150 ஆண்டுகள் பழமை வாய்ந்த செட்டி பாடாங் என்ற பெயர் மறுபடியும் சூட்டப்பட து.
The 150-year-old Klang Chetti Padang was renamed.
கிள்ளான், 20 ஜூன் 2023
இந்தியச் சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெயர் மாற்றம் கண்ட
கிள்ளான் செட்டி பாடாங், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பழைய
பெயரை மீண்டும் பெற உள்ளது.
சிலாங்கூர் மாநில ஆட்சி குழு முடிவு மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர்
நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.
டத்தாரான் கிள்ளான் @ செட்டி பாடாங் என்ற பெயருடன் கூடிய
அலங்கார வளைவு இன்னும் சில வாரங்களில் அங்கு பொருத்தப்படும்
என்று அவர் சொன்னார்,
இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக மையமாக விளங்கி வரும் கிள்ளானில் உள்ள இந்தத் திடலுக்கு செட்டி பாடாங் என்ற பெயர் மறுபடியும் சூட்டப்பட வேண்டும் என்று இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த
அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தமிழ்நாட்டின் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வணிகர்கள்
கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் மாட்டு வண்டிகளில் அங்கு உப்பு
வியாபாரம் செய்ததன் அடையாளமாக அந்தத் திடலுக்குச்
செட்டி பாடாங் என பெயர்சூட்டப்பட்டது.
இந்தத் திடல் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைப் புரிந்த பல விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி மையமாகவும் விளங்கியது.
இந்தத் திடலையொட்டி 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ
நகரத்தார் தண்டாயுதபாணிஆலயமும் வீற்றிருக்கிறது Myவெளிச்சம்.com இணையதளம் செய்திகள் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .