டோல் கட்டணம் 50% விழுக்காடு குறைக்கும் என்றார் நந்தா லிங்கி.
Toll charges 50% percent Nanda Lingi said it will reduce.

Date 24 Jan 2025 News By: RM CHANDRAN
போல் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனப் புத்தாண்டுக்கு டோல் கட்டணத்தில் 50% விழுக்காடு விலக்களிப்பதாகவும் இதன் மூலமாக அரசுக்கு 20.08 மில்லியன் வெள்ளி செலவு ஏற்படுவதாகவும் பொதுப்பணி
அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
ஜனவரி 27 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் ஜனவரி 28 வரை இரவு 11.59 மணிக்கு முடிவடையும். இது வகுப்பு 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். நாட்டின் எல்லைகளான சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குபாங் டோல் சாவடிகளுக்கு இது பொருந்தாது என்றார்.
அரசாங்கம் இனி பண்டிகைக் காலத்தில் டோல் கட்டணங்களுக்கு ஒட்டு மொத்தமாக விலக்கு அளிக்காது என்றும்
அரசாங்கம் எடுக்கவுள்ள அணுகுமுறை பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை, எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றார். பண்டிகைக் காலங்களில் டோல் கட்டண விலக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, புத்ராஜெயா ஆண்டுதோறும் 190 மில்லியன் வெள்ளியை சேமிக்கும் என்று முன்பு கூறியிருந்தார்.
2023 - 2024 ஆம் ஆண்டுகளில் பண்டிகைக் காலங்களில் டோல் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டதால், அரசுக்கு மொத்தம் 356.18 மில்லியன் வெள்ளி செலவாகியுள்ளதாக நந்தா லிங்கி தெரிவித்தார்.
Thank you FMT