பன்னாட்டு இணைய பட்டிமன்றம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்த்திரு தனலெட்சுமி
The International Internet Forum went very well. Tamilthiru Dhanalakshmi

Date:20 March 2025 News By: Tamil thiru
இந்தியா. டெல்லி கலை இலக்கியப் பேரவையும், அமெரிக்கா கலிபோர்னியா எஷிதா மீடியாவும் இணைந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புப் பன்னாட்டு இணைய பட்டிமன்றம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதில் கலிபோர்னியா, அட்லாண்டா, அமெரிக்கா மற்றும் பக்ஃரினைச் சேர்ந்த தமிழ்ப் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இப்பட்டி மன்றத்தின் நடுவராக மலேசியத் தமிழாசிரியர் தமிழ்த்திரு தனலெட்சுமி நடுவராகப் பொருப்பேற்றிருந்தார்.
ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு சாதனைப் பெண்களின் வாழ்க்கை என்பது பல சவால்களைத் தாங்கியதாகவே இருந்தாலும், அந்தச் சவால்களைச் சோதனையாக எண்ணித் துவண்டு விடாமல், போதனையாகக் கொண்டு, சாதனையை நோக்கிப் பயணித்தால் சுமைகள் நீங்கும், வாழ்வில் சுகம் தோன்றும் என்ற கருத்தை தனது சுய அனுபவங்களோடு நினைவு கூர்ந்து தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பைக் குறித்து, பன்னாட்டு தமிழ் அளுமைவாதிகளின் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வாழ்த்துரை வழங்கிய டெல்லி கலை இலக்கியப் பேரவையின் தலைவரும், ஏற்பாட்டாளருமான மதிப்பிற்குரிய குமார் அவர்கள், பன்னாட்டு தமிழ் ஆர்வலர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற இங்குள்ள தமிழ் ஆளுமைகள் நிச்சயம் துணை நிற்போம் என்றார். மேலும் அவர் தமது உரையின்போது, உலகளாவிய நிலையில் தமிழ்மொழி மற்றும் கலை சார்ந்த ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு அவர்கள் முன்னெடுத்துவரும் முயற்சிகள் வெற்றிப்பெற, தம்மோடு இணைந்து பன்னாட்டு தமிழ் ஆளுமையாளர்கள் அனைவரும் நிச்சயம் துணை நிற்போம் என்று கூறி பன்னாட்டு பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.
www.myvelicham.com face book myvelicham / you tube / tik tok