தாம் நீக்கப்பட்டது எதற்காக என்று காரணம் தெரியவில்...
The reason for his removal is not known.Dato C.Sivaraj
15 June 2023
பெட்டாலிங் ஜெயா: ம.இ.கா மத்திய செயற்குழுவில் இருந்து "நீக்கப்பட்டதை" உறுதிப்படுத்திய அக்கட்சியின் முன்னாள் மஇகா துணைத் தலைவர் சி சிவராஜ், நீக்கப்பட்ட நடவடிக்கையைக் குறித்து கட்சித் தலைவர் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.
தாம் நீக்கப்பட்டதாகவும், இது கட்சித் தலைவரின் சிறப்பதிகாரம் என்பதை தாம்அறிந்திருப்பதாகவும் என்று தெரிவித்த செனட்டர் சிவராஜ்,
தாம் நீக்கப்பட்ட காரணத்தைத் தலைவர் தெரியப்படுத்தவில்லை என்று அவர் கூறினார்
.
ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரனின் இந்த நடவடிகையை எதிர்த்து மேல் முறையீடு எடுக்கப்படுமா என்று நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், தாம் நீக்கப்பட்டது எதற்காக என்று காரணம் தெரியவில்லை என்பதால் மேல் முறையீடு செய்யமாட்டேன் என்று சிவராஜ் தெரிவித்தார்.