'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது' கவிதைத் தொகுப்பும் ' ...ஜாசின் ஏ.தேவராஜன் ஏழாவது குத்தம்'

'That fly survived' is a collection of poems and 'Ezhavath Kutham' Nayanam is editor by Mr. Athi Rajakumara

'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது' கவிதைத் தொகுப்பும் ' ...ஜாசின் ஏ.தேவராஜன் ஏழாவது குத்தம்'
'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது' கவிதைத் தொகுப்பும் ' ...ஜாசின் ஏ.தேவராஜன் ஏழாவது குத்தம்'

Date 15 Dec 2024 - News By : Devarajen  

ஜாசின் ஏ.தேவராஜன் எழுதிய 'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது' கவிதைத் தொகுப்பும் 'ஏழாவது குத்தம்' சிறுகதைத் தொகுப்பும்! 

இந்த இரு நூல்களும் கடந்த 21.12.2014 -ஆம் நாள் தலைமை தலைநகர் தான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் நடைபெற்றது. உடல் நிலை காரணமாகத் தலைமை தாங்க வேண்டிய துன் டாக்டர் ச.சாமிவேலு அவர்கள் வர இயலாமற் போகவே, அவ்விடத்தை நயனம் ஆசிரியர் திரு ஆதி இராஜகுமாரன் அவர்கள் திறம்பட தலைமையுரையாற்றிச் சிறப்புச் செய்தார்.

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்குவது இதுவே முதல் முறை எனச் சொல்லி நூலில் கதைகளை மிக அழகாக எடுத்தாண்டு பேசியதோடு தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'இனி' எனும் தலைப்பில் அமைந்த கதையை உலகத்தரம் வாய்ந்த கதை என உணர்வுப்பூர்வமாய்வாழ்த்திப் பேசினார் ஆதி இராஜகுமாரன் அவர்கள்.

முதல் பெறுநராகத் தொழில் முனைவர் டத்தோ புத்ரி பரமசிவம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். இனிய இலக்கிய தோழமையும் தங்கமீன் பதிப்பகத்தின் திரு பாலு மணிமாறன் அவர்கள் சிங்கையிலிருந்து வந்து சிறப்பித்துச் சுவைபட உரையாற்றினார்.

www.myvelicham.com Face Book,Tik Tok ,