தாமான் குளுவாங் பெர்டானா இடத்தில் ஒரு கோயில் கட்டுவற்கு ஆலோசனை வழங்கினோம்.

We suggested building a temple at Daman Kluang Perdana (Park Land).

தாமான் குளுவாங் பெர்டானா  இடத்தில் ஒரு கோயில் கட்டுவற்கு ஆலோசனை வழங்கினோம்.
தாமான் குளுவாங் பெர்டானா  இடத்தில் ஒரு கோயில் கட்டுவற்கு ஆலோசனை வழங்கினோம்.

News By : RM Chandran 

22 August 2024 - தாமான் மெகாவிலுள்ள நிலப்பரப்பில் கோயில் கட்டுவது பொருத்தமானது. இந்த நில விவகாரம் ஏற்கெனவே மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒய்பி  YB.Lee Ting Hon , மாவட்ட அதிகாரிகள் மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

ஜொகூர் மாநில மஇகா தலைவர் மாண்புமிகு ஆர்.வித்யானந்தனிடம் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. கடந்த 20/08/2024  ஆம் நாள் மாண்புமிகு  கே. ரவீன்குமார், மாநில அரசு ஆட்சிக்குழு சிறப்பு அதிகாரி  திரு. சுப்ரமணியம், ஜொகூர் மந்திரி பெசார் சிறப்பு அதிகாரி  திருமதி தீபா ஆகியோர்,

குளுவாங் மாவட்ட அலுவலகத்தில்  மாவட்ட அதிகாரிகள், நில அதிகாரிகள் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோருடன் கலந்து கொண்டு  ஒரு சந்திப்பை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாமான் குளுவாங் பெர்டானா (Park Land) இடத்தில் ஒரு கோயில் கட்டுவற்கு ஆலோசனை வழங்கினோம்.

இருப்பினும், இந்த  ஆலோசனை மெகா பூங்காவைச் சுற்றிள்ள மற்றவர்களுக்கு  தொந்தரவாக இருக்கும் என்பதால் எங்களின்  ஆலோசனைகளை அங்கீகரிக்கப் படவில்லை. தாமான் மெகாவைச் சுற்றுப்பகுதியில் வாழும் சுமார் 300 குடும்பங்களுக்கு அருகிலுள்ள பகுதியில் கோயில் தேவை.

முன்மொழியப்பட்ட பகுதியானது  13 கிமீ தொலைவில் உள்ள பகுதியாகும்.ஆகவே தாமான் மெகா பகுதியில் கோயிலை  கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உதவுமாறு கேட்டுக் கொண்டதுடன் முன்மொழிந்தப் நிலப்பகுதி கோயில் கட்டுவதற்கு மிகவும் ஏற்றது என்று கூறினார் ராமன்.

ஜொகூர் மந்திரி  பெசார், மாநிலம் முழுவதிலும் உள்ள சமயம் சார்ந்த பிரச்சினைகளில் மிகவும் அக்கறை கொண்டவர், இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்குவார்  என்றும் நாங்கள் நம்புகிறோம்.  மாண்புமிகு ஆர்.வித்யானந்தன், கே.ரவீன்குமார், திரு.சுப்ரமணியம், திருமதி.தீபா, மாவட்ட அலுவலர், நில அலுவலர்  ஆகியோர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

குளுவாங்கிலுள்ள  அனைத்து சமூகப் பிரச்சினைகளையும்  அறிந்திருப்பதாகக்கூறிய  ஜி.ராமன், தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பு குளுவாங் கிளைத்தலைவர், தாமான் சூரியா இந்திய குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், 

ஜொகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi, மஇகா தேசியத்தலைவர் தான்ஸ்ரீ  எஸ்.ஏ.விக்னேஸ்வரன், சுற்றுலா, சுற்றுச்சூழல், ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கே.ரவின்குமார்,ஜொகூர் மஇகா தலைவரும்  கஹாங் சட்டமன்ற உறுப்பினமான மாண்புமிகு பி.வித்யானந்தன் ஆகியோரின் பார்வைக்கு இந்த தகவல்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.