கோலலங்காட் தொகுதியில் தலைவர் பதவிக்கு நான்கு முனைப் போட்டி யாருக்கு வெற்றி ?

Who will win the four-cornered contest for the post of president in Kuala Langat constituency?

கோலலங்காட் தொகுதியில் தலைவர் பதவிக்கு நான்கு முனைப் போட்டி    யாருக்கு வெற்றி ?

Date 11 April 2025 News By:Maniventhan 

நாளை 12-4-2025 சனிக்கிழமை  நடைபெறவிருக்கும் பி.கே.ஆர்.கட்சியின் தொகுதி நிலையிலான தேர்தலில் கோலலங்காட் தொகுதியில் அதன் நடப்பு தலைவரும் கோலலங்காட் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான ஹரிதாஸ் இராமசாமி தலைவர் பதவியை தற்காத்து மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு  தொகுதியின் நடப்பு துணைத் தலைவரும், காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான டேவிட் சோங், செலாட் கிளாங் சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் முகமட் அஃபிக் பின் துனிமான், கோலலங்காட் மாவட்ட நகராண்மைக் கழக உறுப்பினர் தான் கெங் சியோங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் கோலலங்காட் தொகுதியில்  நான்கு முனை போட்டி நிலவுகிறது

துணைத் தலைவர் பதவிக்கு அ.ஞானசேகரன், சு.கணேசன், டத்தோ வீ.சுந்தர்ராஜூ, இர்வான் பின் இஸ்மாயில், ஷரிசாம் பின் ஒஸ்மான், அ.கருணாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

உதவித் தலைவர் பதவிக்கு கு.பன்னீர்செல்வம், டத்தோ அ.கோபிநாதன், முகமட் நஜிப் பின் முகமட் சாட் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

மகளிர் பகுதி தலைவர் பதவிக்கு ரா.கலா, ஜி.உமாநந்தினி, கு.நிர்மலாதேவி, பைசா பிந்தி அரிபின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கு ரிஃஹான் ரஹிமி பின் மாமுட், ரா.யோகபாரதி, சு.நவீன்ராஜ், அமீர் பித்ரி பின் அமிசோன், சு. சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை தலைவர் பதவியை தற்காத்து போட்டியிடும் ஹரிதாஸ் தமது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு இர்வான் பின் இஸ்மாயில், உதவித் தலைவர் பதவிக்கு கு.பன்னீர்செல்வம், மகளிர் பிரிவின் தலைவர் பதவிக்கு உமாநந்தினி, இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கு ரா.யோகபாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்தார்

.

பி.கே.ஆர் கட்சியின் தொகுதி நிலையிலான தேர்தல் ஏப்ரல்  11 தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் கோலலங்காட் தொகுதிக்கான தேர்தல் நாளை  12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் நான்கு வேட்பாளர்களில் ஒரே இந்திய வேட்பாளராக ஹரிதாஸ் திகழ்கிறார். மேலும் கோலலங்காட்டில் வாக்களிக்களிப்பவர்களில் அறுபது விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

www.myvelicham.com / face book / Tik Tok / You tube /