பகுத்தறிவு வந்தபோது பெண்களின் பெண்ணியம் பெண்களாக இருந்தனர்.
When rationality came, women's feminism was women.

04 April 2025 News By: Punitha Chandran
எண்ணறக் கற்றாலும், எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பேதமை என்ற சிந்தனை என்று பேசத் தொடங்கிய காலம் ஒன்று இருந்தது! அது பகுத்தறிவு இல்லாத காலம்! ஆனால் பகுத்தறிவு வந்தபோது பெண்களின் பெண்ணியம் பெண்களாக இருந்தனர். படிப்படியாக பள்ளிக்கூடம் – கல்லூரி – உயர்க்கல்வி – வேலை வாய்ப்பு என்று தேடி தங்களுக்கென்று ஒரு அமைதியான குடும்ப ஏற்படுத்திக் கொண்டு, கணவன் – பிள்ளைகள் – உற்றார் உறவினர்கள் என்ற நிலையில் வாழ்ந்து வந்தார்கள்.
கணவன் பெயரை தனது பெயருக்கு பின்னால் எழுதிவரும் பெண்களும் இருந்தனர் –இதற்கான பொருள் என்னவென்றால், கணவனது பெயரை பின்னால் சுமப்பது எதற்கு என்றால், அவளது கணவனையும், தனது குடும்பத்தையும் சுமந்து செல்பவள் – அதாவது அவள்தான் குடும்பத் தலைவியாக இடுகுறி பெயராக வாழ்கிறாள். இப்போதும் சிலர் அவ்வாறு இருக்கின்றனர்!
அன்றையக் காதலுக்கும் ஒரு மரியாதை இருந்தது – மதிப்பு இருந்தது. அதாவது காதல் மனத்தளவில் மட்டுமே பூத்திருந்தது. அந்தப் பூவை யாரும் எட்டிக் கூட தொட்டு விடாத தூரத்தில் இருந்தது. இருமனமும் கலந்த நிலையில் கண்கள் மட்டுமே பேசின. இதில் நிறைவேறிய காதலும் இருந்தன. நிறைவேறாமல் கானல் நீராக மறைந்த காதலும் இருந்தன. ஆனால், அதற்குப் பிறகு கிடைத்த வாழ்க்கையில் யார் மனதையும் புண்படுத்தாமல், மானத்தோடு வாழ்ந்த மகளிரும் இருந்தனர்.
அப்படிப்பட்ட குடும்பங்களை பார்க்க மிகவும் அருமையாக இருக்கும். கண்ணையும் – கருத்தையும் கவரும் வாழ்க்கையை வாழ்ந்தனர். கணவருக்காக, பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தார்கள்.
இதுதான் பெண்ணியம்! இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகின்றனர்!
அடுத்து வந்த காலக்கட்டத்தில், கண் தெரியாமல் – கருத்துத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் சில ஆண்களின் மன வட்டாரங்களில் அடியாய் இருக்க வேண்டும் என்பதற்காக ஒருசில தற்காப்பு முறைகளையும் கையாண்டு சுற்றியிருக்கும் சூழல் – வன்முறை – பலாத்காரம் – வற்புறுத்தல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளைத் தாண்டி – சமாளித்து, வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயருகிறார்கள்.
இங்கேயும் இவள் பெண்ணியத்தைக் காக்கிறாள். ஆனால் ஒருசில கழுகுக் கண்கள் இங்கும் வட்டமடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு பெண் இத்துணை பிரச்சினைகளை எல்லாம் தாண்டி வெளியே வர எண்ணும்போதும், ஆண்களுக்கு நிகராக பல துணிச்சலாக செயல்களில் காலடி எடுத்து வைக்கின்றனர் அல்லது உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இங்கேதான் பெண்ணியம் தடுமாறுகிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து பெண்களே, பெண்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வாங்கிக் கொடுப்பதற்காக, பெண்களே போராட்டக் களத்தில் இறங்கி விட்டார்கள். இங்கே ஒரு பெண்ணியத்திற்காக பெண்களே போராடுகிறார்கள்! இது ஒருபுறம் இருக்க, பெண்களுக்கு பெண்களே எதிரியாகவும் இருந்து பெண்ணியத்தை அழித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் யாது?
ஒரு நாணத்திற்கு இருபக்கம் இருப்பதுபோல, இந்தப் பெண்ணியம் என்ற கருப்பொருள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
சரி! முதலில் நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கலாம்.
