தினசரி நாளிதழ்கள் தாக்குப் பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினார் ஷாலு பிள்ளை.

The Daily news Pepper is a bloodbath Mrs,Shalu Pillai said that sayings not attract people.

தினசரி நாளிதழ்கள் தாக்குப் பிடிக்குமா என்று  கேள்வி  எழுப்பினார் ஷாலு பிள்ளை.
தினசரி நாளிதழ்கள் தாக்குப் பிடிக்குமா என்று  கேள்வி  எழுப்பினார் ஷாலு பிள்ளை.

News By: Sharlu Johor

24 August 2024 - பத்திரிகை விற்பனை சரியாக இல்லை என்று கூறி வருத்தப்படுகின்றனர். இதற்கான காரணம் இணைத்தள ஊடகத்தின் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து விட்டது. எல்லா தகவல்களையும் உடனுக்குடன் வெளியிட்டு விடுகிறார்கள் அனைத்தும் மிக விரைவாக  மக்களை சென்றடைந்து விடுகிறது.

அவ்வாறான நிலையில் எவ்வாறு தினசரி நாளிதழ்கள் தாக்கு பிடிக்கும்?
எல்லா செய்திகளும் முக நூலிலும் இணைத்தளத்திலும் வந்து விடுகிறது.பத்திரிகைகளில் அந்தச் செய்திகள் வரும் போது அது பழைய செய்திகளாகி விடுகிறது

.

ஆகவே பத்திரிகை விற்காமல் போனதற்கு இதுவே முதன்மை காரணமாகும் என்று கூறினார் ஷாலு. அதேவேளை, பத்திரிக்கை படிக்கும் மக்கள் இன்று அதிகரித்து விட்டார்கள் என்றே கூறவேண்டும். நிறைய தகவல்களை தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் விரைவாக மக்களை சென்றுச் சேருகிறது இணையச்செய்திகள்.

சில பத்திரிகைகள் பக்கத்தை நிரப்புவதற்காக செய்திகளை பெரியதாக தருகிறார்கள் அதனை யாரும் நேரம் எடுத்து படிப்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒன்றை உதாரணமாக காட்டலாம். 'மை வெளிச்சம்' செய்திகள் மிகவும் கட்சிதமாக உள்ளன. சொல்ல வந்த தகவல்களை ரத்தனச்சுறுக்கமாக செய்திகளாக வழங்குவது சிறப்பாக உள்ளது.

இன்றைய நவீன தொழில் நுட்பக்காலத்தில் இவைதான் மக்களை கவர்கின்றன.மணிக்கணக்கணக்கில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு படிக்க யாருமே விரும்புவதில்லை. வரக்கூடிய காலத்தில் இணைய வழியிலான ஊடகங்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி விடும் காலம் வெகு தூரமில்லை என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்து இல்லை.

உடனுக்குடன்  செய்திகளை நேரலை செய்து விடுகின்றன, இணைய ஊடகங்கள்தான்  விரைவாகச் செய்திகளை மக்களிடையே கொண்டுச்சேர்க்கும் பணிகளை செய்கிறது என்று கூறினார் Mrs,ஷாலு பிள்ளை.