மாநிலக் கையிருப்பு RM 340 கோடி வெள்ளி மக்களின் நலனுக்காகவே
The state reserves help in introducing various schemes for the benefit of the people.
17 July 2023
தற்போது RM 340 கோடி வெள்ளிகளை எட்டியுள்ள சிலாங்கூர் மாநில அரசின் கையிருப்புகள் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உதவுகின்றன.
மக்கள் எஹ்சான் விற்பனையின் தொடர்ச்சியான எஹ்சான் ரஹ்மா விற்பனை மற்றும் ஆறு மில்லியன் மக்கள் பயன்பெறும் சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டம் (INSAN) ஆகியவை இதில் அடங்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
நீர் மாசுபாட்டை சமாளிக்க அக்டோபரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் மூல நீர் உத்தரவாதத் திட்டத்தையும் (SJAM) சாலை மேம்பாடு திட்டத்தையும் மாநில அரசு 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
நிர்வாகத்தால் பதிவு செய்யப்பட்ட அதிக கையிருப்பு மக்களுக்காகச் செலவிடப்படவில்லை என்ற முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியின் கூற்றை அவர் இவ்வாறு முறியடித்தார்.
“கடந்த காலத்தில் நமது கையிருப்பு RM2.14 பில்லியனாகச் சரிந்தது, இப்போது அவை RM3.29 பில்லியனாக அதிகரித்துள்ள நிலையில் சமீபத்தில் எனக்கு கிடைத்த எண்ணிக்கை RM3.4 பில்லியன் ஆகும் எனக் குறிப்பிட்டார்.
“மக்களின் பணத்தை இஷ்டத்துக்கு பயன்படுத்தாமல் கவனமாகச் செலவழித்து அதை நிரூபித்துக் காட்டுகிறேன். எங்களிடம் வலுவான சேமிப்பு உள்ளது, மக்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் போதுமான அளவு செலவிடுகிறோம்,” என்றார்.