தமிழ்ப்பள்ளிகள் மற்றவர்கள் கைகளுக்கு மாறும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

The transition of Tamil schools into other hands is not far away.

தமிழ்ப்பள்ளிகள் மற்றவர்கள் கைகளுக்கு மாறும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

Date  : 24 Dec 2024 News By : RM CHANDRAN 

தமிழ்க்கல்வி 3 மாநாட்டில் சில அற்புத நிகழ்வுகளை நமக்கு பதிவு செய்த கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவச்செல்வங்களை அழகாக வடிமைத்த  ஆரியர்களின் பணி பாராட்டுக்குரியது. அவர்களுக்கு  ஒரு செய்தி தளம் அமைத்து மாணவர்களே அதனை  கையாளுவதும் நேர்காணல் செய்வதும் கேமராவை இயக்குவதும் நிழல் படங்களை பதிவு செய்வதும் பலரையும் கவர்ந்தது. 

ஒவ்வொரு மாதமும் ஒரு தொகுப்பை அந்த. மாணவர்கள் ஆசிரியராக இருந்து ஒரு மாத இதழை வடிவமைப்பதை பார்க்க முடிந்தது. இவர்கள் தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டிச் செல்வார்கள் எதிர் பார்ப்பு நம்மிடயே இருந்தாலும் இவைகள் சாத்தியம் ஆகுமா என்றும் தெரிய வில்லை.

பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மெது நிலை மாணவர்களுக்கு தனியொரு பாணியில் கற்றல் முறைகளை போதுத்து வருவதை  அவர்களின் கட்டுரைகள் உணர்த்தியது. 

பெரும் சவால் நிறைந்த ஆசிரியர் தொழிலை செய்து  மாணவர்களை செதுக்கி வருகிறார்கள் என்பதை பல  பெற்றோர்கள் அறிவதில்லை.

2025 ஆம் ஆண்டு 15 ஆயிரம் பிள்ளைகள்  தேசியப்  பள்ளிக்கும் சீனப்பள்ளிக்கும் அனுப்பி வைப்பதாக தரவுகள் வந்துள்ளன.  இவற்றுக்கு பெற்றோர்கள் கூறும் காரணம் என்ன வென்றால் சீன மொழி படித்துக் கொண்டால் வேலை கிடைக்குமாம். சீனர்கள் நடத்தும்  கம்பெனிக்கா
உங்களின் பிள்ளைகளை அடிமை தொழிலாளியா அனுப்புவது?

நமது பெற்றோர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இங்கே மறைமுகமாக  அரசாங்கம் தமிழ் மொழிக்கு பல் வேறான காரணங்களை முன் வைத்து தமிழ்ப்பள்ளிகளை முடக்கி வருகிறது. உங்களுக்கு பல தமிழ்ப்பள்ளிகளை  உதாரணமாக காட்டலம்.  பெட்டாலிங்  பிஜேஎஸ் சுற்று  வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள்
 எங்கே  போனார்கள்?

கோயிலுக்கு  அள்ளிக்கொடுத்து உங்களை முட்டாளிக்கி சம்பாதிக்கும்  சமய ஏமாற்று பேர் வழிகள் மீது சற்று கவனமாக இருங்கள் எந்த சாமியும்  நமக்கு உதவாது. அவர்கள் தான் சமய விழாவை நடத்தி சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பூஜைக்கு அவர்கள் விதிக்கும் கட்டணத்தை என்ன ஏதுவென்று கேளாமல் அள்ளி கொடுக்கிறோம். தமிழ்ப்பள்ளிகளுக்கு  கொடுப்பதற்கு யாரும் முன் வருவதில்லை

.

இந்த நிலை தொடருமானால் தமிழ்ப்பள்ளியின் எதிர் காலம் அடையாளம்  இழந்து போகும். நமது  தமிழ்ப்பள்ளிகள் மற்றவர்கள் கைகளுக்கு மாறும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்பதை இந்திய சமுதாயம் புரிந்து கொள்ளுமா?

செய்தி ஆக்கம்: ஆர்.எம்.சந்திரன்

www.myvelicham.com Facebook T/ IK TOK /You Tube Myvelichamtv