தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவ அரசாங்கமும் பெட்ரோனாஸ் நிறுவனமும் முன்வருகின்றன. 

The government and Petronas are coming forward to help the victims of the fire.

தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவ அரசாங்கமும் பெட்ரோனாஸ் நிறுவனமும் முன்வருகின்றன. 

Date : 04 April 2025 News By;Jayarathan 

 

பெத்தாலிங் ஜெயா: அரசு மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனம் புத்ரா ஹைட்ஸ்-ல் பாதிக்கபட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கு பழுது பார்க்கும் பணியும் போதுமான உதவித் தொகையும் வழங்குவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

பொருள்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில் வீட்டு உரிமயையாளர்களுக்கு தலா RM 5000 உதவித் தொகையும் காயமடைந்தவர்களுக்கு RM 2500 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று பிரதமர் அவர்கள் கூறினார். தேவைப்பட்டால், இந்த உதவித் தொகையை அதிகரிப்பதை குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று பிரதமர் கூறினார். 

இந்த விபத்திற்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைக் குறித்து பெட்ரோனாஸ் நிறுவனமும் அரசாங்கமும் கலந்துரையாடி வருவதாக கூறினார். 

'இது ஒரு வருட காலமாகலாம். இது வழக்கமான ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கும் வெள்ளம் போன்ற நிலை அல்ல. இது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும். ஆனால், இந்த விட்டுப் பகுதிகளை முழுவதுமாக பழுத்துப்பார்த்து அதற்கான உதவித் தொகை வழங்கும் பொறுப்பை மத்திய அரசு, பெட்ரோனாஸ் மற்றும் மாநில அரசுமான நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம். 

அதற்காகத்தான், கவலைப் பட வேண்டாம் என்று நான் கூறினேன். இதற்கு சிறிது நேரம் ஆகலாம் என்று பிரதமர் நேற்று தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு கூறினார். 

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பரிந்துரைகளையும் தீர்வுகளை வழங்கவும் உள்ளூர்வாசிகலுடன் இணைந்து பணியாற்றவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். 

இது வெள்ளத்திலிருந்து மாறுப்பட்டதாகும். ஏனெனில், இதனால் பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இதற்கு இன்னும் கூடுதலான திட்டமிடல் தேவைப்படுகிறது.'

தொடர்புடைய காணொளி: புத்ரா ஹைட்லில் தீ விபத்து. சேதமடைந்த வீடுகளை அரசு மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனம் பழுத்துப்பார்த்து சரிசெய்யபடும் என்று பிரதமர் கூறினார். 

"நான் வலியுறுத்தியபடி இதை சில மாதங்களில் தீர்க்க முடியாது. ஆனால், என் மேல் நம்பிக்கை வையுங்கள். உடனடியாக நடடிக்கைகளை எடுக்க முழு அரசையும் திரட்டுவேன்" என்பதாகும் பிரதமர் அவர்கள் கூறினார். 

"காவல்துறை, தீயணைப்பு மீட்புதுறை மற்றும் நகர சபயினர்களுக்கு இந்த விபத்தை சரிசெய்ய தேவையான எந்தவொரு உதவியையும் புத்திரா ஜெயா வழங்கும்" என்று பிரதமர் அவர் கூறினார். 

"பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்கி உதவிய கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் நன்றி.  ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு அதைத் தீர்வு காண்போம்" என்று பிரதமர்  கூறினார்.

www.myvelicham.com