பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பாத மூத்த பிரஜையின் உயிரற்ற உடல் ஹோட்டல் அறையில் மீட்பு.

The lifeless body of a senior citizen who did not return home after undergoing physiotherapy was found in a hotel room.

பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பாத மூத்த பிரஜையின் உயிரற்ற உடல் ஹோட்டல் அறையில் மீட்பு.

Date :16 March 2025 News By :Puva perak

பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பாத மூத்த பிரஜையின் உயிரற்ற உடல் ஹோட்டல் அறையில் மீட்பு.

கம்போங் கப்பாயாங் தாமான் பூலாய் ஹேய்ட்ஸ் வீட்டிலிருந்து சென்ற செவ்வாய்க்கிழமை மாலை 1.30 மணியளவில் பிசியோதெரபி சிகிச்சை பெற வீட்டிலிருந்து வெளியேறி இரண்டு நாள் வீடு திரும்பாத 63 வயது ஆர்.தினகரன் என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் சொன்னார்.

எந்தவொரு காயம் தடயமின்றி அவரின் உடல் படுக்கறையிலிருந்து இங்குள்ள ஆர்.பி.ஜி.சி. கிராண்ட் ஹோட்டல் அறையில் வியாழக்கிழமை மாலை 4-20 மணிக்கு கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்