மக்களின் தேவைகளை  மாநில அரசு விரைவாக தீர்வு காணும்

The state government will quickly address the needs of the people

மக்களின் தேவைகளை  மாநில அரசு விரைவாக தீர்வு காணும்

04 Feb 2025 

மக்களின் தேவைகளை  மாநில அரசு விரைவாக தீர்வு காணும் என்றார் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு.பினாங்கு, பிறை சட்டமன்றம் மற்றும் சுற்றுச்சூழல் வீடமைப்பு, மாநில ஆட்சிக்கு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ  சுந்தரராஜு சோமு அவர்கள், செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை பிறை மக்கள சேவை மையத்தில் மக்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்

அனைத்து இன மக்களும் உதவி நாடி வருவதை அங்கு காண முடிந்தது. இன்னும் மக்களின் தேவைகளை சம்பந்தப்பட்ட அரசு தரப்பு நிறைவேற்றுவதில் சற்று தாமாதம் ஏற்படுகிறது அவற்றுக்கு விரைவாக தீர்வு காணுமாறு  சம்பந்தப்பட்ட தரப்பினர் முயல்வதாக குறிப்பிட்ட  டத்தோஸ்ரீ சுந்தரராஜு அவர்கள்,அனைவருக்கும்  புத்தாண்டு நல் வாழ்த்துகள்  Gong Xi Fa Cai  தெரிவித்துக்கொண்டவர்,

வரும் 8-2-2025 ஆம் நாள் நடைபெறவிருக்கும் சீனப் பெருநாள் விருந்துபசரிப்பில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு  டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு கேட்டுக்கொண்டார்.