பத்து மலையை ஒட்டியுள்ள பூக்கடைகளை அப்புறப்படுத்துவது யார் ?

Who will dispose of the flower shops adjacent to Batu caves

பத்து மலையை ஒட்டியுள்ள  பூக்கடைகளை  அப்புறப்படுத்துவது யார் ?

26 August 2023

கோலாலம்பூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை  ஒட்டியுள்ள பூக்கடைகளை  அப்புறப்படுத்தும்  பணி  , நீதிமன்ற  ஆணைப்படி  செலாயாங் நகராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கப் பட்டதால் ,  வேறு வழியின்றி  நகராட்சி  அதன் கடமையை மேற் கொண்டிருப்பதாக   அந்த நகராட்சியின்  உறுப்பினரும் , அந்த விவகாரத்தைக்  கடந்த இரண்டு ஆண்டுகளாக  கையாண்டு வரும்  திரு தேவா கூறினார்

.www.myvelicham.com

இந்த நிலம்  ஆலயத்திற்குச் சொந்தமாக இருந்தாலும் ,  அதனைச்  சாலை மேம்பாட்டுப் பணிக்குச்  சிறிது காலம்  பொது மராமத்து இலாகா  (JKR)  எடுத்துச் சாலை மேம்பாட்டு மேற்கொண்டது. அதன்பின்  அங்கு  அந்த  பூ கடைகள் கட்டப்பட்டது.

இப்பொழுது அந்த நிலம் மீண்டும் பத்துமலை ஆலய நிர்வாகம்  உரிமை கொண்டிருப்பதால், அக் கடைகளை  அகற்ற நீதிமன்றத்தின்  ஆணையை ஆலயம் பெற்றிருப்பதால் அந்த ஆணைப்படி, நகராட்சி கடைகளுக்கு வெளியேற்ற  உத்தரவு  வழங்கியுள்ளது. செலாயாங் நகராட்சி மேற்கொண்ட  நடவடிக்கை முற்றிலும் நில உரிமையாளர் பெற்றுள்ள  நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டதாகும்  என  அவர், பாதிக்கப்பட்ட  பூக்கடை உரிமையாளர்களுடன்  நேற்று நடத்திய சந்திப்பு கூட்டத்திற்குப் பின்  கூறினார்.

ஆக இந்த  விவகாரம் குறித்து ஆலயத் தரப்பிடம் தான்  இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும். இதனை  ஒரு அரசியல் விவகாரமாக  ஆக்க எண்ணிச் சிலர்  ஊடகங்கள், மற்றும்  குறுந்தகவல் வழி குரோதமான பதிவுகளை  வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில்  நாம்  அரசாங்கத்தை மட்டுமல்ல , ஆலயத்தின் மாண்பையும் காக்கும் கடமை நமக்குண்டு அதனால்  இதனைச் சுமூகமாக ஆலயத்துடன்  பேசித் தீர்வு காண  முயற்சித்து வருகிறோம்.. ஆகவே எதிர் மறையான விவாதங்கள்   தோன்றாமலிருக்க எல்லாத் தரப்பினரும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எங்களைப் பணி செய்ய அனுமதிக்கும் படி  அனைவரையும் பணிவன்புடன்   கேட்டுக் கொள்கிறோம்.

எல்லாவற்றிலும்  அரசியல் நடத்தும்  நோக்கங்களைக் கைவிட்ட சமுதாய மேம்பாட்டுடன் சமய, ஆலயங்களின் மாண்மையும் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும்  உண்டு  என்று  அவர் கூறினார்.