தமிழ் இல்லா விளம்பர பொருட்களை புறக்கணிப்ப்போம்.
We will boycott non-Tamil advertisements.RM Chandran
Date : 15 Dec 2024 News
By :RM Chandran
தமிழை புறக்கணிக்கும் அனைத்து விளம்பரத்தையும் புறம் தள்ளுவோம் தமிழ் ஆர்வலர்கள் சூளுரை.
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தமிழ் எங்கள் உயிர்' என்ற முழக்கத்துடன் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் உணர்வு கொண்டத் தமிழர்கள் மத்தியில் இப்படி ஒரு புத்தக விளம்பரம் வந்துள்ளது.
அதுவும் தமிழ் வேள் கோ. சாரங்கபாணி (கோ.சா) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் நடைபெறும் நூல் வெளியீட்டில் வரும் விளம்பரம் இவை.
இங்கே வருகை தருகிற கல்வியில் முது நிலை பெற்ற அறிவாளிகள், யாருடைய பெயரும் தமிழில் இடம் பெற வில்லை.ஆங்கிலம் நமக்கு தேவைதான்.அதில் பாண்டித்துவம் பெற்றவர்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை உங்களின் பெயர்களை தமிழில் இடம் பெறச்செய்து அதன் பிறகு ஆங்கிலத்தில் போடலாம் அதில் என்ன உங்களுக்கு சிரமம்?
தற்போது வருகின்ற கலை நிகழ்ச்சிகள் கூட இவ்வாறே விளம்பரம் செய்கிறது. நீங்கள் தமிழர்கள் மத்தியில்தான்
அறிமுகமானவர்கள் மற்றவர்கள் மத்தியில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆஸ்ட்ரோவில் ஒளியேறும் உள்ளூர் நாடகங்களும் தமிழில் பெயர்களை எழுதுவதில்லை தமிழை வைத்து தயாரிக்கும் நிகழ்ச்சிகளை தமிழர்கள் பார்க்கிறார்கள் ஆனால், அங்கே தமிழ் எழுத்துக்கள் இல்லை உதாரணத்திற்கு 'பசங்க 2, பள்ளிக்கூடம், ஆட்டம் இன்னும் மற்ற நிகழ்ச்சிகளும் இவற்றில் அடங்கும்.
தமிழக நாடகத்தொடரில் தமிழ்ப் பெயரை அடுத்து அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழக திரைப்படத்தில் வரும் முன்னோட்ட காட்சிகள் போல் பதிவேற்றம் செய்யும் வழி முறைகளை பின் பற்றி வருகிறார்கள்.
அடுத்த தலைமுறையினருக்கு நாம் வழி காட்டலாக அமைய வேண்டும். இங்கே பல கணனியுகத்தொழில் நுட்பத் நிகராளிகள் நிறையவே உள்ளனர். உங்களுக்கு வேண்டிய தொழில் நுட்ப வசதிக்கு ஏற்ப விளம்பரங்களை வடிவமைத்து கொடுக்கும் நுட்டத்திறன் பெற்றவர்கள். அவர்களை அணுகி
விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் என்று அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு தமிழ் எழுத்துக்ளை அச்சிடுவதற்கு ஆர்வமாக உள்ளனர்.
இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுக்கு தமிழ் வார்த்தைகளை இணைத்துக்கொள்ளுங்கள். அனைத்து நிகழ்வுக்கும் வருவோர்கள் எல்லாமே தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறு தமிழ்ப் பற்றாளர்கள் சூளுரைத்தனர். ஆக்கம் RM சந்திரன்