தம்புன் கோப்பிசான் அருள்மிகு கண்ணனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் ஆலய பங்குனி உத்திர திருவிழா.
Thambun Koppisan Arulmigu Kannanur Sri Maha Mariamman Kaliamman Temple Panguni Uthiram Festival.

Date : 09 April 2025 News By: Rajen ipoh
தம்புன் கோப்பிசான் அருள்மிகு கண்ணனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் ஆலய பங்குனி உத்திர திருவிழா.
தம்புன் அருள்மிகு கண்ணனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் ஆலய வருடாந்திர பங்குனி உத்திர
திருவிழா வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடை பெறும் என தகவல் வழங்கிய ஆலயத் தலைவர் பெரியவர் இராமசாமி சுப்பிரமணியம் இந்த திருவிழாவில்
ஏறக்குறைய ஏழாயிரம் பக்தர்கள் வருகை அளிப்பர் என சொன்னார்.
ஒரு காலத்தில் இந்த ஆலய தேரானது ஈப்போ பட்டணம் பவனி வந்துள்ளது என சொன்ன அவர் இந்த ஆலயத்திற்க்கு
ஏன் கோப்பிசான் கண்ணனூர் என
பெயரிடப்பட்டது என விளக்கம் அளித்தார்.
இப் பகுதியில் ஈய லம்ப நடவடிக்கைக்கு தொழிலாளர் தேவைப்பட தமிழ் நாடு கண்ணனூர் எனும் கிராமத்திலிருந்து
தொழிலாளர்களை பிரிட்டிசார் தருவித்து வேலைக்கு சேர்த்ததாக பழைய நினைவுகளை அவர் பகிர்ந்தார்.
தொழிலாளிகள் வழிப்பாடிற்க்காக கண்ணனூர் கிராமத்திலிருந்து மண் கொண்டு வந்து சிலையை செதுக்கி வழிப்பட்டு வந்ததாக சொன்னார்.
பின் இதே தொழிலாளர்களை கோப்பெங் எனும் ஊரின் கோப்பிசான் எனும் இடத்தில் ஈய லம்ப
நடவடிக்கையில் ஈடுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
அதன் பிறகுதான் தம்புன் கோப்பிசான் எனும் அடை மொழி பெயரை சூட்டியதாக ஞாபகத்திற்கு கொணர்ந்தார்
www.myvelicham.com / Tik Tok / face book / google