தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியம் தமிழ்மொழிக்கு அடித்தளம் அமைக்குமா?
Will the Board of Management of Tamil School lay the foundation for Tamil language? rm chandran
Date : 06 Feb 2025 News By: RM Chandran
தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களை பதிவதற்கு பெற்றோர்கள் முன் வர வில்லை என்று காலம் முழுவதும் நாம் கூறிவருகிறோம். அதற்கான தீர்வை யாருமே முன்னெடுத்து செல்ல வில்லை என்பதே உண்மை.
அண்மையில் கெடா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டத்தில் கலந்து கொண்ட, மை வெளிச்சம் டோங் ஜோங் அமைப்பு முன் வைத்த பல வற்றை கண்ணோட்டம் இட்டது. அவ்வகையான திட்டங்களை தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் நடை முறை படுத்தலாம்.
தாமான் குடியிருப்பு பகுதியில் இருந்து வெகு தூரத்தில் தமிழ்ப்பள்ளிகள் உள்ளது. முன்பு அவையெல்லாம் தோட்டங்களாக இருந்த போது வசதிகளை கொண்டிருந்தாலும் தற்போது நகர் மயமாக உருமாற்றம் கண்ட போது அங்கிருந்த இந்தியர்கள் வேறு இடங்களில் வீடுகளை வாங்கி குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள பிற மொழிப்பள்ளிகளுக்கு நடந்தே சென்று விடலாம்
.ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து பிள்ளைகள் பள்ளிக்கு போகும் போது பள்ளிப்பேரூந்து கட்டணம் கூடிவிடுகிறது.
ஒரு பிள்ளைக்கு 150 வெள்ளி என்றால் இரண்டு மூன்று பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினால் நிலை என்னவாகும்? அதன் கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியுமா? மித்ரா நிதியை கொண்டு இதனை சரி செய்ய பள்ளி மேலாளர் வாரியம் முயற்சி செய்யலாமே?
முறையான செயல் திட்டங்களை வகுத்து இவ்வகையான முன்னெடுப்பு முயற்சிகளை செய்யவதற்கு முன்வரலாம்.
இவற்றுடன் 'தமிழ்ப்பள்ளி எனது தேர்வு' எனும் சுலோக்கத்தை வலியுறுத்தி விளம்பரம் செய்யலாம்.
அவ்வாறு செய்தால் அள்ளி வழங்குவதற்கு நல்லுள்ளங்கள் அதிகமாகவே உள்ளனர். இவற்றுக்கெல்லாம் டோங் ஜோங் வந்து நமக்கு வழி காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டில் 22 லட்சம் தமிழ் உணர்வாளர்கள் உள்ளனர்.
'ஆலயத்திற்கு கிள்ளி கொடுங்கள் தமிழ்ப்பள்ளிக்கு அள்ளிக் கொடுங்கள்' என்ற வாக்கு பொய்த்து போய் விடாது என்பதை நினைவில் கொள்வோம்.
பள்ளி பேரூந்து, பள்ளி வாகனம் ஆகியற்றை வாங்கி தாமான்களில் குடியிருக்கும் இந்தியர்களை அணுகி இவற்றை செய்யலாம். எந்தவொரு கட்டணமும் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோரை கேட்டுக்கொள்ளலாம். நிச்சயமாக ஆதரவை வழங்குவதற்கு முன் வருவார்கள்.
இன்று தமிப்பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பல தியாகங்களை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளி மேலாளர் வாரியம் ஒன்றிணைந்து செயல் பட்டால் இங்கு தமிழ்ப்பள்ளி மூடும் நிலை, குறைவான மாணவர்கள் என்ற சிந்தாந்தம் ஒரு முடிவுக்கு வரும் என்பது உண்மை.
செய்தி ஆக்கம் :ஆர்.எம்.சந்திரன்.