ஜூன் 19 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் கலைப்பா?
Will the Selangor Assembly be dissolved on June 19?
ஷா ஆலம்,13 ஜூன் 2023
- மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில்
சிலாங்கூர் சட்டமன்றம் வரும் ஜூன் 19 அன்று கலைக்கப்படும் என்றத்
தகவலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.
அன்றைய நாளில் ஹஜிக் கடமையை நிறைவேற்றுவதற்கான
ஏற்பாடுகளில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கவனம்
செலுத்துவார் என்று அவர் சொன்னார்.
விஷயம் எதுவாக இருந்தாலும் நான் மேன்மை தங்கிய சுல்தானை
மதித்தாக வேண்டும். சுல்தானைச் சந்திப்பதன் மூலமே சட்டமன்றத்தைக்
கலைப்பதற்கான தேதியை நிர்ணயிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, ஜூன் 19ஆம் தேதி சட்டமன்றம் கலைப்பு என்பது சாத்தியமில்லாத ஒன்று, காரணம் அன்றைய தினம் மெக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை சுல்தான் மேற்கொண்டிருப்பார் என்றார் அவர்.
இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி
பேராக் அரங்கில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்களுக்குப்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய உரை நிகழ்த்தும்
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் அமிருடின் செய்தியாளர்களிடம்
இதனைத் தெரிவித்தார்.
சட்டமன்றத்தைக் கலைக்கும் விஷயத்தில் அவசரம் காட்ட
வேண்டியதில்லை எனத் தாம் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
நாம் அவசரப்பட்டாலும் எந்த பயனும் இல்லை, காரணம் நாம்
அட்டவணையை சரிபார்க்க வேண்டும் மற்றும் ஆட்சியாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
வழக்கறிஞரின் ஆலோசனை, சட்ட அம்சங்கள், மாநிலத்தின்
பாரம்பரிய நடைமுறைகள் ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள
வேண்டியுள்ளது என்றார் அவர்.
சட்டமன்றத்தை நாம் கலைக்காவிட்டாலும் வரும் ஜூன் 25ஆம் தேதி
சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்பட்டு விடும். இந்த விஷயத்தை
சுல்தானின் விவேகமான முடிவுக்கு விட்டு விடுகிறோம். சட்டமன்றத்தைக்
கலைப்பது சுல்தானுக்கு இது முதல் அனுபவம் அல்ல என அவர் மேலும்
கூறினார்.சட்டமன்றத்தை நாம் கலைக்காவிட்டாலும் வரும் ஜூன் 25ஆம் தேதி சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்பட்டு விடும். இந்த விஷயத்தை சுல்தானின் விவேகமான முடிவுக்கு விட்டு விடுகிறோம். சட்டமன்றத்தைக் கலைப்பது சுல்தானுக்கு இது முதல் அனுபவம் அல்ல என அவர் மேலும் கூறினார்.