மலேசிய மருத்துவ சங்கம் புதிய வேலை நேரம் குறித்து கவலை தெரிவித்தது.
The Malaysian Medical Association expressed concern over the new working hours.
16 Jan 2025
சுகாதார அமைச்சர் Dzulkeply Ahmad, பிப்ரவரி 1 முதல் ஏழு மருத்துவமனைகளில் புதிய ஷிப்ட் வேலைமுறையை அமல் படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.
தன்னை பொறுத்தவரை (Waktu Berkembara Berlainan - WBB)
என்ற முறை இன்னும் ஒரு முன்மொழிவாக உள்ளன.
புத்ராஜெயா தேசியப்பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு, 'தாம் அதை அங்கீகரிக்கவில்லை இந்தத்தகவல் எப்படி கசிந்தது என்று எனக்குத் தெரியவில்லை,' என்றார்.
சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் (அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்) அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
பொது சுகாதாரச் சேவையில் உள்ள மருத்துவர்கள்,பல் மருத்துவர்களை தொடர்ந்து 18 மணிநேர பணிக்கு வரம்பிடுகிறது.இது தற்போதைய 24 முதல் 33 மணிநேர (On Cal) முறையை விட மிகக் குறைவு.
மலேசிய மருத்துவ சங்கம் (MMA) புதிய ஷிப்ட் முறை குறித்து கவலை தெரிவித்ததுடன், இது பொது சுகாதார அமைப்பில் அதிக சுமையை ஏற்படுத்தும் என்று கூறியது.
மலேசிய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் கல்வீந்தர் சிங் கைரா கூறுகையில், தற்போதைய மாற்றத்தின் வழி அதிக பணிச்சுமையுடன் பணியாளர்கள் போராடுவதால், அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தைக் குறைக்க போதுமான பணியாளர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
www.myvelicham.com Face book , Tik Tok , Intg, You Tube