விபத்துக்கள் குறைந்திருந்தாலும், பொறுமை – சகிப்புத் தன்மையுடன் ஒட்டுநர்கள் வாகனங்களை ஓட்ட வேண்டுடத்தோ குமார்
Though accidents have come down, drivers should drive with patience and tolerance.

29 March 2025 News By: Ganapathy
ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ குமார் வலியுறுத்துகிறார்.
தற்போது விபத்துகள் குறைந்திருந்கின்றன என்றாலும், பெருநாள் காலங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ குமார் பத்திரிக்கைக்கு விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
விபத்துக்கான காரணங்களை அறிவதற்கு முன்பதாக, 97 சதவிகித விபத்துகளுக்கு அலட்சியமே முக்கியக் காரணம் என்பதால், வாகன ஓட்டுநர்கள் இன்னும் விழிட்பபுடன் இருக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
காவல்துறையினர் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பாக இருந்தாலும், சாலையில் பயணிப்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று, முன்னதாக பெர்லிங் டோல் பிளாசாவில் பெருநாளை முன்னிட்டு காவல்துறையின் சாலைப் பாதுகாப்பு ஆலோசனைத் கூட்டத்தில் தெரிவித்தார். ,
இதற்கிடையில், பிளஸ் மலேசியா நிறுவனமும் இந்த நோன்புப் பெருநாள் காலம் முழுவதும் இரண்டு மில்லியன் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழைந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கிறது என்றும், இது வழக்கமான அளவைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
www.myvelicham.com / Face book / Tik Tok / You tube