ஆயர் கூனிங் இடை தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும் டத்தோஸ்ரீ எம். சரவணன் நம்பிக்கை.
The National Front will win the Bishop Cooning by-election Datuk Seri M.Saravanan is confident.
24 April 2025 News By : Punithai Perumal
ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிப் பெறுவதில் மஇகா இந்தியச் சமுதாயத்தின் வலுவான ஆதரவைப் பெறும் என்றும், இந்த வெற்றிக்கு இந்தியர்களே முக்கிய காரணிகளாக இருப்பார்கள் என்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2,600 வாக்குகள் தேசிய முன்னணியின் வாக்காளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியச் சமூகத்திடமிருந்து எங்களுக்கு சுமார் 2,600 விசுவாசமான வாக்காளர்கள் கிடைத்துள்ளனர் என்று நாங்கள் நேர்மையாகச் சொல்ல முடியும்.
300 வாக்குகள் முடிவு செய்யப்படவில்லை என்றும், மேலும் 700 வேட்பாளர்கள் தங்களது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இப்போதைக்கு கையில் உள்ள 2,600 விசுவாசமான வாக்குகளை கருத்தில் கொண்டுள்ளதாகவும் 100% சதவிகிதம் நம்பிக்கையுடன் இருக்கும் வேளையில், வெளியிலுள்ள வாக்காளர்களைக் கொண்டு வருவதற்கு பணியாற்றி வருவதாகவும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
தேர்தலில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டத்தோஸ்ரீ எம். சரவணன், மலேசியாவில் பல்வேறு சமூகங்களின் தேசிய முன்னணியின் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார். வலியுறுத்தினார்.
இந்தத் தொகுதியில் மஇகா, மசீச மற்றும் ஆகிய பிரதிநிதிகள் உள்ளனர் என்றும், இது தேசிய ஒற்றுமையை வளர்ப்பதில் தேசிய முன்னணி கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தர்க்க ரீதியாக தேசிய முன்னணிக்குள் அம்னோவிலிருந்து ஒரு பிரதிநிதி தேசிய முன்னணியின் கோட்டையை மட்டுமல்ல, கட்சி நிலைநிறுத்தும் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதையும் வெளிப்படுதத வேண்டும் அவர் கூறினார்.
www.myvelicham.com / Face book /