அக்ரில் சானிக்குப் பதில் புதிய ஐஜிபி யார்?
Who will be the new IGP in place of Akril Sani?
19June 2023
புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நாட்டின் முக்கிய தலைமைப் பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். கடந்த 15-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் காவல் துறையின் தலைவராக டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தொடர்ந்தார்.
அவரின் ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக, அவர் இந்த வாரமே தன் பதவியில்இருந்து ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக புதிய காவல் துறைத் தலைவர் – ஐஜிபி -யார் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.
நாட்டின் 13-வது ஐஜிபியாக அக்ரில் சானி பதவி வகித்து வந்தார். 2021-இல் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பதிலாக அக்ரில் சானி நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் கட்டாய பதவி ஓய்வு பெற வேண்டியிருந்தது.
இருப்பினும் அவரின் ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்[பிடத்தக்கது .