வலம்  அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் கோயில் என சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தம்போய் நகரை சுற்றி வருவதாகவும் ஆலயத்தலைவர் ஆறுமுகம் குறிப்பிட்டார்.

இந்த தைப்பூசத்திருவிழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக  புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைஷான் (Suhaizan) ஜோகூர் காவல் துரை மேல் அதிகாரி டத்தோ குமார் மனைவி இருவரும்  பால் குடம் எடுத்து தம்போய் முருகனுக்கு தனது நேர்த்தி கடன் செலுத்தினர் ஆகியோர் வருகை புரிந்து தைப்பூசத்திருவிழாவில் கலந்து கொண்டதாகவும்
இந்த ஆலயத்திற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி வருகிறார் மாண்புமிகு கே.ராவின் குமார் என்றும் ஆலயத்தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.