ஜொகூர் மாநில சிலம்பக் கோர்வை கழகம் கலந்து கொள்ள வாய்ப்பு மறுத்துள்ளது

The Johor State Silambam Korvai Kalagam has refused the opportunity to participate

ஜொகூர் மாநில சிலம்பக் கோர்வை கழகம் கலந்து கொள்ள வாய்ப்பு மறுத்துள்ளது

News By ;Sangatamilan Johor

24 August 2024-அன்மையில் நடந்த SUKMA போட்டியில் அரங்கேறிய ஓர் அவக்கேடு.
ஜொகூர் மாநிலத்தில் 2 சிலம்பக் கழகங்கள் இயங்கி வருகின்றன. ஒன்று ஜொகூர் மாநில சிலம்பக் கழகம் என்ற பெயரிலும் மற்றொன்று ஜொகூர் மாநில சிலம்பக் கோர்வை என்ற பெயரிலும் இயங்கி வருகின்றன.
ஜொகூர் மாநில சிலம்பக் கழகத்தில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர் என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால், ஜொகூர் மாநில சிலம்பக் கோர்வையில் குறைந்தது 300 மாணவர்கள் பயில்கின்றனர். SUKMA போட்டியில் கலந்து கொள்ள ஜொகூர் மாநில சிலம்பக் கழகம் ஜொகூர் மாநில சிலம்பக் கோர்வை கழகம் கலந்து கொள்ள வாய்ப்பு மறுத்துள்ளது. இது கண்டனத்திற்குறியது. விளைவு :


மொத்தம் 14 விளையாட்டுகள் : 14 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் பதக்கங்களில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டும் பெற்றிருக்கிறது ஜொகூர் மாநில சிலம்பக் கழகம். Team Manager ஜொகூர் மாநில சிலம்பக் கழகத் தலைவர். Male Coach ஜொகூர் மாநில சிலம்பக் கழகத் தலைவர். Female Coach ஜொகூர் மாநில சிலம்பக் கழத் தலைவரின் மனைவி. இதில் என்ன வேடிக்கையென்றால் இவ்விருவருக்குமே சிலம்பம் தெரியாது என்ற தகவல் கசிந்துள்ளதுதான். ஏன் இப்படி செய்தது ஜொகூர் மாநில சிலம்பக் கழகம்? அரசியலா? கிடைக்கின்ற அரசு மானியத்தை வழித்துக் கொள்ளவா? என்னே சுயநலம்?
இந்தத் தோல்வியினால் ஒட்டு மொத்த ஜொகூ மாநிலம் வாழ் இந்தியர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது ஜொகூர் மாநில சிலம்பக் கழகம்.
இந்தத் தோல்விக்கு நல்ல தீர்வு :
ஜொகூர் மாநில சிலம்பக் கோர்வையையும்  இணைத் போட்டிப் போட்டு சிறந்த மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்வதே ஆகும். இனியாவது சிந்திக்குமா ஜொகூர் மாநில சிலம்பக் கழகம்