திரான்ஸ்கிரியான் தமிழ்ப்பள்ளிக்கு 30 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார் ஸ்ரீ விக்னேஸ்வரன்.

TransKirian Tamil School Sri Vigneswaran donated RM30,000.

திரான்ஸ்கிரியான் தமிழ்ப்பள்ளிக்கு 30 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார் ஸ்ரீ விக்னேஸ்வரன்.
திரான்ஸ்கிரியான் தமிழ்ப்பள்ளிக்கு 30 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார் ஸ்ரீ விக்னேஸ்வரன்.

Date :21 Jan 2025 News By:RM.Chandran

திரான்ஸ்கிரியான் தமிழ்ப்பள்ளிக்கு
30 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார் ஸ்ரீ விக்னேஸ்வரன். நிபோங் திபால் தேசிய வகை திரான்ஸ்கிரியான் தோட்டத்தமிழ்ப் பள்ளிக்கு  டிஎச்ஆர் குழுமத்தின் நிர்வாக செயல்முறை அதிகாரி திரு ஸ்ரீ விக்னேஸ்வரன்(எ) விக்கி, 30 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.

கடந்த 12-1- 2025 ஆம் நாள் நிபோங் திபால் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் பொறியியல் வளாக அரங்கில் நடந்தேறிய பாசமிகு  திரான்கிரியான் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீ விக்னேஸ்வரன்,  30 ஆயிரம் வெள்ளிக்கான மாதிரி காசோலையை பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் டத்தோ பி.கே. லீ அவர்களிடம் எடுத்து வழங்கினார்.

நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான  ஹாஜி டத்தோ  ரஸிடி பின் ஸினோல், தென் செபராங் பிறை கல்வி அலுவலக அதிகாரி முகமட்  ரிஸால் பின் இஸ்மாயில், பள்ளி மேலாளர் வாரியத்தலைவர்

டத்தோ பி.கே.லீ, பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் டத்தோ முனுசாமி நரசிம்மன், மலேசியத் தமிழ்ப்பள்ளி  மேலாளர் கூட்டமைப்பு வாரியத்தலைவர்  ராஜமாணிக்கம் கருப்பையா, முன்னாள் தலைமையாசிரியர் கார்த்திக் மாரி, தலைமையாசிரியர் மருதமுத்து பாண்டியன், பெ.ஆ.சங்கத்தலைவர் குமரன் சந்திரா,  மற்றும் ஆசிரியர்கள், பெறோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.