மஇகா செய்துள்ள முடிவு இந்தியச் சமூகத்திற்கு ஒரு நல்ல அடித்தளம்...டாக்டர் ஜியார்ஜ் குணராஜ்

 The decision taken by the MIC is a good foundation for Indian society... Dr. George Gunaraj

 மஇகா செய்துள்ள முடிவு இந்தியச் சமூகத்திற்கு ஒரு நல்ல அடித்தளம்...டாக்டர் ஜியார்ஜ் குணராஜ்
 மஇகா செய்துள்ள முடிவு இந்தியச் சமூகத்திற்கு ஒரு நல்ல அடித்தளம்...டாக்டர் ஜியார்ஜ் குணராஜ்

07 August 2023

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பாக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு வழங்க மஇகா செய்துள்ள முடிவு இந்தியச் சமூகத்திற்கு ஒரு நல்ல அடித்தளமாக

அமைந்துள்ளதாக சிலாங்கூர், செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜியார்ஜ் குணராஜ் கூறினார்.

இந்நாட்டில் உள்ள இந்தியச் சமூகத்தின் நல்வாழ்விற்காக வரும் சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த முடிவு அமையும் என அவர் சுட்டிக் காட்டினார்.மஇகா தேசியத் தலைவரின் இந்த அறிவிப்பை இந்தியச் சமூகம் வரவேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்

.

இந்தியச் சமூகத்தின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைய இது ஒரு சரியான தருணம் என அவர் தெரிவித்தார்.

இந்தியச் சமூகத்தின் குரல்கள் அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் கேட்பதை உறுதி செய்ய இந்த ஒற்றுமை மிக அவசியம் அவசியம் என்றார் அவர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்க மஇகாவின் இந்த முடிவு விவேகமான ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நாட்டில் உள்ள இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை காணப் பிரதமருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.

பாக்காத்தானுக்கு ஆதரவை வழங்க மஇகாவின் இந்த முடிவு அந்த கட்சியின் முதிர்ச்சியைச் சித்தரிப்பதாக குணராஜ் குறிப்பிட்டார்.