கப்பின் உறுப்பினர்களின் கனவு நினைவானது.

The dream of the members of the cup is remembered.

கப்பின் உறுப்பினர்களின் கனவு நினைவானது.

Date 29 Dec 2024 News / BY Thennarasu Kluang 

தலைநகர் ஜாலான் காசிபிள்ளையில் ஒரு மாடி கட்டட அலுவலகத்தை கப்பின் வாங்கியது.

2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  கப்பின் என அழைக்கப்படும் மலேசிய இந்திய அரசு சாரா சம்மேளனத்திற்கு தலைநகரில் ஒரு மாடி கட்டடம்  4 லட்சம் வெள்ளியில் வாங்கி அதற்கான முழு பணமும் முழுமையாக செலுத்தப்பட்டது.

 கப்பின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் தென்னரசு சுப்பையா தலைமையில் 362 இந்திய அரசு சாரா அமைப்புகளை ஒன்றிணைத்து தனித் தன்மையோடு செயல்படும் கப்பின், குறுகிய காலத்திலேயே கப்பின் அமைப்புக்கு ஓர் அலுவலக கட்டடத்தினை வாங்கி சாதனைப் படைத்துள்ளது. 


இந்தக் கட்டடப் பணிக்கு முழு மூச்சாக இருந்து நிதிகளைப் பெறுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட கப்பின் தேசியத் தலைவர் டத்தோ தென்னரசு சுப்பையா அவர்களுக்கும், ஆதரவு வழங்கிய  இயக்க தலைவர்களுக்கும் நிதியுதவி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கட்டடக் குழுத் தலைவர் டாக்டர் விஜயகுமார் தமது நன்றி தெரிவித்தார்.