“உரிமை” கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் மேல்முறையீட்டை உள்துறை அமைச்சு நிராகரித்தது

The "right" party as a political party Registration Appeal Ministry of Home Affairs rejected

“உரிமை” கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் மேல்முறையீட்டை   உள்துறை அமைச்சு நிராகரித்தது
“உரிமை” கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் மேல்முறையீட்டை   உள்துறை அமைச்சு நிராகரித்தது

Date : 16 March 2025 News By: Ganapathy

“உரிமை” கட்சியை ஓர் அரசியல் கட்சியாக
பதிவு செய்யும் மேல்முறையீட்டை  உள்துறை அமைச்சு நிராகரித்தது .   

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணைத் தலைவர் பி. இராமசாமி அவர்கள்  “உரிமை” என்ற பெயரில் ஒர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார்.  

கடந்தாண்டு ஜுலை 4ஆம் தேதி உரிமை கட்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், பிப்ரவரி 27ஆம் தேதி அரசாங்கத்தின் முடிவுக்கு,  கட்சி மறுஆய்வு செய்யும் நடவடிக்கையைத் தொடங்க உயர்நீதி மன்றம் கட்சிக்கு அனுமதி வழங்கியது.  இந்த நடைமுறையின்படி, தங்களது கட்சி அமைச்சருக்கு முறையிட்டதாகவும், ஆனால் நீதிமன்றத்தின் விசாரணை தொடரும் முன்பதாகவே அமைச்சரது நிராகரிப்பு வந்துவிட்டது என்றும் பி. இராமசாமி கூறினார். மேலும், இந்த உரிமைக் கட்சியானது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திட்டங்களுக்கு ஏற்பவே வரையப்பட்டுள்ளது என்று கட்சியின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திண்ட் தெரிவித்தார்.

 

கட்சியின் நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பம் மற்றும் அறிக்கையைத் திருத்துவதற்காக கட்சியின் சட்டக்குழு, இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று கட்சியின் வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், இந்தப் பதிவுக்கான விண்ணப்பத்தினை நிராகரிப்ப்பதற்கான காரணத்தையும் ஆர்ஓஎஎஸ் (ROS) எனப்படும் சங்கங்களின் பதிவதிகாரி தனது பிரமாணக் கடிதத்தில் நியாயபபடுத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஷம்ஷேர் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் நினைவுப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். 

எது எவ்வாறாக இருப்பினும், உரிமையின் மேல்முறையீடு, அதே காலக்கெடுவுடன் பரிசீலித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் நீதிமன்றம் கோரிக்கை விடுக்க வேண்டுமென்று கட்சி நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Thank you : Fmt