இந்தியச் சமுதாயத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் அன்வாருக்கு பி.வேதமூர்த்தி

Urgent action must be taken on the growing threats against the Indian community: P Waythamoorthy to PM Anwar

இந்தியச் சமுதாயத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் அன்வாருக்கு பி.வேதமூர்த்தி

Date : 25 April 2025 News By: Punithaiperumal 

இந்தியர்கள் மற்றும் இந்து சமயத்திற்கு எதிரான அச்சுறுத்தலகள் அதிகரித்து வருவது குறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் தேசிய ஒற்றுமை அமைச்சர் பி. வேதமூர்த்தி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுககு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தீர்க்கமான சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் முன்னதாக வன்முறைக்கான நடவடிக்கையினை அலட்சியமாக எதிர்கொள்ளப்பட்டால், நாட்டில் வளமுற்று இருக்கும் இந்தப் பன்முகத்தன்மை அச்சுறுத்லுக்கு உள்ளாகிவிடும் என்று அவர் நினைவுறுத்தினார்.

இந்தப் பிரச்சினை இனம் அல்லது மதத்திற்கு அப்பாற்பட்டது. இது அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியைப் பற்றியது என்று 2007ஆம் ஆண்டு ஹிண்டராஃப் பேரணியின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான, வேதா குறிப்பிட்டார். 

குடிமக்கள் பாதுகாப்பதற்ற நிலையில் இருப்பதாக உணரும்போது, வழிபாட்டுத் தலங்கள் பின்விளைவுகள் எதுவுமே இல்லாமல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும்போது, நீதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தோன்றும்போது, நமது  சமூக பாதுகாப்பது, கட்டவிழ்ந்து வீழும் அபாயத்திற்கு வந்துவிடும்.  

புறக்கணிப்பு மற்றும் வெறுப்பிலிருந்து தோன்றும் மற்றொரு துயரத்தின் விளைவுகளை மலேசியாவால் தாங்க முடியாது. செயல்பட வேண்டிய நேரம் இது; உயிர்களை இழந்த பிறகு அல்ல; என்று அவர் ஒரு அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.  

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியிலிருந்த 130 ஆண்டுகள் பழமையான தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை இடமாற்றம் செய்தது, கடந்த மாதம் சர்ச்சையைத் தூண்டியது. சில பகுதிகள் சட்டவிரோதமானவை என்றுகூட முத்திரை குத்திய பிறகு, கோயில்கள் குறித்த விவாதங்கள் எழுந்தன. 

இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடையே, சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் கருத்துக்களும் வெளிவந்தன. ஒருசில நெட்டிசன்கள், வழிபாட்டுத் தளங்களில் குண்டு வைக்கப் போவதாக அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டனர்.

ஒரு காணொலியில், “வெள்ளிக்கிழமை மசூதிகளில் குண்டு வெடிப்பு” என்று ஒரு ஃபேஸ்புக் கணக்கு கருத்து தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, ஜோகூர் போலீசார் அத்தகைய ஒரு வழக்கை விசாரித்து வருகின்றனர் என்றும் ஓர் அறிக்கையில் பொ. வேத மூர்த்தி குறிப்பிட்டார்.

www.myvelicham.com