அமலாக்க அதிகாரிகளின் அத்துமீறிய ஆணவம்.

The arrogance of the enforcement officers.

அமலாக்க அதிகாரிகளின் அத்துமீறிய ஆணவம்.

03 April 2025 News By:RM Chandran  

கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் ( Kuala Lumpur Jalan Tuanku Abdul Rahman) பகுதியில் பலூன் விற்பனையாளருடன் நடந்த மோதலுக்குப் பிறகு, கோலாலம்பூர் நகரமன்ற (DBKL) அமலாக்க அதிகாரிகளின் ஆணவ போக்கை அன்வாரின் அரசியல் உதவியாளர் கண்டித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அவர்களின் அரசியல் செயலாளராக இருக்கும் கமில் முனிம், ( Kamil Munim) இந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“தெரு விற்பனையாளர்களை கடுமையாக தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழிவான செயலாகும். (DBKL )
எதனை  நியாயப்படுத்தினாலும், இதுபோன்ற கொடூரமான மற்றும் ஆணவமான அரக்கத்தனமான முரட்டுத்தனமான செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது,” என்று கமில் X  (Kamil X)
தளப்பதிவில் குறிப்பிட்டடுள்ளார்.

“ரமலான் மாதம் ( Bulan Ramadan) நோன்பு நோற்பதும், நல்ல செயல்களைச் செய்வதும் நம்மை மனிதாபிமானப்படுத்தத் தவறினால், ஏழைகளிடம் இரக்கத்தையும் கருணையையும் வெளிப்படுத்தாவிட்டால் இதற்கு என்ன அர்த்தம்?

சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோக்கள், டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளுக்கும் உரிமம் பெறாத தெரு வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு,  ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானுடன் நடந்த ஒரு சலசலப்பைக் காட்டுகின்றன.

ஒரு வீடியோவில், பலூன் விற்பனையாளருடன் அமலாக்க அதிகாரிகள் கைகலப்பில் ஈடுபட்டதையும், இறுதியில் அவர் தரையில் சாய்க்கப்பட்டதையும் காட்டுகிறது.

அந்த நபருக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று அமலாக்க அதிகாரிகளிடம் பலர் கத்துவதை பதிவுகள் காட்டுகின்றன.