135 மாணவர்கள் தேவர வகுப்பில் பயில்வதாகவும் இதற்கு எந்தவொரு கட்டணமும் இல்லை
There are 135 students studying in Thevaram class and there is no fee for this
Date : 24 Feb 2025 News By ; RM Chandran
தேவாரம் - திருமுறை பாராயணம் செய்வதற்கு நமது பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதற்கு பெற்றோர்கள் அக்கரை காட்ட வேண்டும். மேலும் பிள்ளைகள் தவறான வழிகளில் கவனம் செலுத்தமால் இருப்பதற்கு சமயம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக, கவசமாக காத்து நிற்பதாகவும் வாழ்க்கையில்
நல்ல மனிதனாக உருவாவதற்கு சமய வழிகள் அவர்களுக்கு உருதுணையாக இருப்பதாகவும் மலேசிய இந்து சங்கம்,ஸ்கூடாய் வட்டாரப்பேரவைத் தலைவர் க. சேகரன் குறிப்பிட்டார்.
அதனை மையப்பொருளாக வைத்து கடந்த 14 ஆண்டுகளாக இந்த தேவரா வகுப்பை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.ஜொகூர்,ஸ்கூடாய் அருள்மிகு ஸ்ரீ பால சுப்ரமணியர் ஆலயத்தில் பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 6 மணி வரையில் தேவரா வகுப்பை நடத்தி வருகிறது என்றார்.
135 மாணவர்கள் தேவர வகுப்பில் பயில்வதாகவும் இதற்கு எந்தவொரு கட்டணமும் இல்லை 'மக்கள் சேவையே மகேசன் சேவை ' என்று பொது நலச்சேவை அடிப்படையில் மலேசிய இந்து சங்கம்,ஸ்கூடாய் வட்டாரப் பேரவை செயலைவை உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
தற்போது பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேவரா வகுப்பில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் புதிய மாணவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட சேகரன்,
மாணவர்களுக்கு மாலை நேர தேனீர் சிற்றுண்டி,புத்தகப்பை, சமய நூல்களை வழங்குவதோடு சமய சுற்றுலா, கல்வித்திறன், சமய விழாக்கள் போட்டிகள்,
நடத்தி வருவதாகவும் ஆலயங்கள், பொது நல இயக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து இந்து சமய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி தொண்றாற்றி வருவதாகவும் மலேசிய இந்து சங்கம்,ஸ்கூடாய் வட்டாரப்பேரவைத் தலைவர் க.சேகரன் தெரிவித்தார்.