பெண்களைப் போல் – பெண்ணியத்தைக் காப்பது போல், ஆண்களும் – ஆண்ணியத்தை காக்கும் ஆண்களும் இருக்கவேச் செய்கிறார்கள். ஒரு ஆண்மகன் தவறே செய்யாதப் போதும், அவன் மீது வீண் பழி சுமத்தி, பொய் வழக்குப் போடும் போலியான பெண்ணிய வாதிகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனது கணவனை விட தோற்றத்திலும் – பணத்திலும் சிறந்திருந்திருக்கும் ஒருவனைப் பார்த்து விட்டால், அவனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக பொய்யான வழக்குப் போடுவது, ஜீவனாம்சம் கேட்பது அல்லது கணவனையே பிடிக்க வில்லை என்பதற்காக அவன் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை வைத்துப் பிரிய வைப்பது – அல்லது – எப்பொழுதுமே கணவனை மட்டுமே குறை சொல்லிச் சொல்லியே, அவன் அவனாகவே பிரிந்துச் செல்ல வைப்பது - போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டலாம். இப்பொழுது எல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதிகமாகவே உலக மற்றும் உள்ளூர் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளிவருவதினை நாம் பார்க்கலாம்.
இந்தக் கேள்விக்குள் பல பதில் பதில்கள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக பெண்கள் அதிகளவில் படித்து விட்டார்கள். ஏன்? ஆண்களை விட இன்னும் மேலான உயர்க்கல்வியைக் கற்று விட்டார்கள். கணவனை விட அதிகமாவேச் சம்பாதிக்கிறார்கள். தனியாக வீடு – கார் என ஆடம்பரமாக வாழக் கற்றுக் கொண்டார்கள். தனியாக கார் ஓட்டுகிறார்கள். Long Drive என்ற பெயரில் பல்வேறு ஊர்களுக்கு பயணமாகிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே – என்ற கூற்றினை தவறாகப் பயன்படுத்தி, தவறான பாதைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
கையில் சேமிப்பை வைத்திருக்கும் இதுபோன்ற பெண்களுக்குத் திருமணம் தேவையில்லை – குடும்பம், பிள்ளைகள் தேவையில்லை என்று கருதுகின்றனர். இதுவரை வசதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, காலப்போக்கில் – இறுதிக் காலத்தில் தனிமையுடன் – அனாதையாக - தங்களுக்கென்று யாருமில்லாமல் வாழ்ந்து மடிகின்றனர்.
சரி, இப்போது
நாணயத்தின் முதலாவது பக்கத்தைப் பார்க்கலாம்.
சமுதாயத்தில் வாழ்கின்ற ஒருசில பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உடையணிந்து கொண்டு, புகைப்பிடித்தல் – போதை போன்றவற்றினை பயன்படுத்திக் கொண்டு, பெண்களை வைத்து தொழில் நடத்தும் சில பெண்களும் இருக்கவேச் செய்கிறார்கள். இதுபோன்ற தொழில்களில் இரகசியம் காக்கப்படுவதால், வெளியே தெரியாமல் இருந்தாலும்கூட, இதனால் பெண்கள் தங்களது வாழ்க்கையையே இழக்கும் நிலைக்கு உட்படுகின்றனர். இது தவறான செயல் என்று சொன்னால்கூட, நாங்கள் புதுமைப் பெண்கள் என்று தலைப்பிட்டுக் கொண்டு வாழ்கின்றனர்.
பெண்கள் நான்கு கவருக்குள் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்களின் தனிச் சுதந்திரம். ஆனால் வெளியே செல்லும் பெண்கள் தங்களது பெண்ணியத்தைக் காக்கும் வகையில் உடைகள் அணிகிறார்களா? என்பதனைக் கவனிக்க வேண்டும். Online – Instagram – Tiktok போன்ற ஊடகங்களைப் பார்த்தால் அவர்கள் நடந்துக் கொள்ளும் போக்கு மிகவும் படுமோசமாக உள்ளது. ஒரு பொது தளத்தில் - இலட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு தளத்தில் இவ்வாறு அரைகுறை ஆடைகளுடன் காட்சித் தருவது ஒரு குடும்பத்திற்கு நன்மை பயக்குமா என்பதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுவும் இந்தியப் பண்பாட்டைக் காக்கும் பெண்கள் இவ்வாறு நடந்துக் கொள்வது மிக மனவேதனை தருகிறது. “நீங்கள் ஏன் எங்களைப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி வரும். உண்மைதான்! பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் நாம் நமது இனம் – மொழி – சமயம் – கலாச்சாரம் – பண்பாடு ஆகியவற்றினைப் கடைப் பிடிப்பதுதானே இளையோர்களின் கடமை!
சரி!
பிற இனத்தவர்கள் நமது இந்தியச் சமுதாயத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இந்தக் கட்டுரையில் முன்பு கூறியிருந்த அந்த பெண்ணியம் சமுதாயம் எங்கே போனது? அது எப்போது மீண்டும் வரும்....?
www.myvelicham.com your comment Face book MyVelicham.com